ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்களுக்கான முக்கிய செய்தி! November 2025-ல் உங்களை பாதிக்கும் 14 மாற்றங்கள்! 🇩🇪
வெப்பமான October முடிந்து, குளிர் காற்று வீசத் தொடங்கும் November மாதம் வந்துவிட்டது! ஆனால் Germany இன்னும் “Christmas Mode”ல் போகவில்லை.
புதிய சட்டங்கள், விடுமுறைகள், மாற்றங்கள் எல்லாம் காத்திருக்கின்றன! இதோ, November-ல் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 14 முக்கிய விடயங்கள்.
01. புதிய குடியுரிமை சட்டம்
October 30 முதல், Germany-யில் குடியுரிமை பெற வேண்டுமெனில் 3 ஆண்டுகள் இல்லாமல் 5 ஆண்டுகள் வசிக்க வேண்டும்.
நல்ல செய்தி என்னவென்றால், இரட்டை குடியுரிமை (Dual Citizenship) இன்னும் அனுமதிக்கப்பட்டுள்ளது!
02. 2025 தேசிய நிதிநிலைத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது
November 2 முதல் ஜெர்மனியின் 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலைத் திட்டம் (Budget) அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அத்தியாவசியத் துறைகளுக்காக €500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய முதலீட்டுப் பகுதிகள்:
- பாடசாலைகள்
- மருத்துவமனைகள்
- சாலைகள் மற்றும் பாலங்கள்
- போன்ற முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகளில் இந்த நிதி முதலீடு செய்யப்படும்.
03. LinkedIn உங்கள் தரவுகளை AI பயிற்சிக்கு பயன்படுத்தும்
LinkedIn நிறுவனம் உங்கள் தனிப்பட்ட தரவுகளை அதன் செயற்கை நுண்ணறிவு (AI) முறைமைகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
- உங்கள் பெயர், வேலை விவரம், இருப்பிடம், திறமைகள் (Skills) போன்ற தகவல்கள் பயன்படுத்தப்படும்.
- இது November 3 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
உங்கள் தரவு AI பயிற்சிக்கு பயன்படுத்தப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதைத் தடுக்க LinkedIn அமைப்புகளில் மாற்றம் செய்யலாம்:
- செல்ல வேண்டிய இடம்: Settings → Data Privacy → Data for Generative AI Improvement.
- இந்த விருப்பத்திற்குச் சென்று, நீங்கள் விலகிக் கொள்ளலாம் (Opt-out).
04. Free-lance Midwives க்கு சம்பள உயர்வு
புதிய ஒப்பந்தம் படி, சுயாதீனமாக பணிபுரியும் Midwives-க்கு (மருத்துவச்சிகளுக்கு) குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு €74 (74 Euro) ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
05. November 11 – Cologne Carnival தொடக்கம்!
கோலோன் (Cologne) நகரின் கார்னிவல் விழா (Carnival) 70,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நடந்து முடிந்தது.
இந்த கொண்டாட்டத்தில் நகைச்சுவை, வண்ணமயமான ஆடைகள், உற்சாகமான இசை மற்றும் கொண்டாட்டம் ஆகியவை நிரம்பி வழிந்தன.
06. St. Martin’s Day – November 11
குழந்தைகள் விளக்குகள் ஏந்தி, பாடல்கள் பாடி, வீட்டுக்கு வீடு சுற்றும் பாரம்பரியம்!
இரவில் பாரம்பரிய உணவு — வறுத்த வாத்து, குண்டு அரிசி, Red cabbage
07. EU Gigabit Infrastructure Act நடைமுறைக்கு வந்துள்ளது
November 12 முதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) அதிவேக இணைய இணைப்புகளை (Fast Internet Connections) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்தச் சட்டம், ஐரோப்பா முழுவதும் நவீன Gigabit Fibre Networks-ஐ வேகமாக நிறுவுவதற்கும், அதன் மூலம் இணைய அணுகலை மேம்படுத்துவதற்கும் உதவும்.
08. Ryanair விமானங்களில் Paper Boarding Passes ரத்து
November 12 முதல், Ryanair விமானங்களில் காகிதத்தில் அச்சிடப்பட்ட போர்டிங் பாஸ்கள் (Paper Boarding Passes) செல்லுபடியாகாது.
இனிமேல், Mobile Boarding Pass மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இது Smart Phone இல்லாத பயணிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்தலாம்.
09. பழைய TV-களில் SD சேனல்கள் நிறுத்தம்
November 18 முதல், ZDF, ARD, 3sat, KiKA போன்ற சேனல்களின் SD (Standard Definition) ஒளிபரப்புகள் நிறுத்தப்படுகின்றன.
இனிமேல், இந்தச் சேனல்கள் HD (High Definition) தரத்தில் மட்டுமே ஒளிபரப்பப்படும்.
மிக பழைய தொலைக்காட்சிகளை பயன்படுத்துபவர்கள் அல்லது HD Receiver இல்லாதவர்கள் இந்தச் சேனல்களைப் பார்க்க முடியாமல் போகலாம்.
10. “Buy Now, Pay Later” திட்டங்களுக்குக் கடுமையான விதிமுறைகள்
November 20 முதல், BNPL திட்டங்கள் மூலம் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் ‘Credit Check’ (கடன் தகுதிச் சோதனை) செய்ய வேண்டும்.
BNPL சேவையைப் பயன்படுத்துவோர் இனி கடன் தகுதிச் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்த புதிய விதிமுறைகள், வாடிக்கையாளர்கள் அதிகப்படியான கடன் சுமையில் சிக்குவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
11. November 19 – Saxony மாநில விடுமுறை (Buß- und Bettag)
ஜெர்மனியில் November 19 ஆம் திகதி ‘பாவமன்னிப்பு மற்றும் பிரார்த்தனை தினம்’ (Buß- und Bettag) அனுசரிக்கப்படுவதையொட்டி:
Saxony மாநிலத்தில் பணிபுரிபவர்களுக்கு இது மாநில விடுமுறையாகும்.
Bavaria மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் அன்று ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது.

12. Car Insurance மாற்ற இறுதி நாள் – November 30
உங்கள் Car Insurance Policy-ஐ மாற்றுவதற்கான இறுதி நாள் November 30 ஆகும்.
உங்களுக்கு 2026 ஆம் ஆண்டு January 1 ஆம் திகதி முதல் புதிய காப்பீடு தேவைப்பட்டால், நீங்கள் உங்கள் பழைய காப்பீட்டு ஒப்பந்தத்தை November 30 ஆம் திகதிக்குள் ரத்து செய்ய வேண்டும்.
13. KulturPass திட்டம் நிறுத்தப்படுகிறது!
இந்தத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்த November 30 தான் இறுதி நாளாகும்.
November 30-க்குள் செய்யப்பட்ட வாங்குதல்களுக்குரிய பணம் செலுத்தியதற்கான சான்றுகளை(Vouchers for the orders) December 15 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
14. Christmas Markets ஆரம்பமாகியுள்ளன!
Cologne, Munich மற்றும் Hanover ஆகிய நகரங்களில் உள்ள சந்தைகள் November 20 முதல் 24 ஆம் திகதிக்கு இடையில் திறக்கப்படும்.
Berlin-ல், இந்த விழாக்கள் November 30 (Advent Day) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன.
November in Germany brings a mix of important policy updates, digital changes, festive traditions, and practical deadlines that Tamils living in Germany should not miss. From new citizenship rules and the rollout of the 2025 national financial plan to LinkedIn’s AI data usage, Ryanair’s paperless boarding, BNPL credit checks, and the end of SD TV channels, this month is filled with changes that can impact everyday life. With cultural celebrations, public holidays, and Christmas markets adding colour to the season, November becomes a month of preparation and excitement. Read the full article to learn how these updates may influence the daily lives of Tamils living in Germany.
தமிழ் வெளிநாட்டவர்கள் கவனத்திற்கு: இந்த மாதம் உங்களுக்கு மிகவும் தாக்கம் செய்யும் மாற்றம் எது?
கருத்தில் சொல்லுங்கள் – உங்கள் அனுபவத்தையும் பகிருங்கள்!


