Australia வில் வாடகை சொத்துக்களுக்கு விண்ணப்பித்தல் தொடர்பான விரிவான வழிகாட்டி
Australia வில் வாடகை சொத்துக்களுக்கு விண்ணப்பித்தல் என்பது சர்வதேச மாணவர்கள் மற்றும் Backpackers க்கு மிகவும் முக்கியமான விஷயமாகும். உங்கள் வீட்டு தேடலைத் தொடங்குவதற்கு முன், Australia வில் வாடகை சொத்துக்களுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை மற்றும் வாடகை ஒப்பந்தத்தின் கருத்து ஆகியவற்றைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த பதிவில், சர்வதேச மாணவர்கள் மற்றும் Backpackers க்கு குறிப்பாக வடிவமைக்கப்பட்ட Australia வில் வாடகை சொத்துக்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான விரிவான வழிகாட்டியை வழங்குவோம்.
வாடகை ஒப்பந்தம் என்பது …
ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும்போது, வீட்டின் உரிமையாளருக்கும் வாடகைக்கு எடுப்பவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்படும் இது வாடகை ஒப்பந்தம் ஆகும்.
வாடகை சொத்துக்களுக்கு எப்படி விண்ணப்பித்தல்?
மாணவர் விடுதிகளிலிருந்து(Apartments) வாடகை சொத்துக்களைப் பெற பின்பற்ற வேண்டிய படிமுறைகள்
Step 1 : விண்ணப்ப பக்கத்தில், மாணவர்கள் பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் Email Address போன்ற அடிப்படை தகவல்களை வழங்க வேண்டும்.
Step 2 : விண்ணப்பத்தை விடுதி(Apartment) ஏற்றுக்கொண்டால், மாணவர்கள் தபால் மூலம் Offer Letter ஐ பெறுவார்கள். அறையை ஒதுக்கீடு செய்ய, நீங்கள் உங்கள் Passport மற்றும் School CoE, செல்லுபடியாகும் விசா மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் 2 வாரங்களுக்கான வாடகையை செலுத்த வேண்டும்.
Step 3 : விடுதி பொருட்களை உறுதிப்படுத்திய பிறகு, அவர்கள் வெற்றிகரமாக Apartment வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள் என்று மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும். Australia வந்திறங்கிய பிறகு, மாணவர்கள் தங்கள் Passport மற்றும் School CoE ஆகியவற்றை Reception Desk ல் சரிபார்க்க வேண்டும், 4 வாரங்களுக்கான வாடகையை பிணையமாக செலுத்தவும் வேண்டும். நீங்கள் Agency மூலம் வாடகைக்கு எடுத்தால், சில தனிப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதார ஆவணங்களும் தேவைப்படும்.
உள்ளூர் சந்தையிலிருந்து (Local Market) வாடகை சொத்துக்களைப் பெற பின்பற்ற வேண்டிய படிமுறைகள்
Step 1 : மாணவர்கள் வாடகை சொத்துக்களை எங்கே விண்ணப்பிக்கலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் வாடகை சொத்துக்களைப் பெற சில சேனல்கள் இங்கே உள்ளன.
Step 2 : மாணவர்கள் தங்கள் சொந்த தனிப்பட்ட சூழ்நிலைகளின் அடிப்படையில் விண்ணப்பிக்க விரும்பும் வீட்டின் விவரங்களை தீர்மானிக்க வேண்டும்.
Step 3 : மாணவர்கள் தங்களுடைய வாடகைதாரர் விண்ணப்பத்தை தயார் செய்ய வேண்டும்.
- தனிப்பட்ட விவரங்கள்: பெயர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவை.
- About Me : இந்த பகுதி ஒரு Cover Letter ஆகும். மாணவர்கள் தங்கள் நிலைமையை வீட்டின் உரிமையாளருக்கு அறிமுகப்படுத்துதல். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் நம்பகமான வாடகைதாரர் என்பதை வீட்டு உரிமையாளருக்குக் காட்டுவதாகும்.
- Address History : மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளின் வசிப்பிட வரலாற்றை இந்த Column ல் நிரப்ப வேண்டும்.
- வேலை: உங்களுக்கு வேலை இருந்தால், உங்கள் வேலை விவரங்களை இங்கே நிரப்பலாம். ஆனால் சர்வதேச மாணவர்கள், வேலை விவரங்களை நிரப்ப வேண்டிய அவசியமில்லை.
- வருமானம்: மாணவர்கள் தங்களுடைய பெற்றோர் அனுப்பும் பணம் சென்றடைந்ததை நிரூபிக்கும் screenshot ஐ பதிவேற்றலாம்.
- அடையாள ஆவணம்: Passport, Driver’s License, மற்றும் Insurance Card போன்ற உங்கள் அடையாளத்துடன் கூடிய சில ஆவணங்களை பதிவு செய்ய இந்த Column பயன்படுத்தப்படுகிறது.
- அவசர தொடர்பு / Emergency contact : மாணவர்கள் தங்களின் நம்பகமான குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரின் தொடர்பு விவரங்களை இங்கே நிரப்ப வேண்டும்.
Step 4 : மாணவர்கள் விரும்பும் வீடுகளைக் கண்டறிந்த பிறகு, உரிமையாளர்/முகவர் மூலம் ஆய்வு நியமனத்தை மேற்கொள்ளலாம். பெரும்பாலான முகவர்கள் வீடுகளை ஒன்றாகப் பார்வையிட விரும்புவார்கள்.
Step 5 : மாணவர்கள் Apartment ஐப் பார்த்து திருப்தியடைந்த பின்னர் , வாடகை வலைத்தளத்தில் வாடகை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். நீங்கள் Agency மூலம் வாடகைக்கு எடுத்தால், மின்னஞ்சல் அல்லது வேறு ஏதேனும் வழியில் விண்ணப்பிக்கலாம்.
Step 6 : மாணவர்கள் வீட்டு உரிமையாளர்/முகவரிடம் வாடகை விவரங்களைப் பரிமாறிக்கொண்ட பிறகு, வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, முன்னர் குறிப்பிட்ட படி, 4 வார வைப்புத்தொகை மற்றும் 2 வார வாடகை செலுத்த வேண்டும். (4 Week’s Bond & 2 Week’s Rental)
Step 7 : மாணவர்கள் இறுதியாக வீட்டைப் பார்வையிட்டு, எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இது சிறந்த தொடக்கத்திற்கான இறுதி படியாகும்.
கவனத்திற்க்கு
- அனைத்து மின்சாதனங்களும் விளக்குகளும் சரியாக வேலை செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- வீட்டில் உள்ள தளபாடங்களின் அளவு மற்றும் அவை சேதமடைந்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
- கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பாதுகாப்பாக மூடப்பட முடியுமா என்பதை கவனிக்க வேண்டும்.
- சுவர்கள், தளங்கள் மற்றும் முன் பகுதிகளில் சேதங்கள் அல்லது கறைகள் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
- Carpets மற்றும் Wallpapers களில் ஏற்படும் சேதம் மற்றும் கறைகளுக்கு கவனம் செலுத்துங்கள் (அவற்றை மாற்றுவது அல்லது சரி செய்வது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்)

வாடகை சந்தையின் நிலை
2024 April 10 நிலவரப்படி, கடந்த ஆண்டை விட வீட்டு விலைகள் 9.4% அதிகரித்துள்ளன என்று CoreLogic நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதிகளவான சர்வதேச மாணவர்கள் Australia வில் படிக்க வருவதால், பொருத்தமான வாடகை வீடு கிடைப்பது இன்னும் சவாலாக உள்ளது.
வீடுகள் வெவ்வேறு உரிமையாளர் அடிப்படையில் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன:
Chinese Landlord
பொதுவாக, சீன வீட்டு உரிமையாளர்கள் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் காலத்தைப் பொறுத்து வீடுகளை வாடகைக்கு விடுகிறார்கள். ஆண்டுக்கு இரண்டு முறை பாடசாலை தொடங்குகிறது:
முதல் Semester February யில் தொடங்கி June மாதத்தில் முடிவடைகிறது; இரண்டாவது Semester July யில் தொடங்கி November முடிகிறது.
February மற்றும் July. அதனால், January, February, June, July மற்றும் December மாதங்களில் வீடுகளை வாடகைக்கு விடுவது அதிகமாக இருக்கும்.
பொதுவாக, ஒரு குடும்பம் வீட்டை விட்டு வெளியேறும்போது, மற்றொரு குடும்பம் வந்து குடியேறுகிறது. சீன வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்கள் ஒரு வருடம் வீடு வாடகைக்கு எடுக்க விரும்புவார்கள். அரை வருடம் மட்டும் வாடகைக்கு எடுப்பது அரிதாகவே நடக்கும்.
Local Landlord
Local Market ல் அதிகளவான வீடுகள் உள்ளன, இதற்காக பல Local Websites மற்றும் Apps களைப் பயன்படுத்தலாம். ஆஸ்திரேலியாவில் வீடு வாடகைக்கு எடுப்பதற்கான நல்ல வசதிகள் இருக்கின்றன. வீடு பார்ப்பது, வாடகை ஒப்பந்த காலம், வீட்டை விட்டு வெளியேறும் போது செய்ய வேண்டியவை போன்ற விஷயங்கள் எல்லாமே சிறந்த முறையில் செயல்படுகின்றன.
Scale : Local Market ல் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கிடைக்கும். இதற்காக பல Local Websites களைப் பயன்படுத்தலாம்.
Trend : உள்ளூர் வீடுகள் வெளிநாட்டு மாணவர்களின் வருகையைப் பொறுத்து வாடகைக்கு விடப்படுவதில்லை. அவை உள்ளூர் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப வாடகைக்கு விடப்படுகின்றன.
Preference : Christmas காலத்திற்குப் பிறகு Australia வில் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால், January மாதத்தில் வீடுகள் கிடைப்பது எளிதாக இருக்கும். (மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறும் காலங்களான June மற்றும் December மாதங்களில் வீடுகள் அதிகமாகக் கிடைக்கும்.)
Bill : உள்ளூர் சந்தையில் வீடுகள் வாடகைக்கு எடுப்பது எளிதானது. வீடு பார்வையிடல், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல், பராமரிப்பு மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்ய வேண்டிய பொறுப்புகள் போன்ற விஷயங்கள் தெளிவாக இருக்கும். ஆனால், பெரும்பாலான வீடுகளில் தளபாடங்கள் இருக்காது. மின்சாரம், நீர் போன்ற செலவுகளையும் நீங்களே செலுத்த வேண்டும்.
Transportation: அந்த வீடு Bus Stop அல்லது Supermarket ன் அருகில் இல்லாமலும் இருக்கலாம்.
Students Apartments
மாணவர் விடுதிகளும் (Student Apartments) மாணவர்களின் வருகையைப் பொறுத்து வாடகைக்கு விடப்படுகின்றன. ஒவ்வொரு விடுதியும் வெவ்வேறு நேரங்களில் திறக்கப்படுவதால், விடுதி திறக்கப்படுவதற்கு முன்பு சில சலுகை விலைகள் அல்லது Package Sales இருக்கும்.
விலை குறைப்பு: சிறப்பு விலைகள் கண்டிப்பாக Semester தொடங்குவதற்கு முன்பாகவே வழங்கப்படாது, ஆனால் வீடுகள் நிரம்பும் நேரத்திற்கு முன்பாக மட்டுமே இந்த சலுகைகள் வழங்கப்படும்.
வசதிகள்: School Apartments Rooms ஒரே மாதிரியாக இருக்கும் மற்றும் பொதுவான இடங்கள், வசதிகளைக் கொண்டிருக்கும், ஆனால் வெவ்வேறு பகுதிகளில் உள்ள Apartments வெவ்வேறு வகையான அறைகள் மற்றும் அமைப்புகளைக் கொண்டிருக்கும்.
Bill : அனைத்து School Apartments களிலும் தண்ணீர், மின்சாரம், இணையம் போன்ற செலவுகள் வாடகையில் சேர்த்து இருக்கும்.
Australia வில் பல்கலைக்கழக வளாகத்தில் School Apartments களை வழங்கும் பல்கலைக்கழகங்கள்:
The University of Sydney
- Queen Mary Building
- Abercrombie Student Accommodation
- The Regiment Student Accommodation
- Darlington House
The University of New South Wales
- UNSW Village
- UNSW College
- University Terraces
The University of Melbourne
The University of Queensland
Australian National University
Macquarie University
For international students and backpackers in Australia, understanding how to apply for a rental property and the concept of a lease is crucial before starting your housing search. This guide offers essential information on the rental process, providing a step-by-step approach to help you navigate securing accommodation in Australia.



