Australian CV வழிகாட்டுதல்கள் மற்றும் வடிவமைப்பு அம்சங்கள்
Australia வில் வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வழிகாட்டி உங்களுக்கு சரியான Australian CV எழுத தேவையான குறிப்புகள், உதாரணங்கள் மற்றும் வடிவமைப்பு தேவைகள் பற்றி விளக்குகிறது. இன்றே உங்கள் VisualCV ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள்!
Australia CV தேவைகள்
பல நாடுகளைப் போலவே, Australia-வும் தனக்கென தனி வேலைப் பண்பாட்டையும், CV எழுதும் முறைகளுக்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது. Australia-வில் வேலை தேடும்போது, உங்கள் CV, Australia-வின் CV எழுதும் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். மேலும், அது Australia வேலை நியமனதாரர்கள் மற்றும் வேலை வழங்குநர்களை கவரும் வகையில் அமைய வேண்டும்.
Australia-வில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான CV Tips மற்றும் விதிமுறைகள்
- பொதுவாக, அனுபவம் வாய்ந்த தொழில்முறை நிபுணர்கள் Australia-வில் 3 அல்லது4 பக்க CV கொடுக்க வேண்டும். நீங்கள் இப்போதுதான் பட்டம் பெற்றவராகவோ அல்லது வேலைப் பழக்கத்திற்கு புதியவராகவோ இருந்தால், 2 பக்கங்கள் போதும். ஆனால் உங்கள் வேலை வரலாறு 3 அல்லது 4பக்கங்களுக்கு போதுமான அளவு வலுவானதாக இருந்தால், உங்கள் CV அதற்கேற்ப விரிவடைய வேண்டும்.
- Australia-வில் ‘Resume’ மற்றும் ‘CV’ என்ற சொற்கள் ஒரே பொருளைக் குறிக்கின்றன. இரண்டும் ஒரே ஆவணத்தைக் குறிக்கின்றன. இருப்பினும், ‘Resume’ என்ற சொல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சந்தேகம் இருந்தால், ‘Resume’ என்ற சொல்லைப் பயன்படுத்தவும்.
- உங்கள் CV ஐ எழுதும் போது, சரியான Australia ஆங்கிலத்தைப் பயன்படுத்தவும். ‘colour’ மற்றும் ‘labour’ போன்ற சொற்களில் ‘u’ ஐச் சேர்க்க மறக்காதீர்கள். (Australia-வில் ‘color’ மற்றும் ‘labor’ என்று எழுதுவது பிழையான சொற் பதமாகும்).
Australia CV Format, Order and Layout:
Australia CV Photo:
பொதுவாக, உங்கள் Australia CV-யில் புகைப்படம் சேர்க்காமல் இருப்பது நல்லது. நீங்கள் உங்கள் CV ஐ Online-ல் பதிவேற்ற விரும்பினால் அல்லது பார்வை கலைகள் மிகவும் மதிப்புடைய படைப்புத் துறையில் இருந்தால், ஒரு படம் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம் புகைப்படத்தை எதிர்பார்க்கவில்லை என்றால், அது உங்கள் வாய்ப்புகளை பாதிக்கலாம். Australia HR மற்றும் நியமன ஆலோசகர் Karalyn Brown கூறுகையில், “உங்கள் புகைப்படத்தை உங்கள்CV-யில் வைக்கும் போது, நீங்கள் ஒரு நியமனதாரரை அவர்களின் சொந்த முன்விளைவுகளுடன், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கவும், நீங்கள் அடைந்திருக்கக்கூடியதை கருத்தில் கொள்ளவும் அழைக்கிறீர்கள்.”
Australia CV Personal Information:
தனிப்பட்ட தகவல்: உங்கள் தொடர்பு தகவல் மட்டுமே Australia CV-யில் தேவை. இது உங்கள் பெயர், முகவரி (முழு முகவரி தேவையில்லை, நகரம் மற்றும் மாநிலம் போதும்), தொலைபேசி எண், மற்றும் மின்னஞ்சல் முகவரி (உங்கள் பெயரை ஒட்டிய முகவரியாக இருக்க வேண்டும் – Keep it Professional) உதாரணமாக: [email protected]).
வயது, திருமண நிலை, குழந்தைகளின் எண்ணிக்கை போன்ற வேறு தனிப்பட்ட தகவல்கள் உங்கள் அனுபவம் அல்லது வேலை திறனுடன் தொடர்புடையவை அல்ல, எனவே அவற்றைச் சேர்க்க வேண்டாம்.
Australia CV Objective:
உங்கள் CV-யின் தொடக்கத்தில் ஒரு தொழில் இலக்கைச் சேர்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் கட்டாயமில்லை. இதை தொழில் சுயவிவரம் அல்லது சுருக்கம் என்றும் அழைக்கலாம். உங்கள் இலக்கு (Objective), உங்களுக்கும் உங்கள் CV-க்கும் ஒரு சுருக்கமான அறிமுகத்தை கொடுக்கும். இது HR/வேலை வழங்குநருக்கு தொடர்ந்து படிக்க ஒரு காரணத்தைக் கொடுக்க வேண்டும்.
தொழில் இலக்கு(Career Objective) இல்லாத CV தலைப்பில்லாத திரைப்படம் போன்றது.
உங்கள் இலக்கு சுருக்கமாக இருக்க வேண்டும் – மூன்று முதல் ஐந்து வரிகள் – மேலும் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு நீங்கள் கொண்டு வரும் அனுபவத்தின் மிக தெளிவான விளக்கத்தையும், உங்கள் இலக்குகள் மற்றும் லட்சியங்கள் என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
Australia CV Work Experience:
உங்கள் வேலை அனுபவத்தை நேரமாறு வரிசையில், உங்கள் வேலை அனுபவத்தை சமீபத்தில் இருந்த வேலையிலிருந்து தொடங்கி பழைய வேலை வரை வரிசைப்படுத்தவும். ஒவ்வொரு வேலையின் தொடக்க திகதியையும் முடிவு திகதியையும் குறிப்பிடவும்.
வேலை இடைவெளிகளுக்கான காரணங்களையும் குறிப்பிடவும்.
ஒவ்வொரு பதவியிலும் உங்கள் பொறுப்புகள் மற்றும் சாதனைகள் உள்ளிட்ட உங்கள் வேலை அனுபவத்தின் விவரங்களை வழங்கவும். எங்கு சாத்தியமோ அங்கெல்லாம் உங்கள் வேலை அனுபவத்தை விபரிக்க கூடிய தகவல்களைப் பயன்படுத்தி, ‘வழங்கப்பட்டது’, ‘பயிற்சி அளிக்கப்பட்டது’ மற்றும் ‘பதவி உயர்வு பெற்றது’ (‘Delivered’, ‘Trained’, ‘Promoted’)போன்ற வலுவான வினைச்சொற்களைப் பயன்படுத்தவும்.
Australian CV Education:
உங்கள் தொடர்புடைய Degrees மற்றும் Diplomas ஐ நேரமாறு வரிசையில், திகதிகளுடன் பட்டியலிடவும். நிறுவனத்தின் பெயர், உங்கள் முக்கிய துறை, துணை துறை, நிபுணத்துவம் மற்றும் பெற்ற விருதுகளை குறிப்பிடவும்.

Australia CV-கான மற்ற பிரிவுகள்
மேலே உள்ள பிரிவுகளில் உள்ளடக்கப்படாத தகவல்களை நீங்கள் காட்ட விரும்பினால், உங்கள் CV-யில் ஒரு தனிப் பிரிவில் அவற்றைச் சேர்க்கலாம். மற்ற பிரிவுகள் பின்வருமாறு:
Skills: உங்களால் செய்யக்கூடிய திறமையான விடயங்கள் திறன்களின் பட்டியலில் சேர்ப்பது பொதுவானது. உங்கள் அனுபவத்தை அதிகமாக ஆராய்வதை விட, நீங்கள் எதில் சிறந்து விளங்குகிறீர்கள் என்பதை விரைவாக, ஒரு பார்வையில் காண இந்தப் பட்டியல் உதவுகிறது.
உதாரணமாக:
- கணினி: Microsoft, Photoshop, Illustrator
- மொழிகள்: தமிழ், ஆங்கிலம், சிங்களம்
- தொடர்பு: வாடிக்கையாளர்களை கையாளுதல், குழுவாக வேலை செய்தல்
Volunteer Experience: தன்னார்வப் பணிகளை உங்கள் CV-யில் குறிப்பிட வேண்டும். நீங்கள் விரும்பினால், உங்கள் வேலை வரலாற்றுப் பிரிவில் தன்னார்வப் பணிகளைச் சேர்க்கலாம், ஆனால் தன்னார்வப் பதவி என்பதை குறிப்பிட மறக்காதீர்கள்.
மொழிகள்: நீங்கள் பல மொழிகளில் சரளமாக இருந்தால், அவற்றைக் குறிப்பிடலாம்.
References (அனுபவ சான்றாளர்கள்): வேலை வழங்குநர் கேட்டால் “அனுபவ சான்றாளர்களின் விவரங்களை தருகிறேன்” (‘References Available on Request’) என்று CV-யில் எழுதினால் போதும். வேலை வழங்குநர் கேட்கும் வரை அனுபவ சான்றாளர்களின் விவரங்களை குறிப்பிட தேவையில்லை.
01. Australia-வில் ‘CV’ அல்லது ‘Resume’ எது பயன்படுத்தப்படுகிறது?
Australia-வில் CV மற்றும் Resume இரண்டு சொற்களும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, உங்கள் விருப்பப்படி எந்த சொல்லையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
02. Australia CV-யில் முகவரியை சேர்க்க வேண்டுமா?
உங்கள் Australia CV-யில் நீங்கள் வசிக்கும் இடத்தை எழுதலாம். ஆனால் முழு முகவரியையும் எழுத வேண்டாம். தெரு பெயரை விட்டுவிட்டு, நகரம் மற்றும் மாநிலம் மட்டும் எழுதினால் போதும்.
03. நல்ல Australia CV எப்படி எழுதுவது?
- Australia CV எழுதும்போது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், உங்கள் CV ஒரு பக்கத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும்.
- நீங்கள் Australia ஆங்கிலத்தைப் பின்பற்ற வேண்டும்.
- புகைப்படம் சேர்க்க வேண்டாம்.
- மற்றும் நீங்கள் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு வேலைக்கும் உங்கள் CV-யைத் தனித்தனியாகத் தயாரிக்க வேண்டும்.
நன்கு எழுதப்பட்ட மற்றும் சரியாக வடிவமைக்கப்பட்ட CV உங்கள் வேலை தேடலுக்கு மிக முக்கியம். Australia-வில் வேலை தேடும்போது, Australian CV எழுதும் வடிவத்திற்கு ஏற்ப உங்கள் CV-யை மாற்றிக்கொள்வது முக்கியமாகும். ஒரு மோசமான CV உங்களை Australia-வில் ஒரு சிறந்த தொழிலை எடுப்பதை தடுத்திடும். அதனால் கவனமாக CV எழுதுங்கள்!



