Introducing Stricter Entry Regulations
Canada 10 ஆண்டு Tourist Visa ரத்து செய்து, விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.
Canada தனது Tourist Visa கொள்கையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு 10 வருட காலத்திற்குள் பல முறை பயணம் செய்யும் விசாவை வழங்கும் நடைமுறையை கைவிட்டுள்ளது.
திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, இனிமேல் விசா வகை மற்றும் செல்லுபடியாகும் காலத்தை நிர்ணயிப்பதில் Canada குடியேற்ற அதிகாரிகளுக்கு(Immigration Officers) அதிக அதிகாரம் கொடுத்துள்ளனர். இதன் பொருள், அடிக்கடி Canada க்கு பயணம் செய்பவர்களுக்கு 10 வருடத்துக்கு செல்லுபடியாகும் விசா இனி கிடைக்காது.
இனி Canada க்கு விசா கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஒவ்வொரு நபரையும் தனித்தனியாக மதிப்பிட்டு விசா வழங்கப்படும். முன்பு 10 வருடத்துக்கு செல்லுபடியாகும் விசா கொடுப்பது வழக்கமாக இருந்தாலும், இனி அதிகாரிகளுக்கு விசாவின் கால அளவை தீர்மானிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. Canada ல் வீட்டு வாடகைகளும் வாழ்க்கை செலவு அதிகரித்திருப்பதால், Canada தனது தற்காலிக குடியேற்ற அணுகுமுறையில் மாற்றத்தை (IRCC) ஏற்படுத்தியுள்ளது.
அடிக்கடி Canada-க்கு பயணம் செய்பவர்கள் புதிய கொள்கையின் கீழ் அதிக செலவுகளை எதிர்கொள்ளலாம், ஏனெனில் அவர்கள் அடிக்கடி விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். அதனால கனடா அரசாங்கம், கனடாவுக்கு தற்காலிகமாக வந்து குடியிருப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க எண்ணுகிறது. இந்த நடவடிக்கைகள் குடியேற்ற அளவுகளை நிர்வகிக்க உதவும் என்று அரசாங்கம் நம்புகிறது.
“Guidance has been updated to indicate that multiple-entry visas issued to maximum validity are no longer considered to be the standard document. Officers may exercise their judgment in deciding whether to issue a single or multiple-entry visa and in determining the validity period,” said IRCC.



