UK 2026 குடியுரிமை மற்றும் Visa விதிமுறைகளில் முக்கிய மாற்றங்கள்

Uk-யில் வசிக்கும் மற்றும் அங்கு குடியேறத் திட்டமிடும் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு ஒரு முக்கியமான காலகட்டம் இது. அந்நாட்டு அரசாங்கம் 2026-ஆம் ஆண்டிற்கான குடிவரவு விதிகளில் (Immigration Rules) அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் வேலைவாய்ப்பு, Family Visa மற்றும் நிரந்தரக் குடியுரிமை (ILR) பெறுவதில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது குறித்த பொதுவான விழிப்புணர்வைப் பெறுவது அவசியம்.

ஆங்கில மொழித் திறன் தகுதி உயர்வு (English Language Requirement)

புதிய விதிகளின் படி, Skilled Worker Visa மற்றும் பிற முக்கிய Visa பிரிவுகளில் விண்ணப்பிப்பவர்களுக்கான ஆங்கில மொழித் திறன் தகுதி உயர்த்தப்பட்டுள்ளது.

  • இதுவரை Intermediate நிலையில் இருந்த தகுதி, இனிமேல் A Level standard  நிலைக்கு உயர்த்தப்படுகிறது.
  • இது குறிப்பாகப் புதிய விண்ணப்பதாரர்களுக்கும், சில குறிப்பிட்ட Visa-க்களில் இருந்து அடுத்த நிலைக்கு மாறுபவர்களுக்கும் பொருந்தும்.

வருமான அளவு வரம்பு மற்றும் சம்பளக் கொள்கை (Salary Thresholds)

Uk-யில் பணிபுரிய விரும்புவோருக்கான குறைந்தபட்ச ஆண்டு சம்பள வரம்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

  • வேலைவாய்ப்பு Visa-க்கான குறைந்தபட்ச சம்பள  அளவு சுமார் 41,700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியம், ஒவ்வொரு மாதமும் இந்த நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் (Salary Compliance). இது குறித்த கண்காணிப்பு இனி தீவிரமாக்கப்படும்.

நிரந்தரக் குடியுரிமைக்கான புதிய நிபந்தனைகள்
(Earned Settlement)

நிரந்தரக் குடியுரிமை (Indefinite Leave to Remain – ILR) பெறுவதற்கான நடைமுறைகள் இனி ‘தானாகக் கிடைக்கும்’ ஒன்றாக இருக்காது.

  • தகுதியான கால அளவு (Qualifying Period) பல பிரிவினருக்கு 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீடிக்கப்பட வாய்ப்புள்ளது.
  • ‘சம்பாதித்த குடியுரிமை’ (Earned Settlement) எனும் புதிய முறை மூலம் விண்ணப்பதாரரின் வரி செலுத்தும் விபரம், சமூகப் பங்களிப்பு மற்றும் குற்றப் பின்னணி இல்லாத தன்மை போன்றவை நுணுக்கமாகக் கவனிக்கப்படும்.

Electronic Travel அனுமதி மற்றும் Digital முறைகள் (ETA & Visas)

Uk-யில் எல்லைக் கட்டுப்பாடுகள் முழுமையாக Digital மயமாக்கப்படுகின்றன.

  • 2026-ஆம் ஆண்டிற்குள் Physical Cards (BRP) மற்றும் Passport Stickers முழுமையாக நீக்கப்பட்டு,Visas முறை அமுலுக்கு வரும்.
  • குறுகிய காலப் பயணங்களுக்கு வருபவர்கள் முன்கூட்டியே மின்னணு பயண அனுமதி (Electronic Travel Authorisation – ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Student Visa மற்றும் Family Visa மாற்றங்கள்

  • Student Visa-வில் வருபவர்கள் தங்கள் குடும்பத்தினரை (Dependants) அழைத்து வருவதற்கான கட்டுப்பாடுகள் மேலும் சில பிரிவினருக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
  • பட்டப்படிப்பு முடித்தவர்கள் தங்கும் கால அளவிலும் சில மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. (Graduate Visa)

முடிவுரை 

இந்த மாற்றங்கள் UK  தமிழ் சமூகத்தின் நிதி மற்றும் சட்ட ரீதியான திட்டமிடல்களில் மாற்றங்களைக் கோருகின்றன. நீங்கள் ஏற்கனவே UK-ல் வசிப்பவர் என்றால், உங்கள் Visa காலாவதியாகும் முன்பே புதிய விதிகளைச் சரிபார்ப்பது நல்லது. புதிய விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்திக் கொள்வதும், ஊதிய நிபந்தனைகளை உறுதி செய்வதும் அவசியம்.


இந்தக் கட்டுரை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. சட்டபூர்வமான அல்லது நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது நிபுணர்களை அணுகுமாறு வாசகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The UK Citizenship and 2026 immigration rule changes introduce stricter requirements across key visa categories. English language standards have been raised, and the minimum salary threshold for Skilled Worker visas has increased. Permanent residency (ILR), a key step toward UK Citizenship, will now follow an “Earned Settlement” model with tighter eligibility checks. The system is also moving fully digital, with eVisas and mandatory Electronic Travel Authorisation (ETA). These updates mean migrants planning to move to or settle in the UK must review their qualifications and prepare in advance.