நெதர்லாந்தில் முகாம் செய்தல் (Camping Crazy): 

ஐரோப்பிய ஒன்றியத்தில்  தனிநபர்  ஒருவருக்கு இரண்டாவது அதிக முகாம்  தளங்கள்  நெதர்லாந்தில் உள்ளன!

மழைக்காலம்  என்றாலும் வெயில் காலம்  என்றாலும், முகாம்  செல்வதை  டச்சு மக்கள்  பெரிதும் விரும்புவதற்கு பெயர் பெற்றவர்கள், ஆனால் புதிய அறிக்கை ஒன்று இதன்  அளவைக் காட்டியுள்ளது.  Kampeer en Caravan Industrie (KCI)   நிறுவனம், Euro Stat தரவுகளைப் பயன்படுத்தி  செய்த  ஆய்வில்,  கண்டம் ஒன்றில்  தனிநபர்  ஒருவருக்கு  ஏறத்தாழ  அதிக  எண்ணிக்கையிலான முகாம்  தளங்கள்  நெதர்லாந்தில்  உள்ளதாகக்  கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் அதிக முகாம் தளங்கள் இருப்பது பிரான்ஸ் நாட்டில்தான்; ஆனால் தனிநபர் விகிதத்தில் அதிகம் இருப்பது குரோஷியா!

மொத்த முகாம் தளங்களின் எண்ணிக்கையில் பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது (8,100 முகாம் தளங்கள், அல்லது 1 மில்லியன் மக்களுக்கு 120). ஆனால், தனிநபர் விகிதத்தை பார்க்கும்போது, ​​குரோஷியா (1 மில்லியனுக்கு 870) முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் நெதர்லாந்து உள்ளது (மொத்தம் 2,681 முகாம் தளங்கள், 1 மில்லியன் மக்களுக்கு 151).

பிரபலமான முகாம் செல்லும் இடங்களான ஜெர்மனி (1 மில்லியனுக்கு 38 முகாம் தளங்கள்), இத்தாலி (39) மற்றும் ஸ்பெயின் (28) போன்ற நாடுகளில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு. மொத்த முகாம் தளங்களின் எண்ணிக்கையிலும் கூட நெதர்லாந்து இத்தாலியை விட 400 ம், ஸ்பெயனை விட இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது!

Eurostat இன் 2018 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, ஐரோப்பாவின் 23,200 முகாம் தளங்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவை  நான்கு உறுப்பு நாடுகளில் மட்டுமே உள்ளன: பிரான்ஸ் (35%), ஜெர்மனி (13%), நெதர்லாந்து (12%) மற்றும் இத்தாலி (10%).

முகாம்  செல்வது டச்சு பண்பாட்டின்  ஒரு  அங்கம்
(Camping an Integral Part of Dutch Culture)

KCI  (தலைவர்) Chairperson Leo Diepemaat  கூறுகையில், “இந்த புள்ளிவிவரங்கள் மீண்டும் ஒருமுறை முகாம்  செல்வது  டச்சு பண்பாட்டின்  பிரிக்க முடியாத  ஒரு  பகுதி  என்பதை  நிரூபிக்கிறது. உதாரணமாக,  சைக்கிள் ஓட்டுதல் போன்றே,  முகாம்  செல்வது  நம்  அண்டை  நாடுகளை விட  மிகவும்  பிரபலமாக  உள்ளது, தெற்கு ஐரோப்பாவை விட  மிகவும்  பிரபலமாக  உள்ளது” என்றார்.

The Netherlands boasts the second-highest number of campsites per person in the European Union! Whether it’s rain or shine, the Dutch are well-known for their love of camping, and a new report highlights just how significant this trend is. A study by Kampeer en Caravan Industrie (KCI), using Eurostat data, reveals that the Netherlands has one of the highest numbers of campsites per capita in Europe.