Netherlands‌ல் சைக்கிள் ஓட்டுவது தினசரி போக்குவரத்தின் மிகவும் பிரபலமான வடிவமாகும்;

 உங்கள் தினசரி தேவைகளுக்கு சைக்கிளைப் பயன்படுத்துவது வேடிக்கையானது, வசதியானது மற்றும் மிக முக்கியமாக, இலவசம்! நெதர்லாந்தில் 25 மில்லியனுக்கும் அதிகமான சைக்கிள்கள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் புதிய சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுவதால், இந்த நாடு சைக்கிள் ஓட்டுபவர்களின் சொர்க்கம் என்று கருதப்படுகிறது.

நெதர்லாந்தில் சைக்கிள் ஓட்டுவது பற்றிய விபரங்கள் :

  • நெதர்லாந்தில் சைக்கிள் ஓட்டுவது ஒரு வாழ்க்கை முறை; அனைத்து வருமான குழுக்களிலும் சமமாக பரவலாக்கப்பட்டுள்ளது.
  • வயதானாலும் மிதிவண்டி ஓட்டும் அளவு குறிப்பிடத்தக்க அளவில் குறைவதில்லை.
  • நெதர்லாந்தின் சமவெளி நிலப்பரப்பு சராசரி சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஏற்றது; குறுகிய தூர பயணங்களுக்கு உடல் தகுதி அவசியமில்லை.
  • நாடு முழுவதும் சைக்கிள் பாதைகள்  (Fietspad) தரம் மிகவும் அதிகம்.
  • May மாதம் முதல் September மாதம் வரையிலான காலகட்டம், நீண்ட தூர சைக்கிள் ஓட்டுதலுக்கு சிறந்த பருவமாகும்.
  • சுமார் 250 முதல் 500 யூரோக்களுக்கு ஒரு புதிய சைக்கிளையும், 50 முதல் 150 யூரோக்களுக்கு ஒரு பழைய சைக்கிளையும் வாங்கலாம். 

சைக்கிள் ஓட்டுபவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள்

  • எப்போதும் சைக்கிள் பாதைகளைப் பயன்படுத்துங்கள்.
  • மோட்டார் வாகன ஓட்டுநர்களைப் போலவே சாலை விதிகளைப் பின்பற்றுங்கள் மற்றும் (Traffic Light) போக்குவரத்து விளக்குகள் மற்றும் சைகைகளை கடைப்பிடியுங்கள்.
  • திசை மாறும்போது கையைக் காட்டி சைகை கொடுங்கள்.
  • பேரூந்துகள், Trams மற்றும் Taxi களுக்கு எப்போதும் வழி விடுங்கள்.
  • விபத்துகள் மிகவும் அரிதானவை; பெரும்பாலான ஓட்டுநர்களும் சைக்கிள் ஓட்டுபவர்களே.
  • பாதுகாப்பு Helmets மற்றும் சிறப்பு சைக்கிள் ஓட்டு உடைகளை அணிவது ஒழுங்குபடுத்தப்பட்ட பந்தய போட்டிகளில் மட்டுமே கட்டாயமாகும்.
  • Trailer ஐ இழுத்துச் செல்வது அனுமதிக்கப்படுகிறது. 

நெதர்லாந்தில் சைக்கிள் திருட்டு ஒரு பெரிய பிரச்சனை எனவே தயாராக இருங்கள்!

  • யூனிவே (Univé)
  • ஹேமா (HEMA)
  • அலயன்ஸ் குளோபல் அசிஸ்டன்ஸ் (Allianz Global Assistance) 

சைக்கிள் போக்குவரத்து & நிறுத்துதல்

  • விமானத்தில் சைக்கிள்களை பதிவு செய்யப்பட்ட/சோதனை செய்யப்பட்ட  சரக்குகளாக எடுத்துச் செல்ல முடியும் (20 கிலோ அனுமதி).
  • பேருந்துகள் மற்றும் டிராம்களில் (Trams) சைக்கிள்கள் அனுமதிக்கப்படவில்லை.
  • நீங்கள் உங்கள் சைக்கிளை ரயிலில் எடுத்துச் செல்ல விரும்பினால், ஏறுவதற்கு முன்பு நீங்கள் ஒரு Special Ticket வாங்க வேண்டும். 
  • சைக்கிள்களுக்கான இடங்கள் (Train) ரயிலின் முடிவில் பொதுவாக இருக்கும்.
  • அவசர நேரங்களில் (Rush hours) காலை 9 மணிக்கு முன்னும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் ரயில்களில் சைக்கிள்களை கொண்டு செல்ல முடியாது. இது வார இறுதி நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு) மற்றும் கோடை காலம் (July மற்றும் August) ஆகியவற்றுக்கு பொருந்தாது. 
  • உங்கள் சைக்கிள் Packed அல்லது மடிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு மேலதிக Train Ticket தேவை இல்லை.
  • நாடு முழுவதும் உங்கள் சைக்கிளை நிறுத்துவதற்கு சைக்கிள் நிலையங்கள் (Bike Stands) இருப்பதைக் காணலாம்.
  • பெரும்பாலான (உட்புற) சைக்கிள் நிறுத்துமிடங்களில் (Parking Lots) ஆயிரக்கணக்கான சைக்கிள்களை வைக்க முடியும்.

நெதர்லாந்தில் சைக்கிள் ஓட்டுவது குறித்த குறிப்புகள்

  • உங்கள் சைக்கிளை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும்  என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஒரு அழகான சைக்கிள்/ஆடம்பரமான சைக்கிள் நிச்சயமாக திருடப்படுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது.
  • நெரிசல் மிகுந்த இடங்களில் (Busy Areas) அல்லது சதுக்கங்கள்(squares) போன்ற பகுதிகளில் சைக்கிள் ஓட்ட வேண்டாம்.
  •  Tram Rails தண்டவாளங்களை கவனித்திருங்கள், உங்கள் சைக்கிள் சக்கரங்கள் அதில் சிக்கிக் கொள்ள விடாதே!
  • உங்கள் சைக்கிள் திருடப்பட்டால், காவல்துறை  பொதுவாக அதைப் பற்றி எதுவும் செய்ய மாட்டார்கள். நெதர்லாந்தில் உள்ள அனைத்து சைக்கிள்களில் சுமார் 5 சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் திருடப்படுவதாக அறிவிக்கப்படுகிறது!
  • நெதர்லாந்தில் சிறிய குற்றங்கள் சைக்கிள் திருட்டை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஓட்டுங்கள் அல்லது பூட்டி வையுங்கள்!
  • சாதாரண மற்றும் U- வடிவ பூட்டு, இரண்டையும் பயன்படுத்துங்கள் (Slot, a Factory-installed lock that passes through the rear spokes).
  • உங்கள் சைக்கிளை எப்போதும் மரம், வேலி அல்லது கம்பம் போன்ற அசையாத பொருளுடன் இணைக்கவும்.
  • முடிந்தால், சைக்கிள் stand ல் அல்லது சைக்கிள் Parking Lot ல் உங்கள் சைக்கிளை பூட்டி வையுங்கள். 
  • உங்கள் சைக்கிளில் விளக்குகளை (முன் விளக்கு மற்றும் பின் விளக்கு இரண்டையும்) வைப்பது எப்போதும் நல்லது. அவை மலிவானவை, Police Tickets பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை, மேலும் இரவில் கார் விபத்து ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கும். 
  • ஒரு Bike ல் பல Riders இருப்பது சாதாரமாகும். 

Cycling is the most popular mode of daily transport in the Netherlands, offering a fun, convenient, and nearly free way to get around. With over 25 million bicycles in the country and 1.2 million new ones sold annually, the Netherlands is truly a cyclist’s paradise.