Germany யில் கல்வி கற்றல் தொடர்பான வழிகாட்டல்

ஜெர்மனியில் கல்வி வெளிநாட்டவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான தேர்வாக இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன:

  • உயர் கல்வித் தரம்: ஜெர்மனி பல்கலைக்கழகங்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குகின்றன.
  • கல்விக்கான கட்டணம் இல்லாதது: பெரும்பாலான ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணம் கிடையாது . இது மாணவர்களுக்கு மிகவும் மலிவான கல்விச் செலவாகும்.

2017 ஆம் ஆண்டில், ஜெர்மனி உயர்கல்வி நிறுவனங்களில் 350,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இது மொத்த மாணவர் தொகையில் சுமார் 13% ஆகும். வெளிநாட்டு மாணவர்களை அதிகம் ஈர்க்கும் நோக்கில், ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படும் சர்வதேச கல்வித் திட்டங்களை அதிகரித்து வழங்கி வருகின்றன. 

ஜெர்மன் உயர்கல்வி முறை விளக்கம்

ஆரம்ப கல்வி மற்றும் இடை நிலை கல்வி அமைப்பை  போன்றே ஜெர்மனியில் உயர்கல்வி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

  • பல்கலைக்கழகங்கள் (Universitäten): ஆராய்ச்சி மற்றும் ஆழமான கோட்பாட்டு கற்பித்தலில் நிபுணத்துவம் பெற்றவை.
    Universities (Universitäten) Specialise in research and in-depth, theoretical teaching.
  • பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகங்கள்(Hochschulen): கற்றலைப் பயன்படுத்துதல் மற்றும் நடைமுறை வேலை அனுபவம் ஆகியவற்றில் முதன்மையாக கவனம் செலுத்துகின்றன.
    Universities of applied science (Hochschulen) Focus primarily on the application of learning and practical work experience.
  • கலை மற்றும் இசைக் கல்லூரிகள் – (Musik- und Kunsthochschulen) Colleges of art and music): இளம் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் நடிகர்களை பயிற்றுவிக்கின்றன.
    Colleges of art and music (Musik- und Kunsthochschulen) Train budding artists, designers, musicians and actors.

ஜெர்மனியில் கல்விக்கான கட்டணங்கள் மற்றும் செலவுகள்

2013 ஆம் ஆண்டிலிருந்து, எல்லா ஜெர்மன் மாநிலங்களிலும் கல்வி கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது Baden-Württemberg மாநிலம் மட்டுமே வெளிநாட்டு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. இதனால், ஜெர்மனியில் உயர்கல்விக்கான செலவு உலக அளவில் மிகவும் மலிவானவற்றுள் ஒன்றாகும். 

ஜேர்மனியில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களுக்கான உதவித்தொகை 

படிக்கும் காலத்தில் நிதி உதவி தேடுகிறீர்களா? ஜெர்மனியில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு Deutschland Stipendium, Erasmus+ Programme மற்றும் DAAD கல்வி உதவித்தொகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படுகின்றன.

DAAD கல்வி உதவித்தொகை: ஜெர்மன் கல்வி பரிமாற்ற சேவை (The German Academic Exchange Service – DAAD) வெளிநாட்டு மாணவர்களுக்கு பல்வேறு கல்வி நிலைகளுக்கான பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்குகிறது. இந்த உதவித்தொகைகள் கல்வி கட்டணங்கள், வாழ்வாதார செலவுகள் மற்றும் மருத்துவக் காப்பீட்டை உள்ளடக்குகின்றன.

ஜெர்மன் பல்கலைக்கழகங்களின் கல்வி நாட்காட்டி
(Academic calendar)

ஜெர்மன் பல்கலைக்கழகங்களின் கல்விக் ஆண்டு October மாதம் தொடங்கி Septembrt மாதம் வரை நீடிக்கும். இது இரண்டு தவணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது :

  • குளிர்கால  தவணை(Winter semester): பொதுவாக இது October மாத தொடக்கத்தில் இருந்து March மாத இறுதி வரை நடைபெறும்.
  • கோடைக்கால  தவணை (Sommer semester): April மாத தொடக்கத்தில் இருந்து September மாத இறுதி வரை நடைபெறும் 
  • தேர்வுகள் (Exams): பொதுவாக, ஒவ்வொரு தவணையின் இறுதி சில வாரங்களிலும் அடுத்த தவணை தொடங்குவதற்கு முன்பு தேர்வுகள் நடத்தப்படும்.

கல்வி விடுமுறை: Christmas மற்றும் Easter பண்டிகை காலங்களில் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருக்கும்.

குறிப்பு : இது ஒரு பொதுவான தகவல் ஆகும். சில பல்கலைக்கழகங்கள் வேறுபட்ட நாட்காட்டியை  பின்பற்றலாம். எனவே, நீங்கள் தேர்ந்த பல்கலைக்கழகத்தின் கல்வி நாட்காட்டியை  நேரடியாக சரிபார்த்துக் கொள்வது நல்லது.

தவணைகளுக்கு இடையே சுமார் 6 முதல் 8 வாரங்கள் வரை தவணை விடுமுறை (Semesterferien) இருக்கும். இந்த நேரம் பொதுவாக கட்டுரை எழுதுதல் மற்றும் தேர்வுகளுக்கு படிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் சில மாணவர்கள் வேலை அல்லது இடைநிலைப் பயிற்சி(Internship) தேடுவதற்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஜெர்மன் பட்டங்கள் மற்றும் தகுதிகள்

ஜெர்மன் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஜெர்மனிக்கே உரிய உயர்கல்வித் தகுதிகளை வழங்குகின்றன. அவையாவது:

  • இளநிலைப் பட்டங்கள் (Bachelor’s Degrees)
  • முதுநிலைப் பட்டங்கள் (Master’s Degrees)
  • முனைவர் பட்டங்கள் (PhDs)
  • முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குப் பிந்தைய ஆராய்ச்சி (Postdoctoral Research)
  • Staatsexamen (மாநிலத் தேர்வுகள்): சில படிப்புத் திட்டங்களுக்கு இந்த தேர்வு தேவைப்படுகிறது. மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருந்து கடை ஊழியர்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட தொழில்களுக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வின் தரத்தை (தனிப்பட்ட)தனியார்  பல்கலைக்கழகங்கள் அமைப்பதில்லை, மாநிலமே நிர்ணயிக்கிறது.

ஜெர்மன் கடன் முறை (ECTS திட்டம்)

ஐரோப்பாவின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களைப் போலவே, ஜெர்மனியில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் ஐரோப்பிய கடன் மாற்றம் மற்றும் திரட்டும் முறை (European Credit Transfer System – ECTS) ஐ பின்பற்றுகின்றன. மாணவர்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து இன்னொரு பல்கலைக்கழகத்திற்கு மாற்றுவதற்கு இந்த முறை உதவுகிறது. மேலும், இது பல்வேறு பல்கலைக்கழகங்கள், படிப்புத் திட்டங்கள் மற்றும் தகுதிகளை ஒப்பிடுவதற்கு வழிவகுக்கிறது.

ECTS Credits என்பது ஒரு குறிப்பிட்ட பாடத்தின் பணிச்சுமையையும் சராசரி மாணவர் அந்தப் படிப்புத் திட்டத்தின் கற்றல் நோக்கங்களை அடைய எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் குறிக்கிறது. 60 Credits ஒரு முழு கல்வி ஆண்டுக்கு சமமானவை.

ஜெர்மன் பல்கலைக்கழக மதிப்பீட்டு முறை (University Grading)

ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் மதிப்பீட்டு முறை 1 (சிறந்தது) முதல் 5 வரை உள்ளது. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச தேவை 4 Grading. 

ஜெர்மனி பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான தகுதிகள்

உங்களுக்கு ஜெர்மன் உயர்கல்வி நிறுவனத்தில் சேர்க்கப்படுவதற்கான தகுதியை , பல்கலைக்கழக நுழைவுத் தகுதி (Hochschulzugangsberechtigung)  வழங்குகிறது. என்றாலும், சட்டம் மற்றும் மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் தேவை இருக்கலாம்.

ஜெர்மன் பாடசாலையில்  படித்திருந்தால், உங்கள் பல்கலைக்கழக நுழைவுத் தகுதி ஆபிட்டூர் (Abitur) ஆகும். வெளிநாட்டுப் பாடசாலையில் படித்திருந்தால், ஜெர்மனியில் அங்கீகரிக்கப்பட்ட சமமான தகுதி தேவைப்படும். உங்கள் பாடசாலையில் வெளியேறும் சான்றிதழ் (Leaving Certificate) ஜெர்மனியில் அங்கீகரிக்கப்படுகிறதா என்பதை அறிய (Database on Admission Requirements) DAAD இன் சேர்க்கைத் தேவைகள் குறித்த தரவுத்தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்படவில்லை என்றால், நீங்கள் நுழைவுத் தேர்வு அல்லது அடிப்படை  படிப்பை (Entrance Exam or Foundation Course) பின்பற்ற வேண்டியிருக்கலாம்.

மேற்கூறிய பல்கலைக்கழக நுழைவுத் தகுதி தவிர, நீங்கள் விண்ணப்பிக்கும் பல்கலைக்கழகம் மற்றும் கல்வித் திட்டத்தை பொறுத்து, கீழே உள்ளவற்றுள் சில அல்லது அனைத்தும் தேவைப்படலாம்.

  • வீசா மற்றும் குடியிருப்பு அனுமதி
  • உங்கள் Support ற்கு போதுமான நிதி வளங்களின் சான்று
  • ஜெர்மன் மொழித் திறன் சான்று 
  • ஆங்கில மொழித் திறன் சான்று(சர்வதேச படிப்புத் திட்டத்திற்கு விண்ணப்பித்தால்) 
  • கலை அல்லது இசைக் கல்லூரியில் விண்ணப்பித்தால் கலைத் திறமைக்கான சான்று
  • மருத்துவக் காப்பீடு 
  • நோக்கக் கடிதம் (Letter of Motivation)

ஜெர்மனி மாணவர்களுக்கான தடைப்பட்ட வங்கிக் கணக்கு

ஐரோப்பிய யூனியன் EU வெளியே இருந்து ஜெர்மனிக்கு வரும் மாணவர்கள் தங்கள் வாழ்வாதார செலவுகளை நிரூபிக்க வேண்டும். உங்கள் கல்வியை நிதியளிப்பதைக் காண்பிப்பதற்கான பல வழிகள் இருந்தாலும், உங்கள் பெற்றோர் வருமான அறிவிப்பை சமர்ப்பிப்பது அல்லது bank guarantee வழங்குவது போன்றவை அடங்கும், பெரும்பாலான மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மிகவும் பொதுவான முறை தடைப்பட்ட வங்கிக் கணக்கு (Blocked Bank Account (Sperrkonto) ஆகும். இது ஒரு சிறப்பு வகையான வங்கிக் கணக்கு ஆகும், இந்த கணக்கு வைத்திருப்பவர் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். 2020 ஆம் ஆண்டில் இது €10,236 ஆக இருந்தது (EUR – Euro). பின்னர் இந்த தொகையை குறைந்த மாத தவணைகளில் (Smaller Monthly Payouts) எடுத்துக்கொள்ளலாம் .

Germany’s high educational standards and the absence of tuition fees at most universities make it a highly appealing destination for expats. In 2017, more than 350,000 international students were enrolled in German higher education institutions, representing about 13% of the total student population. To further attract foreign students, many German universities are now offering an increasing number of international courses taught in English.