Wales ல் இலவச Nursing கல்வி: உடனடியாக Scholarships க்கு விண்ணப்பிக்கவும்

Nursing துறையில் ஒரு தொழிலில் ஆர்வமாக உள்ளீர்களா? மக்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த தீவிரமாக உள்ளீர்களா? Swansea University-யில் Bachelor of Science in Adult Nursing! இந்த மதிப்புமிக்க Degree உயர்தரமான கல்வியை மட்டுமல்லாமல், சர்வதேச மாணவர்களுக்கு பல நன்மைகளையும் வழங்குகிறது. இந்த Degree படிப்பை நீங்கள் முடித்தால், நீங்கள் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறலாம். மேலும், இந்த படிப்புக்கு உங்களுக்கு முழுமையான Scholarships கிடைக்கும். ஆனால், இந்த Scholarships-ஐ பெற, நீங்கள் படிப்பு முடிந்த பிறகு இரண்டு ஆண்டுகள் Wales-ல் பணிபுரிய ஒப்புக்கொள்ள வேண்டும்.

Free Nursing கல்வி Scholarship-ன் பயன்கள்:

  • முழு கல்விக்கட்டணம்: உங்கள் படிப்பிற்கான முழு கட்டணமும் இந்த Scholarship-ஆல் கட்டப்படும். நீங்கள் தனிப்பட்ட முறையில் கல்விக்கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் பணத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்தலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் எதிர்கால தொழிலைப் பற்றி சிந்திக்கவும், திட்டமுமிடலாம்.
  • மாதாந்த உதவித்தொகை: உங்கள் Degree படிப்பு காலத்தில் வாழ்க்கைச் செலவுகளுக்கு உதவும் வகையில் நீங்கள் மாதாந்த உதவித்தொகையைப் பெறுவீர்கள். 
  • Welcome package(வரவேற்பு தொகுப்பு): உங்களுக்கு Wales ல் உங்கள் புதிய வாழ்க்கையை எளிதாகத் தொடங்க உதவும் ஒரு வழிகாட்டி ஆகும். இது உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கி, உங்கள் புதிய வாழ்க்கையை எளிதாகத் தொடங்க உதவும்.
  • எடுத்துக்காட்டாக, எங்கு உணவு சாப்பிடுவது, எங்கு பொருட்கள் வாங்குவது, எங்கு மருத்துவரைப் பார்ப்பது போன்றவை. இந்த தகவல்கள் உங்களுக்கு அந்த நகரில் விரைவாக இணைந்து கொள்ள உதவும்.
  • உறுதியான தங்குமிடம்: Degree க்குப் பிறகு, Wales ல் உங்களுக்கு உறுதியான தங்குமிடம் கிடைக்கும், இது உங்கள் வேலை தேடலையும் தொழில் தொடக்கத்தையும் எளிதாக்கும்.

Degree Program Highlights (பாடத்திட்ட முக்கிய அம்சங்கள்):

  • புகழ்பெற்ற பேராசிரியர்கள்: உங்கள் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனுபவம் வாய்ந்த மற்றும் தகுதி வாய்ந்த Nursing Professionals இடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
  • Strong Industry Connections: இந்த Degree திட்டம் Wales ல் உள்ள பல மருத்துவமனைகள், Clinics மற்றும் பிற சுகாதார நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.  நீங்கள் படிக்கும் போது ஒரு மருத்துவமனையில் Internship செய்யலாம். அங்கு நீங்கள் நோயாளிகளைப் பராமரிப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ளலாம். இது உங்களுக்கு நடைமுறை அனுபவத்தைத் தரும். படிப்பு முடிந்த பிறகு, நீங்கள் அந்த மருத்துவமனையிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு மருத்துவமனையிலோ வேலைக்குச் சேரலாம்.
  • Practical experience(நடைமுறை அனுபவம்): நடைமுறை அனுபவம் என்பது உங்கள் கல்வியை மேம்படுத்தவும், உங்கள் எதிர்கால தொழில் வாழ்க்கைக்கு உதவும் ஒரு முக்கியமான பகுதியாகும்.
    உதாரணமாக, நீங்கள் ஒரு மருத்துவமனையில் Internship செய்யும் போது, நீங்கள் நோயாளிகளின் ரத்த அழுத்தத்தை அளப்பது, அவர்களுக்கு மருந்து கொடுப்பது போன்ற பணிகளை செய்யலாம். இந்த அனுபவம் உங்களுக்கு ஒரு Nurse ஆக வேலை செய்வதற்கு தேவையான திறன்களை வழங்கும்.
  • Supportive Learning Environment: இந்த Degree திட்டம் உங்களுக்கு ஒரு நல்ல கற்றல் அனுபவத்தை வழங்கும் என்று கூறுகிறது. Degree படிக்கும் போது, நீங்கள் ஆதரவான மற்றும் ஒத்துழைப்புமிக்க சூழலில் இருப்பீர்கள். இது உங்கள் கல்வி மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Free Nursing Degree திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்களுக்கான தகுதி நிபந்தனைகள்

இந்த Degree திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் A-Level தேர்வில் BBB-BCC அல்லது அதற்கு சமமான வேறு ஏதேனும் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

  • A-Level: இது பொதுவாக UK மற்றும் Wales ல் பாடசாலை கல்வியின் இறுதி ஆண்டில் எடுக்கப்படும் ஒரு தேர்வு. இந்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால், நீங்கள் பல பல்கலைக்கழகங்களில் படிக்க தகுதியுடையவராக இருப்பீர்கள்.
  • BBB-BCC: இது A-Level தேர்வில் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள். BBB என்றால், நீங்கள் மூன்று பாடங்களில் B மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று அர்த்தம். BCC என்றால், நீங்கள் ஒரு பாடத்தில் B மதிப்பெண்கள் மற்றும் மற்ற இரண்டு பாடங்களில் C மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று அர்த்தம்.
  • சமமான தகுதி: நீங்கள் A-Level தேர்வு எழுதவில்லை என்றால், அதற்கு சமமான வேறு ஏதேனும் தகுதியை நீங்கள் பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் IB Diploma (International Baccalaureate Diploma) பெற்றிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் சர்வதேச அளவிலான தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கலாம்.

30-32 புள்ளிகள்: IB Diploma-வில் மொத்தம் 45 புள்ளிகள் கிடைக்கும். இந்த Degree திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் 30 முதல் 32 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.

IB Diploma-வில் English மற்றும் Mathematics ஆகிய இரண்டு பாடங்கள் கட்டாயம். இந்த இரண்டு பாடங்களிலும் குறைந்தபட்சம் HL4 அல்லது SL5 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். HL என்பது Higher Level மற்றும் SL என்பது Standard Level என்று பொருள்.

சுகாதாரம்(Health) அல்லது அறிவியல்(Science) தொடர்பான பாடங்களில் படித்திருந்தால் மேலதிகமாக கருத்தில் கொள்ளப்படும்.(விரும்பத்தக்கது)

மொத்தம் 6.5 மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 6.0 மதிப்பெண்களுடன் IELTS Band (அல்லது சமமான ஆங்கில மொழி தகுதி).

Suitable Personal Statement and Academic Reference – இந்த இரண்டு ஆவணங்களும் உங்கள் விண்ணப்பத்தை மதிப்பிட உதவும்.

Degree முடிந்த பிறகு இரண்டு ஆண்டுகள் Wales ல் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
(Scholarship க்கு விண்ணப்பித்தால்). 

Scholarship க்கு விண்ணப்பிக்கும் முறை

  • உங்கள் தகுதியை சரிபார்க்கவும்: படிப்பு மற்றும் Scholarship க்கு (ஏதேனும் இருந்தால்) தேவையான நுழைவுத் தகுதிகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • உங்கள் விண்ணப்ப ஆவணங்களை தயார் செய்யவும்: மதிப்பெண் பட்டியல், சான்றிதழ்கள், தனிப்பட்ட அறிக்கை மற்றும் கல்வி சான்று போன்ற தேவையான ஆவணங்களை சேகரிக்கவும்.
  • Online ல் விண்ணப்பிக்கவும்: Swansea University Website ற்குச் சென்று September 2025 தொடக்கத்திற்கான உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். விண்ணப்ப கடைசி திகதி January 31, 2025 ஆகும், எனவே தாமதிக்காதீர்கள்!

Fully-Funded Scholarship உடன் Wales ல் உங்கள் Nursing வாழ்க்கையைத் தொடங்க இந்த அற்புதமான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

Swansea University இலவசமாக Nursing படிக்க ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது! இந்த படிப்பு உலகத்தரம் வாய்ந்த கல்வி, நடைமுறை பயிற்சி மற்றும் பல வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும், இந்த படிப்புக்கு உங்களுக்கு முழுமையான Scholarship கிடைக்கும். ஆனால், இந்த Scholarship பெற, நீங்கள் படிப்பு முடிந்த பிறகு இரண்டு ஆண்டுகள் Wales ல் பணிபுரிய ஒப்புக்கொள்ள வேண்டும்.

“Free Nursing Education in Swansea University!”

The Scholarship to Study Nursing at Swansea University in Wales offers an incredible opportunity to receive world-class education, practical training, and excellent job prospects. This full scholarship covers your studies, but to benefit, you must commit to working in Wales for two years after graduation.