Germany-யில் Student Residence Permit-க்கு விண்ணப்பிப்பது எப்படி (2025)?

உங்கள் சரியான படிப்பை கண்டுபிடித்து Germany-க்கு வந்த பின்னர், நீங்கள் வசதியாக தங்குவதற்கு செய்ய வேண்டிய முக்கியமான விடயம் Student Residence Permit-க்கு விண்ணப்பிப்பது ஆகும். ஒரு நிமிடம்! என்னிடம் ஏற்கனவே Student Visa இருக்கிறதே, அது போதும்தானே? என்று எண்ணலாம், ஆனால் வருத்தப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், அது போதாது. நீங்கள் Germany-யில் மூன்று மாதங்களுக்கு மேலாக வசிக்க விரும்பினால் (நிச்சயமாக ஒரு மாணவராக நீங்கள் விரும்புவீர்கள்), இந்த அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும்!

இது மிகவும் எளிமையான வழிமுறைதான். இருப்பினும், முன்னதாகவே தொடங்குவது நல்லது. இதனால், நீங்கள் உங்கள் கல்வியில் முழுமையாக கவனம் செலுத்தி, மாணவர் வாழ்க்கையை எந்தவிதமான தொந்தரவும் இன்றி மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். ஆகவே, Student Residence Permit என்றால் என்ன, அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த அனைத்து தகவல்களும் இதோ.

Student Residence Permit என்றால் என்ன?

Germany-ல் Student Residence Permit என்பது ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு (EEA) வெளியே உள்ள (Non-EU/EEA) மாணவர்கள் நாட்டில் நீண்ட காலம் தங்கிப் படிக்க அனுமதிக்கும் ஒரு ஆவணமாகும். Germany-யில் மூன்று மாதங்களுக்கு மேல் தங்கத் திட்டமிடும் சர்வதேச மாணவர்களுக்கு இது கட்டாயமாகும். இந்த அனுமதி, Student Visa-வில் இருந்து வேறுபட்டது. Student Visa பொதுவாக Germany-க்குள் நுழைவதற்கு முன்பு வழங்கப்படுவதுடன், மாணவர்கள் தங்கள் படிப்பிற்காக நாட்டிற்குள் வருவதற்கு வழங்கப்படும் ஒரு குறுகிய கால அங்கீகாரமாகும்.

Student Visa Germany-க்குள் நுழைவதற்கு அவசியமானதாக இருந்தாலும், உங்கள் படிப்புக் காலம் 90 நாட்களுக்கு மேல் நீடித்தால், நீங்கள் தொடர்ந்து தங்குவதற்கு Student Residence Permit மிக முக்கியமானது. சரியான Student Visa-வோடு நீங்கள் Germany-க்கு வந்தவுடன், நீங்கள் தொடர்ந்து தங்கும் காலத்தை நீடிக்க Student Residence Permit-க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Germany-யில் மாணவராக எனக்கு Student Residence Permit தேவையா?

Germany-யில் உங்களுக்கு Student Residence Permit அவசியமா இல்லையா என்பது உங்களின் குடியுரிமை மற்றும் நீங்கள் தங்கும் கால அளவைப் பொறுத்தது. இதைப் பற்றி மேலும் தெளிவாகப் பார்ப்போம்:

01. EU/EEA நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள்:

நீங்கள் EU/EEA நாடுகளைச் சேர்ந்த மாணவராக இருந்தால், Germany-யில் படிப்பதற்கு உங்களுக்கு Residence Permit தேவையில்லை. இருப்பினும், நீங்கள் மூன்று மாதங்களுக்கு மேல் தங்கத் திட்டமிட்டால், நீங்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் உங்கள் முகவரியைப் பதிவு செய்ய வேண்டும் (பதிவுச் சான்றிதழ் அல்லது Anmeldebescheinigung). ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து Germany-யில் வசித்த பிறகு, நீங்கள் நிரந்தரக் குடியுரிமைக்கான சான்றிதழுக்கு(Certificate of Permanent Residency) விண்ணப்பிக்கலாம்.

02. EU/EEA அல்லாத நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள்:

நீங்கள் EU/EEA அல்லாத நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால், நீங்கள் 90 நாட்களுக்கு மேல் தங்கினால் உங்களுக்கு Student Residence Permit கட்டாயம் தேவை. நீங்கள் Germany நாட்டிற்குள் எப்படி வந்தீர்கள் என்பதைப் பொறுத்து இந்த வழிமுறை வேறுபடும்:

  • நீங்கள் Germany-க்கு Student Visa-வில் வந்திருந்தால், அந்த Visa பொதுவாக 90 நாட்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும். எனவே, நீங்கள் வந்தவுடன், உங்கள் படிப்புக் காலம் முழுவதும் Germany-யில் தங்குவதற்கு அந்த 90 நாட்களுக்குள் Student Residence Permit-க்கு விண்ணப்பிப்பது அவசியம்.
  • நீங்கள் Visa இல்லாமல் வந்திருந்தால், சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், உதாரணமாக USA, Canada, Australia போன்ற நாடுகளின் குடிமக்கள் குறுகிய காலம் தங்குவதற்கு Visa இல்லாமலேயே Germany-க்குள் வரலாம். ஆனால், நீங்கள் 90 நாட்களுக்கு அதிகமாக, அதாவது ஒரு முழு Degree படிப்புக்காக தங்க விரும்பினால், Germany வந்தவுடன் விரைவில் Student Residence Permit-க்கு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.

03. ஏற்கனவே Germany-யில் இருக்கும் மாணவர்கள்:

நீங்கள் ஏற்கனவே Germany-யில் வேறு நோக்கங்களுக்கான Visa-வில் (மொழிப் பயிற்சி போன்றவை) இருந்தால், நீங்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தால், நீங்கள் Student Residence Permit-க்கு மாற வேண்டியிருக்கும். Germany-யை விட்டு வெளியேறாமல் உங்கள் தற்போதைய Visa நோக்கத்தை மாற்ற முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Germany-யில் Student Residence Permit-க்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

நீங்கள் Germany-யில் வந்த முதல் மூன்று மாதங்களுக்குள் அல்லது உங்கள் Visa காலாவதியாகும் முன் Student Residence Permit-க்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த நடைமுறைக்கு பல வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம் என்பதால், சீக்கிரமாக விண்ணப்பிப்பது முக்கியம். விண்ணப்பத்தை நீங்கள் ஆஸ்லேண்டர்போர்டே (Ausländerbehörde) என்று அழைக்கப்படும் உள்ளூர் வெளிநாட்டினர் அலுவலகத்தில்(Local Foreigner’s Office) சமர்ப்பிக்க வேண்டும். சந்திப்பை பெறுவதில் ஏற்படும் காலதாமதம் உங்கள் Visa காலாவதியாகி சட்டரீதியான சிக்கல்களை உருவாக்கலாம்.

Germany-யில் Student Residence Permit-க்கு எப்படி விண்ணப்பிப்பது?

தேவையான ஆவணங்களைத் திரட்டுதல்:

விண்ணப்பிப்பதற்கு முன், தேவையான அனைத்து ஆவணங்களையும் வைத்திருப்பது மிக முக்கியம். Germany-யில் உங்கள் Student Residence Permit-க்கு உங்களுக்கு என்னென்ன தேவைப்படும் என்பது இங்கே:

  1. Valid passport (issued within the last 10 years)
  2. Recent biometric passport photo
  3. போதுமான மருத்துவக் காப்பீடு பெற்றதற்கான ஆதாரம் (அரசு அல்லது தனியார் காப்பீடு)
  4. நிதி ஆதாரத்திற்கான சான்று (2024-ன் படி ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் €11,904 இருக்க வேண்டும். இது Blocked Account, Scholarship அல்லது வேறு நிதி ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்படலாம்)
  5. நீங்கள் சேர்ந்திருக்கும் பல்கலைக்கழகத்திலிருந்து Certificate of Enrollment
  6. நீங்கள் வசிக்கும் நகரத்தில் உங்களைப் பதிவு செய்ததற்கான சான்றிதழ்
    City registration certificate (Anmeldebescheinigung)
  7. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (Antrag auf Erteilung eines Aufenthaltstitels)

விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்:

அடுத்து, வெளிநாட்டினர் அலுவலகத்தில் (Ausländerbehörde) சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் சந்திப்பின்போது, உங்கள் விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும். சில நகரங்களில், அதிக தேவை காரணமாக நீங்கள் முன்கூட்டியே Appointment-ஐ Online-ல் பதிவு செய்ய வேண்டியிருக்கலாம். தாமதங்களைத் தவிர்க்க சந்திப்பிற்கு எல்லாவற்றையும் கொண்டு வர மறக்காதீர்கள்.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல்:

Germany-யில் Student Residence Permit பெறுவதற்கான கட்டணம் மாறுபடலாம். இருப்பினும், முதல் முறை விண்ணப்பிக்கும்போது பொதுவாக €56 முதல் €100 வரை செலவாகும். அந்த Residence Permit-ன் காலத்தை நீடிக்க நீங்கள் விண்ணப்பித்தால், அதற்கான கட்டணம் சுமார் €93 முதல் €96 வரை இருக்கும்.

செயலாக்க நேரமும் மற்றும் அனுமதி பெறுவதற்கான காலமும்

Student Residence Permit கிடைப்பதற்கான நேரம், நீங்கள் விண்ணப்பிக்கும் இடத்தையும், அந்தந்த வெளிநாட்டினர் அலுவலகத்தின் வேலையையும் பொறுத்தது. சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை ஆகலாம். அதனால், தாமதிக்காமல் சீக்கிரம் விண்ணப்பிப்பது நல்லது.

பொதுவாக, இந்த அனுமதி உங்கள் படிப்பு முடியும் வரை வழங்கப்படும். ஆனால், ஒரு முறை விண்ணப்பித்தால் அதிகபட்சம் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள். உங்கள் படிப்பு இன்னும் தொடர்ந்தால், நீங்கள் அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.

Student Residence Permit உடன் வேலை செய்யலாமா?

Residence Permit வைத்திருக்கும்போது மாணவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா என்பது ஒரு பொதுவான கேள்வி. ஆம், Germany-யில் Student Residence Permit வைத்திருக்கும் மாணவர்கள், வேறு எந்த வேலையில் சேர்வதற்கான அனுமதியும் இல்லாமலேயே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 120 முழு நாட்களோ அல்லது 240 அரை நாட்களோ வேலை செய்ய முடியும்.

இந்த வசதி மாணவர்கள் தங்கள் படிப்பை முக்கியமாக கருத்தில் கொண்டு, அதே நேரத்தில் தங்களுடைய சொந்த செலவுகளை சமாளிக்க உதவுகிறது.

Germany-யில் தங்குவதற்கு Student Residence Permit அவசியம். Student Visa குறுகிய காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். மூன்று மாதங்களுக்கு மேல் தங்கினால் Residence Permit பெற வேண்டும். இது எளிதான செயல்முறை என்றாலும், சீக்கிரம் தொடங்குவது நல்லது. அப்போதுதான் படிப்பில் கவனம் செலுத்த முடியும். இந்த வழிகாட்டி, Student Residence Permit என்றால் என்ன?, அதற்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பது பற்றிய தகவல்களை வழங்குகிறது.

To stay in Germany, a student residence permit is necessary. The student visa is only valid for a short period. If you plan to stay for more than three months, you must obtain a residence permit. Although it’s a straightforward process, it’s best to start early so you can focus on your studies. This guide provides information on what a student residence permit is and how to apply for it.

Source: https://www.expatrio.com/about-germany/student-residence-permit-germany