Australian Skilled Visas-கான சம்பள அளவு 2025 July 1 முதல் உயர்கிறது

Australia Skilled Workers-ஐ வரவேற்பதில் ஆர்வமாக இருந்தாலும், அதற்கான வருமான அளவை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு July மாதம் 1ம் திகதி முதல் Skilled Visas-கான சம்பள அளவு கணிசமாக அதிகரிக்கவுள்ளது. இந்த மாற்றமானது யாரையெல்லாம் பாதிக்கும்? இதற்கான காரணங்கள் என்ன? உங்களுடைய கனவு வேலையை Australia-வில் பெறுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? போன்ற அனைத்து விவரங்களையும் இந்த கட்டுரையை முழுமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்! 

முக்கிய அம்சங்கள்:

  • Australia 2025 July 1 முதல் Skilled Visas-கான குறைந்தபட்ச சம்பள அளவை உயர்த்தவுள்ளது.
  • Australia Skilled Visas-கான வருமானத் தேவையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
  • புதிய வருமான அளவு, ஆண்டு வார சராசரி சாதாரண நேர வருவாய்க்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும்.
  • அடிப்படைத் திறன் வருமான அளவு, சிறப்புத் திறன் வருமான அளவு மற்றும் தற்காலிக திறன் இடம்பெயர்வு வருமான அளவு ஆகியவற்றுக்கான சம்பள அளவுகள் உயரும். (Core Skills Income Threshold, Specialist Skills Income Threshold & Temporary Skilled Migration Income Threshold)
  • இந்த புதிய மாற்றங்கள் 2025 July 1 முதல் அமலுக்கு வரும்.

Australian Skilled Visa – ஆண்டு சம்பள மாற்றங்கள் (Annual Indexation)

Australia குடிவரவுத் துறை, Australia-வில் திறமையான தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளது. இந்த புதிய சம்பள அளவு, Australia-வில் உள்ளவர்கள் வழக்கமாக ஒரு வாரத்துக்குரிய சராசரி வருமானத்துடன் (Average Weekly Ordinary Time Earnings-AWOTE) ஒத்துப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் Australia மக்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களின் சம்பள நிலைகளுக்கு ஏற்ப இந்த சம்பள அளவுகள் சீரமைக்கப்படுகின்றன. இதனால், வெளிநாட்டில் இருந்து Skilled Workers வந்தாலும், உள்ளூர் Australia மக்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படாது. இந்த புதிய மாற்றங்கள் எல்லாம் 2025 July 1 ம் திகதியிலிருந்து அமலுக்கு வரும்.

பின்வரும் Visas-கான ஆண்டு வருமான அளவு உயர்கிறது:

அடிப்படைத் திறன் வருமான வரம்பு (Core Skills Income Threshold-CSIT): 

இதற்கு முன் இந்த Visas-க்கு குறைந்தபட்சம் AUD 73,150 சம்பளம் வாங்க வேண்டியிருந்தது. இனிமேல் அது AUD 76,515 ஆக உயர்கிறது. இதனால், Subclass 482 (Skills in Demand) மற்றும் Subclass 186 (Employer Nomination Scheme) ஆகிய Visas பாதிக்கப்படும்.

சிறப்புத் திறன் வருமான வரம்பு (Specialist Skills Income Threshold-SSIT): 

இதற்கு முன் இந்த Visas-க்கு குறைந்தபட்சம் AUD 135,000 சம்பளம் வாங்க வேண்டியிருந்தது. இனிமேல் அது AUD 141,210 ஆக உயர்கிறது. Subclass 482 (Skills in Demand) Visa-வின் கீழ் வரும் சிறப்புத் திறன் பிரிவினருக்கான பரிந்துரைகள் இதனால் பாதிக்கப்படும்.

தற்காலிக திறன் இடம்பெயர்வு வருமான வரம்பு (Temporary Skilled Migration Income Threshold-TSIT): 

இந்த விசாக்களுக்கு இதற்கு முன் குறைந்தபட்சம் AUD 73,150 சம்பளம் வாங்க வேண்டியிருந்தது. இனிமேல் அது AUD 76,515 ஆக உயர்கிறது. இதனால், Subclass 494 (Skilled Employer Sponsored Regional) மற்றும் Subclass 187 (Regional Sponsored Migration Scheme) ஆகிய Visas பாதிக்கப்படும்.

இந்த மாற்றங்கள் ஏன் நடக்கின்றன?

Australia அரசாங்கம் இந்த மாற்றங்களை சரிசெய்வதன் காரணம்:

  • திறமையான வேலைக்காக வெளிநாடுகளிலிருந்து Australia-க்கு வருகை தருபவர்களின் சம்பளமானது, Australia-வில் உள்ளவர்களின் சம்பள வளர்ச்சிக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று அரசு விரும்புகிறது.
  • மேலும், Australia-வில் தற்போதுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விடக் குறைவான தொகையை வழங்கி யாருக்கும் வேலை வழங்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதன் மூலம் உள்நாட்டுத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள் பாதுகாக்கப்படும்.

இந்த மாற்றங்கள் Australia-வின் திறமையான இடம்பெயர்வு திட்டத்தை வலுப்படுத்தவும், புலம்பெயர்ந்தோர் மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் இருவரையும் பாதுகாப்பதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

குறிப்பு: தற்போது Visa வைத்திருப்பவர்கள் இந்த புதிய மாற்றத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

Australian Skilled Visa aspirants, take note! If you’re dreaming of making the land down under your new home for work, significant changes are coming your way. Starting July 1, 2025, Australia will be increasing the income thresholds for its Skilled Visas. This means that the salary you’ll need to qualify is set to rise. Keep a close eye on these updates as they could impact your eligibility and your plans for working in Australia. Wondering how this impacts your plans? Will your dream job in Australia require a bigger paycheck? We break down exactly who will be affected, the reasons behind this shift, and what you need to know to navigate your Australian work visa journey. Plus, there’s a silver lining for current visa holders! Don’t miss out on these crucial updates – dive into the article now!

Source: https://immi.homeaffairs.gov.au/news-media/archive/article?itemId=1308#:~:text=From%201%20July%202025%2C%20indexation,Scheme%20visa%20(subclass%20186).