ஒரு வெளிநாட்டவர் UK-ல் ஒரு தொழிலை ஆரம்பிப்பது எப்படி? (சட்ட மற்றும் நிதி ஆலோசனைகள்)
UK ஒரு பெரிய பொருளாதார சக்தி மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள தொழில்முனைவோருக்கு(Entrepreneurs) எண்ணற்ற வாய்ப்புகளின் கதவைத் திறக்கிறது! ஏன் UK-ல் தொழில் தொடங்க வேண்டும்? சாதகமான வணிகச் சூழல் முதல் சிறந்த போக்குவரத்து வசதிகள் வரை, திறமையான பணியாளர்கள் முதல் குறைந்த நிர்வாகச் செலவுகள் வரை பல காரணங்கள் உங்களை வரவேற்கின்றன.
ஆனால், ஒரு வெளிநாட்டவராக UK-ல் தொழில் தொடங்குவது எப்படி? என்னென்ன சட்டப்பூர்வமான விஷயங்களை கவனிக்க வேண்டும்? விசா பெறுவது முதல் நிறுவனத்தைப் பதிவு செய்வது வரை, சரியான வணிக அமைப்பைத் தேர்ந்தெடுப்பது முதல் வரி விதிமுறைகளைப் புரிந்துகொள்வது வரை அனைத்து முக்கியமான தகவல்களையும் இந்த கட்டுரை வழங்குகிறது.
வங்கிக் கணக்கு திறப்பது எப்படி? முதலீட்டு வாய்ப்புகள் என்னென்ன? புதிய தொழில் தொடங்குபவர்கள் செய்யும் பொதுவான தவறுகள் என்ன, அவற்றை எப்படித் தவிர்ப்பது? உங்கள் எல்லா கேள்விகளுக்கும் தெளிவான பதில்களை இங்கே பெறுங்கள்.
UK-ல் உங்கள் தொழில் கனவை நனவாக்கத் தேவையான அனைத்து சட்ட மற்றும் நிதி ஆலோசனைகளையும் ஒரே இடத்தில் பெறுங்கள்! தொடர்ந்து படியுங்கள்…
ஏன் ஒரு வெளிநாட்டவர் UK-ல் ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும்?
உலகெங்கிலும் உள்ள Entrepreneurs-க்கு UK-ல் ஒரு தொழிலைத் தொடங்குவது மகத்தான நன்மைகளையும் வாய்ப்புகளையும் வழங்குகிறது. United States, China, Japan, Germany மற்றும் India-க்குப் பின்னால், உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக United Kingdom உள்ளது. மேலும் ஐரோப்பாவிற்குள், UK இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. UK, வெளிநாட்டு Entrepreneurs-க்கு முதலீடு செய்து ஒரு தொழிலை ஆரம்பிக்க சாதகமான சில விஷயங்களை வழங்குகிறது,
அவை:
- Entrepreneurs-க்கு ஏற்ற வணிகச் சூழல்
- உறுதியான அரசியல் நிலை
- சிறந்த வீதி, ரயில், விமானம் மற்றும் கடல் போக்குவரத்து வசதிகள்
- ஐரோப்பியாவோடு இணைக்கும் ரயில் சேவை
- திறமையான தொழிலாளர்கள் எளிதில் கிடைத்தல்
- தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் Research நிறுவனங்களின் இருப்பிடம்
- குறைந்தபட்ச நிர்வாக செலவுகள் மற்றும் ‘Red Tape’ (அதிகப்படியான அதிகாரத்துவக் கட்டுப்பாடுகள்)
- ஏராளமான தொடர்புகளையும் வணிக வளர்ச்சியையும் உருவாக்கும் வாய்ப்புகள், மற்றும்
- சட்ட, கணக்கியல், ஊதியம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல வணிக சேவைகளுக்கான எளிதான அணுகல்
வெளிநாட்டு Entrepreneurs-க்கான சட்டத் தேவைகள்:
UK-ல் வணிகம் தொடங்கும்போது வெளிநாட்டு Entrepreneurs பூர்த்தி செய்ய வேண்டிய சட்டப்பூர்வமான விடயங்கள் உள்ளன. அவற்றில் Visas, வணிகத்தின் கட்டமைப்பு மற்றும் நிறுவனத்தை பதிவு செய்வது ஆகியவை அடங்கும்.
UK Business Visa-க்கு தேவையானவை
UK-ல் ஒரு தொழிலை நடத்துவதற்காக நீங்கள் நாட்டிற்குள் நுழையவும், அங்கு தங்குவதற்கான அனுமதியைப் பெறவும் உங்களுக்கு Visa கட்டாயம் இருக்க வேண்டும். வெளிநாட்டு Entrepreneurs-க்கு ஏற்ற பல்வேறு வகையான Visas உள்ளன, அவற்றில் Self-Sponsorship மற்றும் Innovator Founder Visa ஆகியவை அடங்கும்.
UK-ல் Self-Sponsorship முறை, வெளிநாட்டு Entrepreneurs-க்கு இங்கு ஒரு வணிகத்தை நிறுவுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. இதன் மூலம் அவர்கள் தங்களையே Sponsor செய்து கொள்ள முடியும். இதற்காக, UK-ல் வணிகத்துக்கான ஒரு அடிப்படை கட்டமைப்பை (உதாரணமாக, ஒரு இடத்தை வாடகைக்கு எடுப்பது), Sponsor Licence பெறுவது மற்றும் Sponsorship Certificate வழங்குவது அவசியம். இந்த நடைமுறைகளுக்கு UK-ஐச் சேர்ந்த ஒரு குடியேற்ற சட்ட நிறுவனம் உங்களுக்கு உதவி செய்யும்.
வெளிநாட்டு Entrepreneurs, UK-ல் ஒரு புதிய தொழிலை உருவாக்க Innovator Founder Visa உதவுகிறது. UK-ல் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு அந்தத் தொழிலை புதியதாகவும், புதுமையானதாகவும், வளரக்கூடியதாகவும், லாபம் தரக்கூடியதாகவும் சான்றளிக்க வேண்டும். இந்த Visa பெற்றவர்கள் மூன்று ஆண்டுகள் வரை இங்கிலாந்தில் இருக்கலாம். பிறகு விரும்பினால், British Citizenship-க்கு விண்ணப்பிக்கலாம்.
வணிக அமைப்பு:
UK-ல் ஒரு தொழிலை நிறுவ திட்டமிடும் வெளிநாட்டு Entrepreneurs தங்களது தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான வணிக அமைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். UK-ல் மிகவும் பொதுவான சில வணிக அமைப்புகள் பின்வருமாறு:
- தனி வணிகர்கள் (Sole Traders)
- கூட்டாண்மைகள் (Partnerships) மற்றும்
- வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் (Limited Companies)
Limited Liability partnerships(LLPs), Community Interest Companies(CICs) மற்றும் கூட்டுறவு சங்கங்கள் போன்றவையும் வணிக அமைப்புகளுக்கான பிற விருப்பங்களும் உள்ளன. நீங்கள் ஒரு கம்பெனியைத் தொடங்க விரும்பினால், உங்கள் வணிகத்தை Companies House மற்றும் HMRC-இல் பதிவு செய்ய வேண்டியது அவசியம். உங்கள் வணிக அமைப்பு எதுவாக இருக்க வேண்டும் என்றும், கம்பெனியை எப்படிப் பதிவு செய்வது என்றும் தெரிந்துகொள்ள கீழே உள்ள தகவல்களைப் பார்க்கவும்.
சரியான வணிக அமைப்பைத் தேர்ந்தெடுப்பது:
UK-ல் ஒரு வணிகத்தை அமைக்கும்போது, சரியான வணிக அமைப்பைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். அதைத் தீர்மானிக்கும்போது பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களுக்குத் தெளிவு இல்லையென்றால், UK-ல் உள்ள ஒரு கணக்காளரிடம் ஆலோசனை பெறுவது பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் ஒவ்வொரு அமைப்பிலும் உள்ள சட்ட மற்றும் வரி தொடர்பான விடயங்களை பற்றி உங்களுக்குத் தெளிவுபடுத்துவார்கள்.
தனி உரிமையாளர்(Sole Trader) – தனியாக தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு. இதைத் தொடங்குவது சுலபம், அதிக செலவும் இல்லை. ஆனால் இதில் ஒரு குறைபாடு என்னவென்றால், தொழிலில் ஏற்படும் எந்த கடனுக்கும் தனி உரிமையாளரே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் (அதாவது, அவரது தனிப்பட்ட சொத்துகளும் கடனுக்காக பயன்படுத்தப்படலாம்).
வரையறுக்கப்பட்ட நிறுவனம் (Limited Company-Ltd) – வெளிநாட்டிலிருந்து வரும் Entrepreneurs-ஆல் மிகவும் விரும்பப்படும் தேர்வாக இது உள்ளது. இது அதன் உரிமையாளர்களிடமிருந்து ஒரு தனி சட்டப்பூர்வமான நிறுவனத்தை உருவாக்குகிறது மற்றும் கடன்களிலிருந்து வரையறுக்கப்பட்ட பொறுப்பை வழங்குகிறது, அதாவது உரிமையாளரின் தனிப்பட்ட சொத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றன.
கூட்டாண்மை(Partnership) – இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து ஒரு வணிகத்தை நடத்த விரும்பினால், அவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது Partnership முறையைத்தான். இதில் வணிகத்தின் கடன்கள் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படும். மேலும், LLPs தவிர மற்ற Partnership-ஐ Companies House-ல் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
UK-ல் உங்கள் வணிகத்தைப் பதிவு செய்தல்:
UK-ல் வணிகத்தைப் பதிவு செய்வது வெளிநாட்டினருக்கு மிகவும் விரைவான மற்றும் எளிதான செயல்முறையாகும். நீங்கள் ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனத்தை (Limited Company) UK-ல் பதிவு செய்ய விரும்பினால், இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
உங்கள் நிறுவனத்தை Companies House-ல் பதிவு செய்யுங்கள் – இதை நீங்கள் நேரடியாக Companies House இணையதளம் மூலமாகவோ அல்லது ஒரு நிறுவன உருவாக்கும் நிபுணர் மூலமாகவோ செய்யலாம். பதிவுக் கட்டணம் தற்போது £50 ஆகும், மேலும் உங்கள் நிறுவனம் பொதுவாக 24 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்படும், மற்றும்
Companies House உங்களுக்கு நிறுவனச் சான்றிதழை வழங்கும். பதிவு செய்யும்போதே, உங்கள் நிறுவனம் Corporation Tax செலுத்துவதற்காக HMRC-இலும் பதிவு செய்யப்படும். நீங்கள் UK-ல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால், PAYE (சம்பாதித்தவுடன் வரி செலுத்தும் முறை) திட்டத்திலும் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
வெளிநாட்டு வணிக உரிமையாளர்களுக்கான UK வரிவிதிப்பைப் புரிந்துகொள்வது
வணிகங்களுக்கான UK வரி முறையைப் புரிந்துகொள்வது முக்கியம். வெளிநாட்டு வணிக உரிமையாளர்களுக்கான UK வரி முறை ஒப்பீட்டளவில் எளிமையானது மற்றும் நேரடியானது. உங்களுக்கு UK-ல் நிரந்தர வணிக ஸ்தாபனம் இருந்தால், UK வரி செலுத்தப்பட வேண்டும். நீங்கள் வேறொரு நாட்டில் வசித்துக்கொண்டு இங்கு வணிகம் நடத்தினால், அந்த நாட்டிலும் நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கலாம். இது ‘Double Taxation’ என்று குறிப்பிடப்படுகிறது.
நீங்கள் தேர்ந்தெடுத்த வணிக அமைப்பின் வகையைப் பொறுத்தே, உங்கள் வணிகம் UK வரிவிதிப்பின் அடிப்படையில் எவ்வாறு நடத்தப்படும் என்பது பெரும்பாலும் அமையும்.
நீங்கள் UK-ல் ஒரு தனி வணிகம்(Sole Trader) அல்லது கூட்டாண்மை வணிகத்தை(Partnership Business) நடத்தினால், பின்வரும் விகிதங்களில் வருமான வரி(Income Tax) செலுத்த வேண்டியிருக்கும்:
2024/25 ஆம் ஆண்டிற்கான UK Income Tax விகிதங்கள்:
- £0 முதல் £12,570: 0% (தனிநபர் வரிச் சலுகை)
- £12,571 – £50,270: 20%
- £50,271 – £125,140: 40%
- £125,140-க்கு அதிகமான வருமானத்திற்கு: 45%
மாறாக, நிறுவனங்கள் UK-ல் பெறும் வருமானத்திற்கு Corporation Tax-ஐ பின்வரும் முறையின்படி செலுத்த வேண்டும்:
- £50,000க்கும் குறைவான லாபம் உள்ள நிறுவனங்களுக்கு 19% வரி விதிக்கப்படும்.
- £250,000க்கு அதிகமான லாபம் உள்ள நிறுவனங்களுக்கு 25% வரி விதிக்கப்படும்.
மேலும், உங்கள் நிறுவனத்தின் லாபத்திலிருந்து உங்களுக்கு பங்கு ஈவுத்தொகையாக(Dividends) வழங்கப்பட்டால், நீங்கள் 8.75% முதல் 39.35% வரை Dividend Tax செலுத்த வேண்டியிருக்கும்.
உங்கள் வணிகம் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் UK கிளையாக வகைப்படுத்தப்பட்டால், அது UK-ல் இருந்து பெறப்பட்ட லாபத்தின் மீது வரி விதிக்கப்படும் (லாபங்கள் UK-ல் 25% வரை Corporation Tax-க்கு உட்பட்டவை).
உங்கள் வணிகத்தின் வருடாந்த விற்பனை £90,000 ஐத் தாண்டும்போது, நீங்கள் கட்டாயமாக VAT-க்கு பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு, நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கு 20% VAT வசூலித்து அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும்.
வணிக வங்கி மற்றும் நிதி அமைப்பு
UK-ல் வணிகம் செய்யும் வெளிநாட்டினர், வணிக நடவடிக்கைகளுக்கென தனியாக ஒரு வங்கிக் கணக்குத் தொடங்குவது மிகவும் நல்லது. மேலும், தங்களுடைய சொந்த தனிப்பட்ட பணத்துக்கான வங்கிக் கணக்கையும், அவர்களுடைய வணிகத்தின் பணத்துக்கான வங்கிக் கணக்கையும் வெவ்வேறாகப் பிரித்து பராமரிப்பது முக்கியம்.
UK-ல் ஒரு வணிக வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டுமென்றால், நீங்கள் கட்டாயம் அங்கு நேரில் இருக்க வேண்டும். மேலும், உங்களுக்கு அங்கு நிரந்தர முகவரியும் தேவை. UK Banks வாடிக்கையாளரை அறிதல் (KYC) மற்றும் பண மோசடி தடுப்பு (AML) போன்ற நடவடிக்கைகளை மிகக் கடுமையாகப் பின்பற்றுகின்றன.
உங்களுக்கு UK-ல் முறையாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனம் இருந்தால், அத்துடன் UK-ல் முகவரியும் வணிக நடவடிக்கைகளும் இருந்தால், மேலும் உங்கள் வணிகம் Cryptocurrency அல்லது சூதாட்டம் போன்ற அதிக ஆபத்து நிறைந்த துறைகளில் இல்லையென்றால், இந்த சரிபார்ப்புகளில் வெற்றி பெறுவது சுலபம்.
உங்களிடம் UK-ல் பதிவு செய்யப்பட்ட வணிகம் இல்லையென்றால், சர்வதேச அல்லது Digital Banking போன்ற வேறு வழிகளும் உள்ளன.
வெளிநாட்டு Entrepreneurs-க்கான முதலீட்டு வாய்ப்புகள்
வணிகங்களுக்கும் வெளிநாட்டு Entrepreneurs-க்கும் நீண்டகாலமாக முக்கிய இடமாக விளங்கும் UK, பல்வேறு வகையான மானியங்கள், கடன்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது.
குறிப்பாக, UK-ல் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கான நிதி உதவிகளும் உள்ளன. UK அரசாங்கத்தின் இணையதளத்தில், அரசாங்க மானியங்கள் பற்றிய விவரங்கள் – அவை எங்கு கிடைக்கும், எந்தத் துறைக்கு, எதற்காக, எவ்வளவு தொகை கிடைக்கும் என்பது உட்பட – விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
வணிகங்களுக்கான கடன்கள் UK-ல் பல நிறுவனங்களில் கிடைக்கின்றன. வங்கிகள், அரசாங்கம் (உதாரணமாக, புதிய தொழில் தொடங்குவதற்கான(Start-up) கடன்கள்), மற்றும் சிறப்பு கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும். கடன் கொடுப்பதற்கான கடுமையான தகுதிகள் பொதுவாக வணிகத்தின் நம்பகத்தன்மை மற்றும் நிதி நிலை, கடன் வரலாறு, பாதுகாப்பு மற்றும் பிணையம், வணிகத்தின் செயல்பாட்டு வரலாறு, கடனுக்கான காரணம், கடனைத் திருப்பிச் செலுத்தும் வணிகத்தின் ஆற்றல் மற்றும் தற்போதைய சந்தை நிலவரங்கள் போன்றவற்றை சார்ந்திருக்கும்.
வேறு முதலீட்டு வழிகளைத் தேடுபவர்களுக்கு, UK-ல் Angel Investors, Venture Capitalists, தனியார் பங்கு முதலீட்டாளர்கள் மற்றும் பலரும் உள்ளனர். மேலும், Crowdfunding மூலமாகவும் முதலீடு திரட்டும் வாய்ப்புகள் இங்கு அதிகம்.
பொதுவாக நிகழும் தவறுகளும், அதற்கான தீர்வுகளும்
உங்கள் புதிய வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவதற்கு முன், மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள். பொதுவாக நிகழும் சில தவறுகளும், அவற்றை எப்படி சரி செய்வது என்பதையும் பார்க்கலாம்:
- முழுமையாக ஆராயாமல் இருப்பது: வெற்றி பெற்ற வெளிநாட்டு தொழில்முனைவோர் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்திருப்பார்கள். அதனால், நீங்களும் உங்கள் சந்தை, போட்டி, ஏற்படக்கூடிய ஆபத்துகள், செலவுகள் போன்றவற்றை நன்கு ஆராய்ந்துவிட்டு அடுத்த அடி எடுத்து வையுங்கள்.
- சரியான வணிகத் திட்டம் இல்லாதது: UK-ல் உங்கள் புதிய வணிகம் வெற்றி பெற ஒரு நல்ல வணிகத் திட்டம் மிக முக்கியம். வணிகத் திட்டத்தை எழுதுவதற்கு ஒரே மாதிரி என்று எதுவும் இல்லை. ஆனால் உங்கள் பொருட்கள், சேவைகள், விற்பனை, விளம்பரம், பணம் மற்றும் வணிக அமைந்திருக்கும் இடம் என எல்லாவற்றையும் அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
- இங்கிலாந்து சட்ட விதிகளைப் புரிந்து கொள்ளாதது: UK சட்ட விதிகளைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பது மிகவும் முக்கியம். உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் கணக்கு விவரங்களை கம்பெனிஸ் ஹவுஸில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஒரு இடத்தின் பயன்பாட்டை மாற்ற வேண்டுமென்றால் அதற்கு அனுமதி பெற வேண்டும்.
As a foreigner looking to start a business, the UK presents incredible opportunities! This major economic powerhouse acts as a gateway for entrepreneurs worldwide. Why choose the UK for your venture? The reasons are compelling, from a business-friendly environment and robust political stability to excellent transport links and a skilled workforce.
But how exactly do you, as a foreign national, set up shop in the UK? What are the crucial legal steps involved, from navigating visas and choosing the right business structure to company registration and understanding UK tax?
This article breaks down everything you need to know, including opening a business bank account, exploring funding options, and avoiding common pitfalls that new entrepreneurs face.
Unlock all the essential legal and financial advice you need to turn your UK business aspirations into reality – all in one place! Keep reading to discover your path to success…
Source: https://ayjsolicitors.com/how-to-start-a-business-in-the-uk-as-a-foreigner-legal-financial-steps/



