உங்கள் Work Permit காலாவதியான பிறகு Canada-வில் சட்டப்பூர்வமாக எவ்வாறு தங்கலாம்?
Canada அரசாங்கம், 2025 முதல் 2027 வரை புதிய குடியேற்ற திட்டங்களை அறிவித்துள்ளது. இதனால் தற்காலிகமாக வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. உங்கள் Work Permit காலம் முடிவடைந்தால், நீங்கள் Canada-ல் தொடர்ந்து தங்குவதற்கு வேறு வழிகளைத் தேட வேண்டியிருக்கும்.
உங்கள் Work Permit காலம் முடிவடைந்தால், Canadaவில் தொடர்ந்து தங்குவதற்கு ஒரு வழி உள்ளது. அதுதான் பார்வையாளர் பதிவு (Visitor Record). இதை வைத்து நீங்கள் Canada-வில் தற்காலிகமாக தங்கலாம். இதனால், உங்கள் தங்குதல் சட்டப்பூர்வமாக மாறும்.
பார்வையாளர் பதிவு (Visitor Record) என்றால் என்ன?
Visitor Record (VR) உங்கள் Work Permit காலாவதியான பிறகு Canada-வில் உங்கள் சட்டப்பூர்வ தங்குதலை நீட்டிக்கிறது, ஆனால் இது உங்களை வேலை செய்யவோ அல்லது படிக்கவோ அனுமதிக்காது.
தற்காலிக வசிப்பிட விசா(Temporary Resident Visa) உடன் இது எவ்வாறு வேறுபடுகிறது என்பது இங்கே:
- Visitor Record (VR):
- Canada-குள் மட்டுமே செல்லுபடியாகும்; நீங்கள் நாட்டை விட்டு வெளியேறினால் மீண்டும் நுழைவதற்கு அனுமதிக்காது (U.S அல்லது St. Pierre மற்றும் Miquelon போன்ற பக்கத்து நாடுகளுக்கு மட்டும், சில குறுகிய பயணங்கள் செய்யலாம்.அப்படிச் செய்தால், உடனே திரும்பி வர வேண்டும். இந்த விதிவிலக்குகள் அனைவருக்கும் பொருந்தாது, மேலும் சில நிபந்தனைகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.)
- தற்காலிக வசிப்பிட விசா (TRV):
- வெளிநாடு பயணம் செய்த பிறகு Canadaவிற்குள் மீண்டும் நுழைவதற்கான ஆவணம், ஆனால் Canadaவிற்குள் உங்கள் தங்குதலை நீட்டிக்காது.
Visitor Record–ற்கு விண்ணப்பிப்பது எப்படி.
1. நேரம் மிகவும் முக்கியமானது, எனவே உங்கள் Work Permit காலாவதியாகும் முன் விண்ணப்பிக்கவும்:
உங்கள் Work Permit முடியப் போகிறதென்றால், தாமதிக்காமல் உடனே பார்வையாளர் பதிவுக்கு (Visitor Record) விண்ணப்பியுங்கள். நீங்கள் சரியான நேரத்தில் விண்ணப்பித்தால், உங்கள் Work Permit முடிந்த பிறகும் Canadaவில் சட்டப்பூர்வமாகத் தங்கலாம். இல்லாவிட்டால் நீங்கள் Canada-வில் தங்குவதற்குச் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டவரா இல்லையா என்பதில் சந்தேகம் ஏற்படும்.
2. Visitor Record-க்கு (VR) விண்ணப்பிக்க வேண்டுமென்றால், IRCC (கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை) அமைப்பின் பாதுகாப்பான கணக்கைப் பயன்படுத்துங்கள். தற்காலிக வசிப்பிட விசாவுக்கு (TRV) விண்ணப்பிக்கும் தளத்தை பயன்படுத்தாதீர்கள்.
3. தற்காலிக நோக்கத்தை நிரூபித்தல்:
Canada-வில் பார்வையாளர் பதிவுக்கு (Visitor Record-VR) விண்ணப்பிக்கும்போது, நீங்கள் தற்காலிகமாகத்தான் இருக்கப் போகிறீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் . அதுக்கு சில ஆதாரங்கள் காட்ட வேண்டும்.
- உதாரணமாக உங்கள் சொந்த நாட்டில் உங்களுக்கு வீடு, நிலம் இருக்கின்றதுக்கான பத்திரங்களை காட்டலாம். மேலும் சொத்து பத்திரங்கள், குடும்ப உறவுகள் அல்லது சொந்த நாட்டில் வேலை வாய்ப்புகள் போன்ற ஆதாரங்களை காட்டலாம்.
- வெளியேறும் திட்டம்: உங்கள் தற்காலிக வசிப்பிட நிலை முடிந்ததும் Canada-வை விட்டு வெளியேற உங்கள் நோக்கத்தை காட்டும் தெளிவான, ஆவணப்படுத்தப்பட்ட திட்டம்.
Maintained (Implied) Status
நீங்கள் Canada-வில் Visitor Record-க்கு (VR) விண்ணப்பித்தால், உங்கள் விண்ணப்பம் முடியும் வரை நீங்கள் அங்கேயே சட்டப்பூர்வமாக இருக்கலாம். அதாவது, உங்கள் விண்ணப்பம் முடிவு பெறும் வரை நீங்கள் Canada-வில் இருக்கலாம். ஆனால், நீங்கள் வேலை செய்ய முடியாது. ஒருவேளை நீங்கள் Work Permit-லிருந்து Visitor மாற விரும்பினால், உங்கள் Work Permit முடிந்தவுடன் நீங்கள் வேலை செய்வதை நிறுத்த வேண்டும்.
Work Permit காலாவதியான பிறகு வேலை செய்தால், அது சட்டவிரோதமானது. Visitor Record என்பது Canadaவில் பார்வையாளராக தங்குவதற்கான உங்கள் சட்டப்பூர்வ நிலையை உறுதிப்படுத்தும் ஒரு ஆவணமாகும்.
சட்ட நுணுக்கங்கள் மற்றும் விதிமுறைகள்
Canada-ல் நீங்கள் எவ்வளவு காலம் தங்கலாம், எப்போது தங்கலாம் என்பது பற்றி IRPR(குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகள்) சட்டத்தில் 183(5) மற்றும் 186(u) என்ற இரண்டு பிரிவுகள் கூறுகின்றன.
நீங்கள் சரியான நேரத்தில் பார்வையாளர் பதிவுக்காக (VR) விண்ணப்பித்தால், உங்கள் விண்ணப்பம் முடியும் வரை நீங்கள் Canada-வில் தொடர்ந்து இருக்கலாம். உங்கள் தற்போதைய அனுமதி காலம் தானாகவே நீட்டிக்கப்படும்.
குடிவரவு நிலை மீட்பு(Restoration of Status)
உங்கள் அனுமதி காலம் முடிந்துவிட்டதா? கவலை வேண்டாம், உங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளன.அனுமதி காலம் முடிந்தால், 90 நாட்களுக்குள் அதை மீண்டும் பெற விண்ணப்பிக்க வேண்டும். இது IRPR(குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகள்) சட்டத்தின் 182வது பிரிவில் உள்ளது.
விண்ணப்பத்தை சரியாக, முழுமையாக நிரப்ப வேண்டும். ஒரு நபருக்கு 200 டாலர் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை செலுத்த வேண்டும்.
முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லா விதிமீறல்களுக்கும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியாது.
உதாரணமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் (DLI) பதிவு செய்யாமல், அல்லது படிப்பை தொடராமல் இருந்தால், மாணவர் அனுமதியை மீண்டும் பெற முடியாது.
ஆலோசனை
உங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டால், குடிவரவு நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். ஏனென்றால், விண்ணப்பத்தை சரியாகச் செய்வது முக்கியம்.
Canada-வில் Work Permit-லிருந்து பார்வையாளர் நிலைக்கு மாற, கனடா குடிவரவு சட்டங்களை, குறிப்பாக பார்வையாளர் பதிவைப் (Visitor Record) பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். இது கொஞ்சம் சிக்கலானது.
நீங்கள் வீட்டிற்குத் திரும்புவதா அல்லது Canada-வில் தங்குவதா என்பதைத் திட்டமிடும்போது, Canada-வில் சட்டப்படி இருக்க இந்த வழிகாட்டி உதவும்.
உங்களுக்கு இன்னும் கூடுதலான தகவல் அல்லது உங்களுக்காக தனிப்பட்ட ஆலோசனை தேவைப்பட்டால், குறிப்பாக உங்கள் பழைய நிலைக்குத் திரும்புவது பற்றி, குடிவரவு நிபுணர்களை அணுகுங்கள்.
அல்லது, TRV படிப்புகள் மற்றும் நோக்கக் கடிதம் வழிகாட்டிகள் போன்ற கல்வி சம்பந்தமான உதவிகளை நாடலாம்.
To legally stay in Canada after your work permit expires, apply for a Visitor Record. This does not allow you to work or study. Apply for the Visitor Record before your work permit expires and prove your temporary intent. You can stay in Canada until your application is processed. If your permit has already expired, apply for restoration within 90 days. For complex situations, consult an immigration expert.



