UK-ல் தமிழ் பட்டதாரிகள் தங்களின் முதல் வேலையை எப்படி பெறலாம்?

பல தமிழ் மாணவர்கள் உயர்ந்த கனவுகளுடன் UK-க்கு வருகிறார்கள். ஆனால் Degree முடிந்த பிறகு எதிர்காலம் சில நேரங்களில் தெளிவில்லாமல் தோன்றலாம். உங்கள் பட்டத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது மனதில் கேள்விகள் எழலாம்:
“என் Visa முடிந்து விடுமா?”, “Employers என்னை வேலைக்கு ஏற்பார்களா?”

Stress, குழப்பம், சில சமயம் பயம் கூட உணரப்படுவது இயல்பு. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் மட்டும் அல்ல. பல International Graduates இதே கவலைகளை சந்திக்கிறார்கள்.

இந்தக் கட்டுரை உங்கள் நெருங்கிய நண்பர் போல தான் Visa, sponsorship, கலாச்சார வேறுபாடுகள், குடும்ப எதிர்பார்ப்புகள் போன்ற உங்கள் தனிப்பட்ட கவலைகளை நாங்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளோம். அதனால், நீங்கள் எளிதில் பின்பற்றக்கூடிய நடைமுறை, படிப்படையான ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன, மேலும் இதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.


Degree முடிந்த பிறகு உங்கள் Visa வாய்ப்புகள்

01. Graduate Route (Post-Study Work Visa)

UK-ல் Degree முடித்த பிறகு, Graduate Route Visa மூலம்:

  • Bachelor / Master – 2 வருடங்கள்
  • PhD – 3 வருடங்கள்

இந்த Visa மூலம் UK-ல் Sponsorship இல்லாமல் எந்த வேலையிலும் வேலை செய்யலாம்.

முக்கியம்:
இந்த Visa காலத்தை நீடிக்க முடியாது. காலம் முடியும் முன் மற்றொரு Visa (பொதுவாக Skilled Worker Visa) க்கு மாற வேண்டும்.


02. Skilled Worker Visa

Graduate Visa முடியும் முன், நீங்கள்:

  • UK sponsor licence கொண்ட நிறுவனத்தில் full-time job offer பெற வேண்டும்
  • Company உங்களுக்கு Certificate of Sponsorship (CoS) வழங்க வேண்டும்
  • வேலைக்கான தகுதிக்குரிய தொழில்கள் பட்டியலில் இருக்க வேண்டும்
    (Job Eligible Occupation List)
  • குறைந்தபட்ச சம்பளம் (பொதுவாக £41,700 அல்லது வேலைக்கான தற்போதைய விகிதம்)
  • சில வேலைப்பிரிவுகள் (Shortage Occupations)க்கு சம்பளமாக சுமார் £33,400 வரை அனுமதி வழங்கப்படலாம்.

Sponsor List-ஐ GOV.UK Website-ல் சரிபார்க்கவும்.

கால நேரம் மிக முக்கியம் (Timing is Critical)
உங்கள் Visa முடிவதற்கு முன்பே Skilled Worker Visa-க்கு விண்ணப்பிக்கத் தயாராக இருக்க வேண்டும். காலக்கெடுவைத் தவறவிட்டால், நீங்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.


முதல் வேலை பெற Step-by-Step வழிகாட்டி

01. உங்கள் CV-யை UK தரநிலைக்கு ஏற்ப மேம்படுத்துங்கள் (UK Standard CV)

UK-இல் பணியமர்த்துநர்கள் தெளிவாகவும் சுருக்கமான தயாரிக்கப்பட்ட CV-ஐ எதிர்பார்க்கிறார்கள்.

  • CV-ஐ 2 பக்கங்களுக்குள் வைத்திருங்கள்.
  • உங்கள் தனிப்பட்ட தகவல்கள் (பெயர், Email, UK Address, தொலைபேசி எண்) சேர்க்கவும்.
  • மேல் பகுதியில் ஒரு சிறிய Profile Summary எழுதுங்கள்.
  • உங்கள் கல்வி விவரங்கள் (UK Degree-ஐ குறிப்பாக குறிப்பிடுங்கள்).
  • உங்கள் வேலை அல்லது தன்னார்வ அனுபவங்களை, சமீபத்திய அனுபவத்தை முதலில் வருமாறு (பின்னோக்கி காலவரிசையில்) வரிசைப்படுத்துங்கள்.(Reverse Chronological Order)
  • உங்கள் திறன்கள் மற்றும் சாதனைகளை bullet points மூலம் தெளிவாக காட்டுங்கள்.

உங்கள் International qualification இருந்தால், அதை UK அளவுகோலுக்கு ஒப்பிட்டுக் குறிப்பிடுங்கள்
(Eg: “A-Levels-க்கு சமமானது” என்று).

எளிய ஆங்கிலம் மற்றும் குறுகிய வாக்கியங்களை பயன்படுத்துங்கள்.

ஒவ்வொரு வேலைக்கும் உங்கள் CV-ஐ மாற்றி அமைக்க வேண்டும். Job Advertisement-ல் வரும் Keywords-ஐ பயன்படுத்துங்கள்.

உதாரணமாக, “Project Management Skills” தேவை என்று இருந்தால், நீங்கள் நிர்வகித்த ஒரு குறிப்பிட்ட Project-ஐ உங்கள் CV-ல் தெளிவாக எழுதுங்கள்.

இறுதியாக, கவனமாக Proofread செய்யுங்கள், ஒரு சிறிய தவறு கூட உங்கள் வாய்ப்பை பாதிக்கலாம்.


02. ஒரு வலுவான Cover Letter எழுதுங்கள்

பணியமர்த்துநர்கள் குறிப்பாக வேண்டாம் என்று சொல்லாத வரை, உங்கள் CV-க்கு கூடவே எப்போதும் Cover Letter அனுப்புங்கள்.

Cover Letter-ஐ 3-4 குறுகிய பதிவுகளாக எழுதுங்கள்:

  • முதலில், உங்களை சுருக்கமாக அறிமுகப்படுத்துங்கள்.
  • அந்த வேலை வாய்ப்பை எப்படி கண்டுபிடித்தீர்கள் என்பதை குறிப்பிடுங்கள்.
  • அந்த குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் ஏன் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை விளக்குங்கள்.

நிறுவனத்தைப் பற்றி முன்கூட்டியே ஆராயுங்கள் (அவர்களின் Website அல்லது சமீபத்திய செய்திகள் மூலம்). அவர்களின் பண்பாடு (Company Culture) உங்களுக்கு எப்படி பொருந்துகிறது என்பதை சொல்லுங்கள்.


03. LinkedIn மற்றும் Online Profile-களை பயனுள்ளதாக பயன்படுத்துங்கள்

உங்கள் LinkedIn profile-ஐ உருவாக்குங்கள் அல்லது புதுப்பிக்குங்கள். அதில் உள்ள தகவல்கள் உங்கள் CV-யில் உள்ள விவரங்களுடன் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.

  • ஒரு தெளிவான, நட்பான Profile Photo சேர்க்கவும்.
  • “Chemical Engineer | Graduate seeking opportunities” போன்ற ஒரு தெளிவான headline எழுதுங்கள்.

உங்கள் துறையில் உள்ள UK professionals, உங்கள் பல்கலைக்கழக alumni, மற்றும் recruiters-களுடன் connect செய்யுங்கள்.

உங்கள் படிப்பு, Project, Internship அனுபவம் போன்றவற்றைப் பற்றி பதிவுகள் (Posts) பகிருங்கள். இது உங்கள் ஆர்வத்தையும் செயல்பாட்டையும் காட்டும்.

LinkedIn ஒரு மிக சக்திவாய்ந்த Networking Tool ஆகும். பல வேலைகள் (சுமார் 70%) பொதுவாக விளம்பரப்படுத்தப்படுவதில்லை. Recruiters பல நேரங்களில் LinkedIn-ல் நேரடியாகவே வேட்பாளர்களை தேடுகிறார்கள்.

மேலும், Prospects.ac.uk போன்ற Websites-யும், LinkedIn Job Search filters-ஐயும் பயன்படுத்தி “Visa Sponsorship” அல்லது “Graduate Visa” என்று குறிப்பிடப்பட்டுள்ள வேலைகளைத் தேடுங்கள்.


04. திட்டமிட்டு விண்ணப்பிக்குங்கள்

உங்கள் CV-ஐ எல்லா வேலைகளுக்கும் அனுப்புவதற்குப் பதிலாக, Visa sponsorship வழங்கக்கூடிய நிறுவனங்களைத் தேர்வு செய்து விண்ணப்பிக்குங்கள்.

அங்கீகரிக்கப்பட்ட Employers பட்டியலை பார்க்க அரசின் Register of Licensed Sponsors பட்டியலை பயன்படுத்துங்கள்.

பல பட்டதாரிகள் பெரிய நிறுவனங்களிலேயே கவனம் செலுத்துவார்கள். ஆனால் சிறிய நிறுவனங்களை (SMEs – Small & Medium Enterprises) புறக்கணிக்க வேண்டாம்.

UK-ல் பல சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சரியான திறமை கொண்ட international graduates-ஐ நியமித்து, Visa sponsorship கூட வழங்குகின்றன.

சிறிய நிறுவனங்களில்:

  • பல துறைகளை அனுபவிக்க விரிவான வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.
  • வேகமான Career Growth கிடைக்கும் வாய்ப்பும் அதிகம்.

05. University Career Services பயன்படுத்துங்கள்

UK-இல் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் சிறந்த career support சேவைகளை வழங்குகின்றன – பல சமயங்களில் இது lifelong support ஆகவும் இருக்கும்.

அவர்கள்:

  • உங்கள் CV மற்றும் Cover Letter-ஐ review செய்து கருத்து தெரிவிப்பார்கள்.
  • Mock interview (பயிற்சி நேர்காணல்) நடத்துவார்கள்.
  • நேரடியாக employers-களுடன் connect செய்ய உதவுவார்கள்.

மேலும், Job Fairs மற்றும் Career Workshops போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்துவார்கள்.

சர்வதேச மாணவர்களுக்கு, Career Center-ஐ பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், CV review, Mock interview, Job Application Guidance போன்ற உதவிகளை பெறலாம்.


06. Networking & Tamil Community Support

வேலை தேடும்போது, எல்லா வேலை வாய்ப்புகளும் இணையதளங்களில் வெளியிடப்படாது. பல “Hidden Jobs” (வெளியில் அறிவிக்கப்படாத வேலைகள்) நெட்வொர்க்கிங் மூலம் தான் கிடைக்கின்றன.

அதனால்,

  • தமிழ் தொழில்முறை (Professional) குழுக்களில் சேருங்கள்
  • Alumni events (முன்னாள் மாணவர் சந்திப்புகள்) கலந்து கொள்ளுங்கள்
  • LinkedIn குழுக்கள் மற்றும் தொடர்புகளை பயன்படுத்துங்கள்

உங்கள் தமிழ் சமூகமே (Community) ஒரு பெரிய ஆதாரமாக இருக்க முடியும். சரியான தொடர்புகள் இருந்தால், வேலை வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள் எளிதாக கிடைக்கும்.


பொதுவான தவறுகள்

பொதுவான CV அனுப்புதல்
ஒவ்வொரு வேலைக்கும் தனிப்பயன் மாற்றம் செய்யாமல் ஒரே மாதிரியான CV அனுப்புவது தவறு.

London மட்டும் கவனம் செலுத்துதல்
UK முழுவதும் வாய்ப்புகள் இருக்கின்றன. லண்டன் மட்டும் பார்த்தால் பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

Networking-ஐ புறக்கணித்தல்
தொடர்புகளை உருவாக்காமல் இருப்பது வேலை தேடலில் பெரிய குறையாகும்.

தாமதமாக ஆரம்பித்தல்
படிப்பு முடிந்த பிறகு வேலை தேட ஆரம்பிப்பது பதிலாக, முன்கூட்டியே திட்டமிட்டு தொடங்க வேண்டும்.

UK முறை Interview தயாரிப்பு இல்லாமை
UK-க்கு உரிய interview முறை, பொதுவான கேள்விகள், நடத்தை சார்ந்த (behavioral) கேள்விகள் ஆகியவற்றிற்கு தயாராக இல்லாமல் செல்வது வாய்ப்பை குறைக்கும்.


FAQs

01. Graduate visa இருந்து Skilled Worker visa-க்கு எப்போது மாறலாம்?

விசா காலாவதியாகும் முன் உங்களிடம் சரியான Job Offer மற்றும் Certificate of Sponsorship (CoS) இருந்தால், எந்த நேரத்திலும் விண்ணப்பிக்கலாம்.

02. ஒரு நிறுவனம் sponsor செய்கிறதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

அந்த நிறுவனம் Skilled Worker Visa Sponsor செய்ய அங்கீகாரம் பெற்றதா என்பதை அறிய,

GOV.UK Register of Licensed Sponsors பட்டியலை பார்க்க வேண்டும்.

அதில் அந்த நிறுவனத்தின் பெயர் இருந்தால், அவர்கள் Sponsor செய்ய அனுமதி பெற்றவர்கள் என்பதைக் உறுதிப்படுத்தலாம்.

03. குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு?

பொதுவாக Skilled Worker Visa-க்கு தேவையான குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் £41,700 ஆகும்.

ஆனால், சில வேலைகளில் அந்த தொழிலுக்கான “Going Rate” (அந்த Job-க்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பள அளவு) வேறுபடலாம்.

04. Part-time job மூலம் sponsorship கிடைக்குமா?

பொதுவாக இல்லை. Skilled Worker Visa-க்கு பெரும்பாலும் Full-time Contract (முழுநேர வேலை ஒப்பந்தம்) தேவைப்படுகிறது.

05. Visa Expiry அருகில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் Visa முடிவதற்கு அருகில் இருந்தால், எந்த சூழ்நிலையிலும் Overstay செய்யக்கூடாது.

தகுதியான Visa வகை இருந்தால், உடனடியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்குங்கள்.

காலாவதியான பிறகு விண்ணப்பிப்பது சட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தலாம், அதனால் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம்.


Finding your first job in the UK as a Tamil fresh graduate can be challenging. This guide explains key steps, including visa options, switching to a Skilled Worker Visa, preparing a strong CV and cover letter, leveraging LinkedIn and networking, understanding UK interview styles, and avoiding common mistakes. The practical, step-by-step advice helps international graduates navigate their first job search with confidence. With persistence, preparation, and networking, landing your first role becomes much more achievable.

மேலும் UK வேலைவாய்ப்பு மற்றும் Visa தொடர்பான தகவல்களுக்கு எங்களை Follow செய்யுங்கள்.
இந்த கட்டுரை உங்களுக்கு உதவியாக இருந்தால் உங்கள் தமிழ் நண்பர்களுடன் பகிருங்கள்.
உங்கள் முதல் வேலை வாய்ப்பு மிகவும் அருகில் இருக்கலாம்.
நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்!