Diversity Visa Lottery (Green Card Lottery) விண்ணப்பிப்பது எப்படி?

Green Card Lottery என்பது அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க ஒரு வாய்ப்பைத் தரும் ஒரு சிறந்த வாய்ப்பு. இதில் பங்கேற்க நீங்கள் செய்ய வேண்டியது Online ல் ஒரு எளிய படிவத்தை நிரப்புவதே, இதற்கு எந்த செலவும் இல்லை. நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் October தொடக்கம் November மாத காலங்கள் வரை Lottery க்கு விண்ணப்பிக்கலாம். ஒரு கணினி வெற்றியாளர்களை Random ஆன முறையில் தேர்வு செய்கிறது, அவர்களும் அவர்களின் நெருங்கிய குடும்பத்தினரும் (Spouse, Kids, Parents, and Siblings) Green Card க்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்களாக இருப்பார்கள்.

1. விண்ணப்பிக்க தகுதி உள்ளதா என்று சரி பார்த்தல்:

நீங்கள் பிறந்த நாடு, Green Card Lottery ல் பங்கேற்க தகுதியான நாடுகளின் பட்டியலில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், உங்களுக்கு உயர்நிலைப் பாடசாலை கல்வி அல்லது அதற்கு சமமான வேலை அனுபவமும் தேவைப்படும்.

  • “பிறப்பிட நாடு (Country of Birth)” என்பதற்கு, நீங்கள் பிறந்த நாட்டை பட்டியலிடுங்கள், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல். பிறந்தபோது நாட்டிற்கு வேறு பெயர் இருந்தால், அதன் தற்போதைய பெயரைப் பயன்படுத்துங்கள்.
  • “தகுதியான நாடு (Country of Eligibility)” என்பதற்கு, உங்கள் பிறப்பிட நாட்டை அல்லது – நீங்கள் உங்கள் வாழ்கை துணைவர் அல்லது உங்கள் பெற்றோரின் பிறப்பிட நாடுகளைப் பயன்படுத்த தகுதியானவராக இருந்தால் – அந்த நாட்டை தெரிவு செய்யுங்கள். நீங்கள் தற்போது வசிக்கும் நாடு இந்த கேள்விக்கு பொருத்தமற்றது.

2. தேவையான தகவல்களை சேகரித்தல்:

உங்கள் பெயர், பிறந்த திகதி மற்றும் Passport தகவல் போன்ற தனிப்பட்ட விவரங்களும், உங்கள் வாழ்கை துணைவர் மற்றும் குழந்தைகளுக்கான ஒத்த தகவல்களும் தேவைப்படும்.

  • அவர்கள் உங்களுடன் வாழ்வதில்லை அல்லது குடிபெயர விரும்பவில்லை என்றாலும், உங்கள் துணைவரை பட்டியலிட வேண்டும்.
  • உங்களுக்கு சொந்தமாகப் பிறந்த குழந்தைகள், தத்தெடுத்த குழந்தைகள் அல்லது உங்கள் திருமணத்தின் மூலம் வந்த குழந்தைகள் என அனைவரையும் பற்றிய தகவல்களை கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் எவ்வளவு வயதுடையவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் விவரங்களை நீங்கள் கொடுக்க வேண்டும். உங்கள் முன்னாள் துணைவரின் குழந்தைகள் (21 வயதுக்குள்) இருந்தால், அவர்களின் விவரங்களையும் கொடுக்க வேண்டும்.

3. Prepare a Photo:

ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் சமீபத்தில் எடுத்த ஒரு Passport-Style புகைப்படம் தேவைப்படும்.

U.S. Citizenship and Immigration Services (USCIS) Green Card விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய உதவும் ஒரு Professional Visa புகைப்பட சேவையைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறது. நீங்கள் புகைப்படத்தை நீங்களே எடுக்க திட்டமிட்டால், இங்கே தேவைகளின் பட்டியல் உள்ளது:

  1. புகைப்படம் நிறத்தில் இருக்க வேண்டும்.
  2. புகைப்படம் முடியின் மேலிருந்து தாடையின் கீழ் வரை முழு தலையையும் காட்ட வேண்டும்.
  3. தலையை Frame ல் மையப்படுத்த வேண்டும்.
  4. புகைப்படத்தில் உள்ள நபர் நடுநிலையான முகபாவனை கொண்டிருக்க வேண்டும் மற்றும் camera வை நோக்கி பார்க்க வேண்டும்.
  5. புகைப்படம் 2 அங்குலம் x 2 அங்குலம் (Inches) அளவில் இருக்க வேண்டும்.
  6. உங்கள் தலையின் உயரம் 1 அங்குலம் முதல் 1 மற்றும் 3/8 அங்குலம் (25 mm – 35 mm) வரை அளவிடப்பட வேண்டும்.
  7. கண்ணின் உயரம் புகைப்படத்தின் அடிப்பகுதியிலிருந்து 1 மற்றும் 1/8 அங்குலம் முதல் 1 மற்றும் 3/8 அங்குலம் (28 mm – 35 mm) வரை இருக்க வேண்டும்.
  8. கடந்த 6 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்க வேண்டும்.
  9. வெள்ளை அல்லது Off-White பின்னணியில் எடுக்கப்பட வேண்டும். (Background)
  10. நடுநிலையான முகபாவனை (Neutral Facial Expression) மற்றும் இரண்டு கண்களும் திறந்திருக்க வேண்டும்.
  11. நீங்கள் தினமும் அணியும் மத ஆடை (Religious Clothing) தவிர, உங்கள் புகைப்படத்தில் சீருடைகள் (Uniforms) அணியக்கூடாது.
  12. தினமும் மத காரணங்களுக்காக அணியப்படும் தலைப்பாகை தவிர, முடியை மறைக்கும் Hat அல்லது தலைப்பாகை அணியக்கூடாது.
  13. No Headphones, Wireless Hands-Free Devices, அல்லது other Electronic Devices.
  14. கண்ணாடி அணியக்கூடாது, ஆனால் மருத்துவ காரணங்களுக்காக மாத்திரம் கண்ணாடி அணிய முடியும். உதாரணமாக, விண்ணப்பதாரர் சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை செய்திருந்தால். மருத்துவரால் கையெழுத்திடப்பட்ட மருத்துவ அறிக்கை சேர்க்கப்பட வேண்டும். 

(Sunglasses or Tinted Glasses are not Permitted)

For more information about Photo Requirements

4. உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்:

Official Online விண்ணப்ப படிவத்தை துல்லியமாகவும் முழுமையாகவும் நிரப்பவும். நுழைவதற்கான கட்டணம் இல்லை.

5. உங்கள் Confirmation Number ஐ பாதுகாத்து வைக்க வேண்டும்:

பின்னர் உங்கள் விண்ணப்ப நிலையை சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது. மற்றும் உங்களது Confirmation Number ஐ பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் நீங்கள் May மாதம் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும் போது தேவைப்படும்.

செலவு

Green Card Lottery யில் பங்கேற்க எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு Green Card க்கு விண்ணப்பிக்க விரும்பினால், கட்டாய Green Card விண்ணப்பக் கட்டணங்களை செலுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, Green Card விண்ணப்பத்திற்கு தேவையான கட்டணங்கள் பற்றிய தகவல்களை நீங்கள் பெறுவீர்கள். இந்த தகவல்கள் dvprogram.state.gov என்ற Green Card Lottery இணையதளத்தில் கிடைக்கும்.

Timeline

DV Lottery செயல்முறையின் முக்கிய திகதிகள்:

May 2025: Winners notified

October 2025 – September 2026: Visa விண்ணப்பங்களை சமர்ப்பித்து  Interviews களில் கலந்துகொள்ளல்

2026 September 30 ஆம் திகதிக்குள் : அனைத்து விசாக்களும் வழங்கப்பட வேண்டும்.

Green Card Lottery யின் வெற்றியாளர்கள் பொதுவாக தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த 7 மாதங்களுக்குப் பிறகு அறிவிக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, உங்கள் விசா Interview க்காக அழைப்பு வர 14 மாதங்கள் வரை ஆகலாம். நீங்கள் எவ்வளவு விரைவில் விண்ணப்பிக்கிறீர்களோ, அவ்வளவு விரைவில் உங்கள் Interview இருக்கும். உதாரணமாக:

  • விண்ணப்ப காலம்: 2024 October முதல் November வரை நீங்கள் 2026 Green Card Lottery யில் விண்ணப்பித்தால்,
  • வெற்றியாளர் அறிவிப்பு: வெற்றியாளர்கள் 2025 May மாதத்தில் அறிவிக்கப்படுவார்கள்.
  • விசா விண்ணப்ப காலம்: நீங்கள் விசாவுக்கு 2025 October 1 முதல் 2026 September 30 வரை விண்ணப்பிக்க முடியும்.
  • விரைவான விசா: இந்த காலத்தில் நீங்கள் விரைவில் விண்ணப்பித்தால், உங்கள் விசா Interview விரைவில் நடைபெறும். இதனால், உங்களுக்கு விசா வழங்கப்படுவதும் விரைவாக இருக்கும்.

உங்களுக்கு விசா கிடைத்தவுடன், அதில் அச்சிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்குள் அல்லது அதற்கு முன் அமெரிக்காவுக்குள் நுழைய வேண்டும். Diversity Visa பொதுவாக வழங்கப்பட்ட திகதியிலிருந்து 6 மாதங்கள் வரை செல்லுபடியாகும்.

Entering the U.S. Diversity Visa (green card) lottery is a simple, free process that occurs annually from early October to early November. To be eligible, applicants must be born in an eligible country and meet educational or work experience criteria. The lottery randomly selects winners who can then apply for a green card along with their immediate family members. Applicants must provide personal details, including information about their spouse and children, and submit passport-style photos. Winners are notified in May, and successful applicants must submit visa applications between October 2025 and September 2026, with interviews scheduled within this timeframe. There is no fee to enter, but green card application fees apply if selected. Visas must be used by the expiration date, typically within six months of issuance.

To Apply – Electronic Diversity Visa Program