2026-இல் ஜெர்மனியில் வேலைக்காக குடியேற்றுவது எப்படி? முழுமையான வழிகாட்டி
ஜெர்மனியின் குடியேற்ற சட்டங்களில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சர்வதேச பணியாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. ஆண்டுதோறும் சுமார் 4,00,000 திறன்மிக்க பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான குடியேற்ற விதிகள் மற்றும் வழிகள் இங்கே விளக்கப்பட்டுள்ளன.
1. EU Blue Card 2026
உயர்தகுதி கொண்ட பணியாளர்களுக்கான முதன்மையான வழி இதுவாகும். 2026-ஆம் ஆண்டு முதல் இதற்கான ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளன:
- சாதாரணப் பணிகள்: ஆண்டுக்கு €50,700 (மாதம் €4,225).
- தட்டுப்பாடுள்ள துறைகள் & புதிய பட்டதாரிகள்: ஆண்டுக்கு €45,934.20 (மாதம் €3,828).
முக்கிய நன்மைகள்:
- நிரந்தரக் குடியுரிமை: ஜெர்மன் மொழி தெரிந்தால் (B1 level) 21 மாதங்களிலும் அல்லது 27 மாதங்களிலும் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
- குடும்பம்: வாழ்க்கை துணையை (Spouse) அழைத்து வரலாம்; அவர் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வேலை புரிவதற்கு வாய்ப்பு உண்டு 2024 சீர்திருத்தத்திற்குப் பிறகு, பெற்றோர் மற்றும் மாமனார்,மாமியாரையும் அழைத்து வர அனுமதி உண்டு.
- தட்டுப்பாடுள்ள துறைகள்: தகவல் தொழில்நுட்பம் (IT), உற்பத்தி, கட்டுமானம், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் அதிகளவில் இப்போது வாய்ப்புகள் உள்ளன.
2. Job Offer இல்லாமல் வேலை தேட அனுமதிக்கும் ‘Opportunity Card’ (Chancenkarte)
வேலை வாய்ப்பு கடிதம் (Job Offer) இல்லாமலேயே ஜெர்மனிக்கு வந்து வேலை தேட Opportunity Card உதவுகிறது.
- தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பட்ட படிப்பு அல்லது ஒரு புள்ளி அடிப்படையிலான (Points-based) முறையில் 6 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
- புள்ளிகள் எதற்கு? வயது (35-க்குள் இருந்தால் 2 புள்ளிகள்), பணி அனுபவம், மொழித்திறன் (ஜெர்மன் A1 அல்லது ஆங்கிலம் B2) மற்றும் ஜெர்மனியுடன் உள்ள தொடர்பு ஆகியவற்றிற்கு புள்ளிகள் வழங்கப்படும்.
- வேலை தேடும் காலம்: 12 மாதங்கள் வரை தங்கி வேலை தேடலாம். இக்கால கட்டத்தில் வாரத்திற்கு 20 மணிநேரம் Part-time வேலை செய்யவும் அனுமதி உண்டு.
- நிதி ஆதாரம்: மாதம் €1,091 வீதம் ஆண்டுக்கு €13,092 வங்கிக் கணக்கில் (Blocked Account) இருக்க வேண்டும்.
3. வேலை வாய்ப்பு பெறும் வழிகள்
- Digital Nomad Visa:
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் தொலைதூரமாக (Remote) வேலை செய்து கொண்டே, ஜெர்மனியில் சட்டப்படி வசிக்கும் வாய்ப்பு பெற்றுள்ளனர். - அங்கீகாரக் கூட்டாண்மை (Recognition Partnership):
உங்கள் வெளிநாட்டுத் தகுதிகளை ஜெர்மன் தரத்திற்கு இணையாக அங்கீகரிக்கும் செயல்முறை நடந்து கொண்டிருக்கும்போதே, ஜெர்மனியில் பணியைத் தொடங்குவதற்கு இது அனுமதிக்கிறது. - Skilled Worker Visa (தொழிற்கல்வி):
இரண்டு ஆண்டு தொழிற்கல்வி முடித்தவர்கள், தங்கள் படிப்புடன் தொடர்புடைய அல்லது தகுதிக்கேற்ற வேறு வேலைகளிலும் இணையலாம் - அனுபவம் வாய்ந்த பணியாளர்கள்:
முறையான Degree இல்லாவிட்டாலும், கடந்த 5 ஆண்டுகளில் 2 ஆண்டு பணி அனுபவம் இருந்தால் இந்த வழியில் விண்ணப்பிக்கலாம்.
4. குடும்பத்தினரை ஜெர்மனிக்கு அழைக்க விதிகள் எளிதாக்கப்பட்டன (Family Reunification)
2026-இல் குடும்பத்தினரை ஜெர்மனிக்கு அழைத்து வருவது எளிதாக்கப்பட்டுள்ளது:
- Blue Card வைத்திருப்பவர்கள் தங்கள் குடும்பத்தை அழைத்து வர போதிய வீட்டு வசதி (Living Space) இருப்பதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டிய அவசியம் இப்போது இல்லை.
- மனைவி/கணவருக்கு அடிப்படை ஜெர்மன் மொழி அறிவு (A1) சில சூழல்களில் அவசியமில்லை.
- 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை தாராளமாக அழைத்து வரலாம்.
சட்ட ரீதியான ஆலோசனையின் அவசியம்
ஜெர்மனியின் குடியேற்ற செயல்முறைகள் தற்போது டிஜிட்டல் முறையில் எளிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், சட்ட விதிகள் மிகவும் நுட்பமானவை. விண்ணப்பத்தில் ஏற்படும் சிறிய தவறுகள்கூட விசா மறுப்பிற்கு காரணமாகலாம். குறிப்பாக, 2025-ல் பழைய ஊதியத் தரத்தின்படி விசா பெற்றவர்கள், 2026-ல் விசாவை புதுப்பிக்கும்போது புதிய ஊதியத் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
Schlun & Elseven Rechtsanwälte போன்ற சட்ட நிறுவனங்கள், உங்கள் ஆவணங்களைச் சரிபார்க்கவும், தங்குதடை இன்றி குடியேற்றத்தை உறுதி செய்யவும் உதவுகின்றது .
In 2026, Germany’s work immigration rules have been simplified and offer several new opportunities for international professionals. Pathways such as the EU Blue Card, Opportunity Card, Digital Nomad Visa, and Skilled Worker Visa are now available. Family reunification rules have also been eased, allowing Blue Card holders to bring their families more easily. Due to requirements related to qualifications, language, and salary, seeking professional legal advice is highly recommended.


