சமீபத்தில் செய்யப்பட்ட UK Immigration மாற்றங்களின் கண்ணோட்டம்
UK-ன் குடிவரவுச் சூழல் நிலையாக மாறுவதுண்டு. தனிநபர்கள் மற்றும் வணிகங்களை பாதிக்கும் புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன. 2025 April மாத நிலவரப்படி, பல்வேறு Visa வழிகளிலும், குடிவரவுக் கொள்கைகளிலும் சில முக்கியமான புதுப்பிப்புகள் வந்துள்ளன.
இந்த மாற்றங்கள் பற்றிய முழுமையான தகவல்கள், GOV.UK இணையதளத்தில் வெளியிடப்பட்ட 135 பக்க அறிக்கையான “மாற்றங்களின் அறிக்கை (HC 733)” மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள 20 பக்க “விளக்கக் குறிப்பு” ஆகியவற்றில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
UK-ல் வாழவோ, வேலை செய்யவோ அல்லது படிக்கவோ விரும்பும் பலருக்கும் இந்த மாற்றங்கள் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, Visa கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன, Global Talent Visa வழிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, Skilled Worker Visa வழியிலும் மாற்றங்கள் வந்துள்ளன. இந்த கட்டுரை, குடியேற்றம் தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்குள் புதிதாக வந்துள்ள மாற்றங்கள், ஏற்கனவே இருந்ததில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, மற்றும் எதிர்காலத்தில் நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய ஒரு சுருக்கமான பார்வையை வழங்குகிறது.
நீங்கள் ஒரு வேலை அளிப்பவராக இருந்தாலும் சரி, Visa-க்கு விண்ணப்பிக்க விரும்புவராக இருந்தாலும் சரி, அல்லது இந்தத் தகவல்களைத் தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவராக இருந்தாலும் சரி, மாறிவரும் UK குடியேற்றச் சட்டதிட்டங்களைப் புரிந்துகொள்ள இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
01. Trinidad மற்றும் Tobago நாட்டினருக்கு Visit Visa தேவை அறிமுகம்
2025 March 12 முதல், Trinidad மற்றும் Tobago நாட்டினருக்கான Visa-இல்லாத நுழைவை UK ரத்து செய்துள்ளது(No Visa-Free Entry). முன்பு UK-ற்கு குறுகிய கால பயணம் மேற்கொள்ள Trinidad மற்றும் Tobago நாட்டினர் Visa பெறத் தேவையில்லை. ஆனால், இந்த ரத்து நடவடிக்கைக்குப் பிறகு, அவர்கள் பயணம் செய்வதற்கு முன்பு முறையான Visa-க்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
2015 முதல் 2019 வரை ஆண்டுக்கு சராசரியாக 49 ஆக இருந்த Trinidad மற்றும் Tobago குடிமக்களின் புகலிடக் கோரிக்கைகள் கடந்த ஆண்டு 439 ஆக அதிகரித்ததன் விளைவாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய மாற்றங்கள்:
- உடனடி விளைவு: குறுகிய கால வருகைகள் மற்றும் போக்குவரத்து உட்பட, Trinidad மற்றும் Tobago நாட்டினர் அனைவரும் இப்போது UK-ற்கு செல்ல Visa வைத்திருக்க வேண்டும்.
- இடைக்கால ஏற்பாடு: 2025 March 12-க்கு முன் Electronic Travel Authorisation (ETA) பெற்ற பயணிகளுக்கு ஒரு சலுகைக் காலம் உள்ளது. இந்த பயணிகள் 2025 April 23 வரை Visa இல்லாமல் UK-ற்கு செல்லலாம்.
- Transit விசாகள்: நீங்கள் வேறொரு நாட்டிற்குச் செல்ல UK விமான நிலையம் வழியாக மாற வேண்டியிருந்தால், நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், இனிமேல் நேரடி விமான நிலைய போக்குவரத்து விசாவிற்கு (Direct Airside Transit Visa-DATV) விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இது விமான நிலையத்தின் சர்வதேசப் பகுதியில் மட்டுமே தங்கி, வேறொரு விமானத்திற்கு மாறுபவர்களுக்கும் பொருந்தும்.
- விண்ணப்ப செயல்முறை: விண்ணப்பதாரர்கள் Online விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, Visa கட்டணம் செலுத்தி, Biometric தகவல்களை (கைரேகைகள் மற்றும் புகைப்படம்) வழங்க வேண்டும்.
02. British National (Overseas) Passport வைத்திருப்பவர்களுக்கு ETA தேவையில்லை
British National (Overseas) Passport வைத்திருப்பவர்கள் இனி UK-ற்குள் நுழைய Electronic Travel Authorisation (ETA) பெறத் தேவையில்லை. முன்பு, BN(O) Passport வைத்திருப்பவர்களுக்கு ETA தேவைப்பட்டது, ஆனால் 2025 April 09 முதல், British குடிமக்கள் மற்றும் Irish குடிமக்களுக்கு சலுகை வழங்கப்பட்டதைப் போலவே இதுவும் நீக்கப்பட்டுள்ளது. எனவே, BN(O) Passport வைத்திருப்பவர்கள் ஆறு மாதங்கள் வரை குறுகிய கால வருகைகளுக்காக UK-ற்கு Visa இல்லாமல் தொடர்ந்து பயணிக்கலாம். (Visa-Free Entry)
இந்த நீக்கத்தால் ஏற்படும் நன்மைகள்:
- பயணம் எளிதாவது: British National (Overseas) Passport வைத்திருப்பவர்கள் இனி ETA-க்கு விண்ணப்பிக்கும் தொல்லையின்றி பயணிக்க முடியும்.
- நேர சேமிப்பு: ETA விண்ணப்பத்திற்காக செலவிடப்படும் நேரத்தை சேமிக்கலாம்.
- திட்டமிடல் வசதி: திடீர் பயணங்களை மேற்கொள்வது உட்பட, பயணத் திட்டமிடல் எளிதாகும்.
03. Global Talent Visa சட்டங்களில் மாற்றங்கள்
2025 April 09 முதல், கலை, கலாச்சாரம், கட்டடக் கலை, Fashion, PACT மற்றும் Digital Technology ஆகிய துறைகளைச் சேர்ந்த Global Talent Visa-வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் ஒரு CV-யையும், அவர்கள் வேலை செய்தவர்களிடமிருந்து பரிந்துரைக் கடிதங்களையும்(Letters of Support) சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் கடிதங்களில், பரிந்துரைப்பவர்களுக்கும் விண்ணப்பதாரர்களுக்கும் இடையே அந்தத் துறையில் இருந்த வேலை சம்பந்தப்பட்ட உறவு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
ஆதரவுக் கடிதங்களுக்கான புதிய சட்டங்கள் என்ன சொல்கின்றன என்றால், நீங்கள் Global Talent Visa-வுக்கு விண்ணப்பிக்கும் துறை எதுவோ (கலை, கட்டடக் கலை, Fashion Design, Digital Technology அல்லது திரைப்படம்/TV), அந்தத் துறையில் உங்களைப் பரிந்துரைப்பவருடன் உங்களுக்கு நேரடியான வேலை சம்பந்தப்பட்ட தொடர்பு இருந்திருக்க வேண்டும்.
அதாவது, உங்கள் பரிந்துரைக் கடிதத்தில்(Support Letters), உங்களைப் பரிந்துரைப்பவர் குறிப்பிட்ட அந்தக் குறிப்பிட்ட துறையில் உங்களுடன் எப்படி வேலை செய்தார் என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும்.
உதாரணமாக,
- நீங்கள் ஒரு கலைஞர் என்றால், உங்களைப் பரிந்துரைப்பவர் ஒரு Gallery-யில் உரிமையாளராகவோ அல்லது ஒரு சக கலைஞராகவோ இருந்து, உங்களுடைய கலைப் படைப்புகள் அல்லது கலை நிகழ்ச்சிகளில் இணைந்து வேலை செய்திருக்க வேண்டும். அதை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
- நீங்கள் ஒரு கட்டடக் கலைஞர் என்றால், உங்களைப் பரிந்துரைப்பவர் ஒரு கட்டுமான நிறுவனத்தில் மேலாளராகவோ அல்லது ஒரு மூத்த கட்டடக் கலைஞராகவோ இருந்து, நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு கட்டிட வடிவமைப்பிலோ அல்லது கட்டுமானப் பணியிலோ வேலை செய்திருக்க வேண்டும்.
- நீங்கள் ஒரு Fashion Designer என்றால், உங்களைப் பரிந்துரைப்பவர் ஒரு ஆடை உற்பத்தி நிறுவனத்தின் தலைவராகவோ அல்லது ஒரு ஃபேஷன் பத்திரிகையின் ஆசிரியராகவோ இருந்து, உங்களுடைய டிசைன்களைப் பற்றியோ அல்லது நீங்கள் இணைந்து பணியாற்றிய ஃபேஷன் ஷோவைப் பற்றியோ குறிப்பிட்டிருக்க வேண்டும்.
உங்களைப் பரிந்துரைப்பவர் உங்கள் துறையில் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும், மேலும் நீங்கள் இருவரும் அந்தத் துறையில் சேர்ந்து வேலை செய்த அனுபவத்தை அந்தக் கடிதத்தில் தெளிவாகக் கூற வேண்டும். அப்போதுதான் அந்தக் கடிதம் உங்களுடைய திறமைக்கும் அந்தத் துறைக்கும் உள்ள தொடர்பை சரியாகக் காட்டும்.
திறமையான Fashion Designers UK-க்குச் செல்வதற்கான விசா சட்டங்களில் சில புதிய மாற்றங்கள் வந்துள்ளன. ஊடக அங்கீகாரம், பட்டப்படிப்பு அங்கீகாரம், விருதுகள் மற்றும் தொழில் அங்கீகாரம் போன்ற விஷயங்களில் சில புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் முன் இந்த மாற்றங்களை கவனமாகப் படிப்பது நல்லது. அவை என்னவென்றால்:
- ஊடக அங்கீகாரத்திற்கான தகுதி: முன்பு இருந்ததை விட இப்போது அதிகமான ஊடகங்களில் அங்கீகாரம் பெற்றிருந்தால், அவர்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, பிரபல பத்திரிகைகள் அல்லது Websites-ல் உங்களைப் பற்றி வந்த செய்திகள் இன்னும் அதிகமாக இருந்தால், அது உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.
- பட்டப்படிப்பு சேகரிப்புகளுக்கான அங்கீகாரம்: நீங்கள் ஒரு Fashion பட்டப்படிப்பை முடித்துவிட்டு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், உங்களுடைய இறுதி சேகரிப்புக்கு (Collection) Fashion துறையில் இருந்து குறைந்தது இரண்டு முக்கியமான அங்கீகாரங்கள் (Recognition) இருக்க வேண்டும். அதாவது, அந்த சேகரிப்புக்காக நீங்கள் ஏதேனும் விருதுகள் பெற்றிருக்கலாம் அல்லது பிரபல Fashion விமர்சகர்கள் பாராட்டியிருக்கலாம்.
- PACT ஒப்புதலுக்கான “Main Award”: சினிமா, TV போன்ற துறைகளில் PACT அமைப்பின் ஒப்புதலுக்காக விண்ணப்பித்தால், நீங்கள் வென்ற “Main Award” உங்களுடைய தனிப்பட்ட சாதனையாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் ஒரு விருது வென்ற படைப்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலோ அல்லது வென்றிருந்தாலோ, அந்த விருது நிகழ்ந்து 10 ஆண்டுகளுக்குள் நீங்கள் அந்தப் படைப்பில் முக்கியமான பங்களிப்பைச் செய்திருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும்.
- “குறிப்பிடத்தக்க தொழில் அங்கீகாரம்”: உங்களுக்கு Fashion துறையில் “குறிப்பிடத்தக்க தொழில் அங்கீகாரம்” இருக்கிறது என்று நிரூபிக்க, குறைந்தது இரண்டு வெவ்வேறு Fashion தயாரிப்புகளில் (Productions) உங்களுடைய பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக, இரண்டு வெவ்வேறு Fashion Shows-ல் உங்களுடைய Designs இடம்பெற்றிருக்கலாம் அல்லது இரண்டு வெவ்வேறு Fashion பத்திரிகைகளில் உங்களுடைய படைப்புகள் வெளியிடப்பட்டிருக்கலாம்.
Digital Technology விண்ணப்பதாரர்களுக்கான Global Talent Visa-வில் மிகக் குறைவான மாற்றங்களே உள்ளன, இருப்பினும் அங்கீகரிக்கும் அமைப்பில் எதிர்காலத்தில் சில மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலேயே, முன்பு அங்கீகரித்த அறிவிக்கப்படக்கூடிய மாற்றத்தை எதிர்பார்த்து Tech Nation பற்றிய குறிப்புகள் இப்போது நீக்கப்பட்டுள்ளன.
04. Skilled Worker Visa-வில் மாற்றங்கள்
Skilled Worker Visa-ற்கு Sponsor செய்யும் வேலை வழங்குநர்களுக்கு சில முக்கியமான புதிய சட்டங்கள் வந்துள்ளன. UK-ல் வேலை செய்யும் திறமையான ஒரு தொழிலாளியின் சில செலவுகளை வேலை வழங்குநர் ஊழியரிடம் வசூலிக்க முடியாது. இனிமேல், இந்தச் செலவுகளை வேலை வழங்குனரே ஏற்க வேண்டும். ஊழியரிடம் வசூலிக்க முடியாத செலவுகள்:
- Sponsor Licence Fees: Skilled Worker Visa-வின் கீழ் ஒரு தொழிலாளியை வேலைக்கு எடுப்பதற்குத் தேவையான Sponsor Licence-ஐப் பெறுவதற்கோ அல்லது புதுப்பிப்பதற்கோ ஆகும் செலவுகளை இனி அந்தத் தொழிலாளர்களிடம் வசூலிக்க முடியாது. இது வேலை வழங்குநர்களுக்கு (Sponsors-க்கு) தடை செய்யப்பட்டுள்ளது.
- Certificate of Sponsorship (CoS) Fees: CoS ஒதுக்குவதற்கான கட்டணங்களை இனி ஊழியர்களிடம் வசூலிக்க முடியாது. இந்தச் செலவை வேலை வழங்குபவரே ஏற்க வேண்டும்.
- Immigration Skills Charge (ISC): UK-வில் வேலை செய்ய வெளிநாட்டிலிருந்து ஒருவரை Sponsor செய்து அழைத்து வரும் வேலை வழங்குநர்கள், அந்த ஊழியரின் பயிற்சி போன்றவற்றுக்காக அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் (ISC) செலுத்த வேண்டும். இந்தச் செலவை அந்த வேலை வழங்குநர்கள் தான் ஏற்க வேண்டும். அதை அந்த ஊழியர்களிடம் வசூலிக்கக் கூடாது. அப்படி வசூலிப்பது சட்டவிரோதமானது.
இந்தச் செலவுகளை ஊழியர்களிடம் வசூலிக்க முயற்சித்தால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும். வேலை வழங்குனரின் Sponsor Licence கூட ரத்து செய்யப்படலாம். அப்படி நடந்தால், ஏற்கனவே அந்த வேலை வழங்குனரின் கீழ் வேலை செய்யும் Sponsor செய்யப்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் வேறு ஒரு Sponsor-ஐத் தேட வேண்டியிருக்கும் அல்லது UK-ஐ விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வரலாம்.
சில Sponsorship கட்டணங்களை ஊழியர்களிடம் வசூலிக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தாலும், வேலை வழங்குனர்கள் இன்னும் சில குடியேற்றம் தொடர்பான செலவுகளை ஏற்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவை பின்வருமாறு:
- குடியேற்ற விண்ணப்பக் கட்டணங்கள்
(Immigration application fees); - UKVCAS, TLScontact அல்லது VFSGlobal போன்ற Home Office-ன் வணிகப் பங்குதாரர்கள் வழங்கும் சேவைகளுக்கான கட்டணங்கள்
(Home Office commercial partner service charges); - Sponsor செய்யப்பட்ட தொழிலாளர்கள் அல்லது அவர்களின் சார்புடையவர்கள்(Dependent) சார்பாக செலுத்தப்படும் Immigration Health Surcharges(குடிவரவு சுகாதார மேலதிக கட்டணங்கள்.)
- UK-வில் வேலை செய்ய Sponsor பெற்று வரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், அங்குள்ள மருத்துவ வசதிகளைப் பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட தொகை (Immigration Health Surcharges)
வேலை வழங்குநர்கள் இந்த புதிய சட்டங்களுக்கு ஏற்ப செயல்படுகிறார்களா என்பதை உறுதிப்படுத்த, அவர்கள் தங்களுடைய குடியேற்றக் கொள்கைகளையும், ஊழியர்களுக்கான வேலை ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்து புதுப்பிக்க வேண்டும்.
05. Self-Sponsored Skilled Workers: சம்பளம் மற்றும் கழிவுகளில் புதிய மாற்றங்கள்
தங்களைத்தாமே Sponsor செய்து UK-வில் வேலை செய்ய விரும்பும் Skilled Workers-க்குச் சம்பளம் வழங்குவதில் சில புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன.
அதன்படி, விண்ணப்பதாரர் தங்கள் Sponsor-க்கு (அல்லது தொடர்புடைய நிறுவனங்களுக்கு) பணம் செலுத்தினால், அந்தப் பணம் தங்களது சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும். இது கழிவுகள் (Deductions), நீங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது, மற்றும் நீங்கள் செய்யும் முதலீடுகள் எல்லாவற்றிற்கும் பொருந்தும். இந்த மாதிரி எவ்வளவு பணம் கழிக்கப்படுகிறது என்பதை Sponsorship காலம் முழுவதும் கணக்கிட்டு சராசரி எடுப்பார்கள்.
ஆனால், உங்களுடைய தொழில் சம்பந்தப்படாத செலவுகள், விசாவுக்கான கட்டணங்கள் அல்லது நீங்கள் செய்யும் முதலீடுகள் தவிர, நீங்கள் விருப்பத்தின் பேரில் பெறும் சில மேலதிக நன்மைகளுக்காகச் சம்பளத்தில் இருந்து செய்யப்படும் கழிவுகள் (உதாரணமாக, ஓய்வூதியத் திட்டம், Voluntary Benefits போன்றவை) கழிக்கப்பட மாட்டாது.
இந்த மாற்றங்கள் எதற்காக?
- மற்ற கொடுப்பனவுகளுடன் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்க்க.
- விசாவுக்கான செலவுகளை விண்ணப்பதாரர்களிடம் இருந்து வசூலிப்பதைத் தடுக்க.
- விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த முதலீடுகள் மூலம் சம்பளம் பெறுவதற்கான ஒரு Loophole-ஐ அடைக்க. (அதாவது, சிலர் தங்கள் சொந்த நிறுவனத்தில் முதலீடு செய்து, அந்தப் பணத்தையே சம்பளமாகப் பெறுவது போல காட்டிக் கொள்வதைத் தடுக்க).
Self-Sponsor செய்து வேலை செய்யும்போது, உங்கள் சம்பளத்தில் இருந்து Sponsor-க்குச் செலுத்தும் பணம் கழிக்கப்படும். ஆனால், தொழில் அல்லது Visa சம்பந்தமில்லாத விருப்பச் சலுகைகளுக்கான கழிவுகள் கழிக்கப்படாது. இந்த புதிய சட்டங்கள் சம்பள முறையைச் சீராக்கவும், சில தவறான வழிகளை அடைக்கவும் கொண்டுவரப்பட்டுள்ளன.
06. Health And Care Worker Visa: UK வேலைக்கு எடுக்கும் புதிய சட்டங்கள்
UK-ல் உள்ள வயதானவர்கள், நோயாளிகள் போன்றோரைப் பார்த்துக் கொள்பவர்களை (Care Workers) வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்குப் புதிய சட்டங்கள் வந்துள்ளன.
UK-ல் உள்ள பராமரிப்பு வழங்குநர்கள், வெளிநாட்டிலிருந்து Care Workers-ஐ வேலைக்கு அமர்த்துவதற்கு முன்பு, முதலில் UK-ல் இருக்கும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முயற்சி செய்ய வேண்டும். இந்த சட்டம் Care Workers மற்றும் Senior Care Workers இருவருக்கும் பொருந்தும். வெளிநாட்டிலிருந்து வேலைக்கு நியமிப்பதைக் குறைப்பதும், ஏற்கெனவே UK பராமரிப்புத் துறையில் இருப்பவர்களுக்கு ஆதரவளிப்பதும் இதன் நோக்கமாகும்.
வேலை வழங்குநர்கள், UK-வைச் சேர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த உண்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கான உறுதிப்படுத்தலை அந்தந்தப் பகுதி அமைப்புகளிடமிருந்து(Regional Partnerships) பெற வேண்டும்.
இந்த சட்டங்கள் எங்கு பொருந்தும்?
இந்த சட்டங்கள் UK-ல் உள்ள வேலைகளுக்கு மட்டும்தான். Scotland, Wales, Northern Ireland போன்ற இடங்களில் இது பொருந்தாது.
யாருக்கு இது பொருந்தாது?
- இந்த புதிய சட்டங்கள் வருவதற்கு முன்னரே UK-ல் Sponsor பெற்று வேலை செய்பவர்களுக்கு இது பொருந்தாது.
- ஏற்கனவே ஒரு முதலாளியிடம் இருந்து இன்னொரு முதலாளிக்கு மாறுபவர்களுக்கும் இது பொருந்தாது (அவர்கள் குறைந்தது மூன்று மாதங்களாவது சட்டப்படி வேலை செய்திருந்தால்).
- விசா வகையை மாற்றுபவர்களுக்கும் இது பொருந்தாது (அவர்கள் குறைந்தது மூன்று மாதங்களாவது சட்டப்படி வேலை செய்திருந்தால்).
07. Skilled Workers-க்கான குறைந்தபட்ச சம்பளத்தின் அளவு அதிகரிக்கின்றது
Skilled Workers-க்கான குறைந்தபட்ச சம்பளத்தின் அளவு, முன்பு வருடத்திற்கு £23,200 (£11.90/மணி) ஆக இருந்தது. இது தற்போது வருடத்திற்கு £25,000 (£12.82/மணி) ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில் தேசிய ஊதியக் குழு நிர்ணயிக்கும் சம்பளத்தைப் பெறுபவர்களுக்கு, அந்தந்த ஊதிய ஒப்பந்தங்களின்படி சம்பள வரம்புகள் மாற்றப்பட்டுள்ளன. மற்ற வேலைகளுக்கு, முன்பு எவ்வளவு சம்பளம் கொடுத்திருந்தாலும், இப்போது குறைந்தபட்சம் £25,000 சம்பளம் கொடுக்க வேண்டும்.
இந்த சம்பள உயர்வு ஏன் என்றால், Skilled Workersன் சம்பளம் UK-வில் இப்போதுள்ள ஊதிய நிலவரத்துக்கும், தேசிய குறைந்தபட்ச ஊதியத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இதற்காக ONS (Office for National Statistics) என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களைப் பார்த்தே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சம்பள சட்டங்களை வேலை வழங்குநர்கள் சரியாகப் பின்பற்றவில்லை என்றால், விசாக்கள் நிராகரிக்கப்படலாம் அல்லது Sponsor Licence ரத்து செய்யப்படலாம்.
மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், யாராவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட வேலையில் பயிற்சி பெறுவதற்காக “புதியவர்(New Entrant)” என்ற முறையில் சம்பளக் குறைப்பு கேட்கும் பட்சத்தில், அந்தப் பயிற்சியை அவர்கள் UK-வில்தான் பெற்றிருக்க வேண்டும். வெளிநாட்டில் பெற்ற பயிற்சிக்கு இந்தச் சலுகை கிடையாது.
08. ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமைத் திட்டத்தில் மாற்றங்கள்(EU Settlement Scheme-EUSS)
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வந்து UK-ல் நிரந்தரமாகக் குடியேற விரும்பும் மக்களுக்கான EUSS-ல் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அவை பின்வருமாறு:
அடையாள ஆவணம்: ஐரோப்பியாவைச் சாராத நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்போது, தங்களுடைய காலாவதியான UK Biometric Residence Card (BRP) அல்லது அனுமதிப்பத்திரத்தை அடையாளத்திற்காகவும், தங்கள் நாட்டுக் குடியுரிமையை நிரூபிப்பதற்கும் 18 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும். மேலும், அவர்கள் தங்களுடைய Biometric தகவல்களான கைரேகை மற்றும் புகைப்படத்தை மீண்டும் வழங்க வேண்டியதில்லை. ஒருமுறை வழங்கியிருந்தால் போதுமானது.
Sponsor செய்யத் தகுதி: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து UK வெளியேறிய பிறகு (Brexit), EU, EEA அல்லது Swiss நாட்டுக் குடிமக்களான தனிநபர்கள், தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை UK-ற்கு வரவழைப்பதற்காக EUSS குடும்ப அனுமதி விண்ணப்பத்திற்கு Sponsor செய்ய முடியாது.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால்: யாரேனும் ஒருவரின் EUSS விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, அவர்கள் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்து இன்னும் முடிவு வராத நிலையில் இருந்தால், அவர்கள் UK-ஐ விட்டு வெளியேற வேண்டியதில்லை. அவர்கள் ஏற்கனவே UK-ற்குள் நுழைந்திருந்தாலோ அல்லது நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலோ, மேல்முறையீட்டு முடிவு வரும் வரை அவர்கள் இங்கேயே தங்கலாம்.
EUSS திட்டத்தில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அடையாள ஆவணமான Biometric Residence Card காலாவதியானாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பயன்படுத்தலாம், Brexit-க்கு பிறகு EU குடிமக்கள் தங்கள் குடும்பத்தினரை Sponsor செய்ய முடியாது, மேலும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மேல்முறையீட்டு முடிவு வரும் வரை UK-ல் தங்கலாம்.
09. Homes for Ukraine திட்டத்தில் “பெற்றோர்” என்பதற்கான புதுப்பிக்கப்பட்ட வரையறை
Ukraine-க்கான வீடுகள் திட்டத்தின் கீழ் தங்கள் குழந்தைகளுடன் இணையும் பெற்றோர்கள் இப்போது சட்டப்பூர்வமான UK குடியிருப்பைக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் “பெற்றோர்” என்பதற்கான வரையறையில் இனி வளர்ப்புப் பெற்றோர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். Ukraine-க்கான வீடுகள் மற்றும் Ukraine அனுமதி நீட்டிப்புத் திட்டங்கள் முழுவதும் பெற்றோருக்கான வரையறையை சீரமைத்து, பரந்த UK குடிவரவு அமைப்புடன் ஒத்துப்போகும் வகையில் இது செய்யப்படுகிறது.
10. UK Visa கட்டணங்கள் உயர்வு: April 2025 விவரம்
2025 April 9-ஆம் திகதி முதல், அனைத்து விசாக்களுக்கும் இல்லாவிட்டாலும் பெரும்பாலான UK விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மிக முக்கியமான கட்டண உயர்வுகள் சில பின்வருமாறு:
நிரந்தரக் குடியிருப்பு மற்றும் குடியுரிமை:
- காலவரையற்ற அனுமதிக்கு (Indefinite Leave to Remain – ILR) விண்ணப்பிப்பதற்கான கட்டணம் £2,885 இல் இருந்து £3,029 ஆக உயர்ந்துள்ளது.
- குடியுரிமை (British Citizenship ஆவதற்கான கட்டணம்) £1,500 இல் இருந்து £1,605 ஆக உயர்ந்துள்ளது.
Skilled Workers:
- Sponsor Licence-ற்கான விண்ணப்பக் கட்டணம்: பெரிய நிறுவனங்களுக்கு £1,476 இல் இருந்து £1,579 ஆகவும், சிறிய நிறுவனங்கள் அல்லது Charities-க்கு £536 இல் இருந்து £574 ஆகவும் உயர்ந்துள்ளது.
- Sponsorship சான்றிதழ் (Certificate of Sponsorship – CoS): இதன் கட்டணம் £239 இல் இருந்து £525 ஆக உயர்ந்துள்ளது, இது தற்போதைய கட்டணத்தை விட இரு மடங்குக்கும் அதிகமாகும்.
- நுழைவு அனுமதி(Entry Clearance) விண்ணப்பக் கட்டணம்: மூன்று ஆண்டுகள் வரை விண்ணப்பித்தால், கட்டணம் £719 இல் இருந்து £769 ஆக உயர்ந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் விண்ணப்பித்தால், கட்டணம் £1,420 இல் இருந்து £1,519 ஆக உயர்ந்துள்ளது.
- நாட்டில் இருந்து விண்ணப்பிக்கும் கட்டணம்: மேலும் மூன்று ஆண்டுகள் வரை தங்குவதற்கு விண்ணப்பித்தால், கட்டணம் £827 இல் இருந்து £885 ஆக உயர்ந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் விண்ணப்பித்தால், கட்டணம் £1,636 இல் இருந்து £1,751 ஆக உயர்ந்துள்ளது.
பார்வையாளர்கள்(Visitors):
- சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், குறுகிய கால பயணங்களுக்காக UK வரும் Visa தேவையில்லாத பயணிகளுக்கான ETA-வின் விலை 60% உயர்ந்து £10 இல் இருந்து £16 ஆக அதிகரித்துள்ளது.
- Visa தேவைப்படும் நாட்டினருக்கான நிலையான Visitor Visa-வின் கட்டணம் £115 இல் இருந்து £127 ஆக உயர்ந்துள்ளது.
UK குடிவரவுச் சட்டங்களில் அதிரடி மாற்றங்கள்! April 2025 முக்கிய Updates!
2025 April முதல் UK குடிவரவுச் சட்டங்களில் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. Trinidad & Tobago நாட்டினருக்கு Visa கட்டாயமாக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் BN(O) Passport வைத்திருப்பவர்களுக்கு ETA தேவையில்லை. Global Talent Visa விண்ணப்ப நடைமுறைகளிலும், Skilled Worker Visa மற்றும் Health and Care Worker Visa சட்டங்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், Visa கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் UK-வில் வாழவும், வேலை செய்யவும், படிக்கவும் விரும்பும் பலரையும் நேரடியாகப் பாதிக்கும். விரிவான தகவல்களுக்கு கட்டுரையை முழுமையாகப் படித்து, அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்! நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் இதை Share செய்து முக்கிய மாற்றங்களை தெரியப்படுத்துங்கள், இந்தத் தகவல்கள் மிகவும் முக்கியம்!.
Significant Changes to UK Immigration Laws! Key Updates for April 2025!
Several new changes to UK immigration laws have come into effect from April 2025. These include the introduction of mandatory visas for Trinidad & Tobago nationals, while Electronic Travel Authorisation (ETA) is no longer required for British National (Overseas) passport holders. There are also notable amendments to the application processes for the Global Talent Visa, as well as the rules for the Skilled Worker Visa and the Health and Care Worker Visa. Furthermore, UK visa fees have seen a substantial increase. These changes will directly impact many individuals aspiring to live, work, or study in the UK. For detailed information, please read the full article to stay updated!
Source: GOV.UK – Home Office
https://www.gov.uk/government/publications/visa-regulations-revised-table/home-office-immigration-and-nationality-fees-9-april-2025#visas-and-applications-made-outside-the-uk



