2026 August முதல் New Zealand Skilled Migrant Category Visa-வில் முக்கிய மாற்றங்கள்!

Immigration New Zealand-ன் அறிவிப்பின்படி, Skilled Migrant Category குடியிருப்பு Visa திட்டத்தில் 2026 August இறுதியில் இருந்து பல முக்கிய மாற்றங்கள் அமுலுக்கு  வர உள்ளன. இந்த மாற்றங்கள் திறமையான குடியேற்றத்தை எளிமைப்படுத்தவும்,  New Zealand-ன் வேலைவாய்ப்பு சந்தைக்கு தேவையான திறமைகளை ஈர்க்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.


Skilled Migrant Category (SMC) என்றால் என்ன?

New Zealand-இல் முக்கிய திறமையான குடியேற்ற (Residence) பாதை தான் Skilled Migrant Category (SMC). இது திறமையான தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியிருப்பு (PR)பெற வாய்ப்பு அளிக்கிறது.

2025 September New Zealand-இல் அரசு இந்த திட்டத்தில் மாற்றங்களை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக 2026 August-ல் புதிய விதிகள் அமுலுக்கு வர உள்ளன.


முக்கிய மாற்றங்கள்

Occupation Lists உறுதி

SMC திட்டத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில் பட்டியல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன:

  • Trades and Technician Pathway List
  • Red List
  • Amber List

இந்த பட்டியல்கள் எந்த தொழில்களுக்கு குடியிருப்பு பாதை கிடைக்கும் என்பதை தீர்மானிக்கின்றன.


Median Wage விதிகள் எளிமைப்படுத்தல்

SMC திட்டத்தின் அனைத்து வழிக்கும் Median Wage விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தகுதி பெறுவது தெளிவாக இருக்கும்.


Qualification Requirements தெளிவுபடுத்தல்

Points System-ல் கல்வி தகுதி மூலம் பெறப்படும் Points குறித்து தெளிவான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


English Language Test Validity நீடிப்பு

சில விண்ணப்பதாரர்களுக்கு English language Test Validity காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் தேர்வு எழுத வேண்டிய சிரமத்தை குறைக்கும்.


Accountants க்கு புதிய Occupational Registration

Accountants தொழிலுக்காக புதிய Recognised Occupational Registration சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த துறையில் உள்ளவர்கள் SMC Points பெற வாய்ப்பு அதிகரிக்கும்.


Accredited Employer Work Visa (AEWV) நீடிப்பு

Accredited Employer Work Visa வைத்திருப்பவர்கள் Skilled Work Experience Requirement முடிக்க Visa-வை நீட்டிக்கும் வாய்ப்பு எதிர்காலத்தில் வழங்கப்படும்.


Trades and Technician Residence Pathway

இந்த புதிய வழிக்கு தகுதி பெற வேண்டிய நிபந்தனைகள்:

  • ANZSCO Skill Level 1 முதல் 3 வரை உள்ள தொழிலில் வேலை
  • Level 4 அல்லது அதற்கு மேல் Qualification
  • குறைந்தது 4 வருடம் தொடர்புடைய வேலை அனுபவம்
  • அதில் 1.5 வருடம் New Zealand-ல் Median Wage சம்பளத்துடன் வேலை

இந்த வழிகள் பல திறமையான தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியிருப்பு பெற புதிய வாய்ப்பு வழங்குகிறது.


Red List மற்றும் Amber List

Red List

இந்த பட்டியலில் உள்ள தொழில்கள் புதிய வழிக்கு தகுதி பெறாது.

இவர்கள் SMC-க்கு விண்ணப்பிக்க:

  • Median wage-ன் 1.5 மடங்கு சம்பளம் பெற வேண்டும்
    அல்லது
  • Bachelor degree அல்லது அதற்கு மேல் Qualification
    அல்லது
  • Recognised Occupational Registration இருக்க வேண்டும்.

Amber List

Amber List தொழில்கள் Skilled Work Experience வழிகள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆனால் கூடுதல் நிபந்தனைகள் உள்ளன:

  • New Zealand-ல் குறைந்தது 5 வருடம் வேலை அனுபவம்
  • அதில் 2 வருடம் median Wage-ன் 1.2 மடங்கு சம்பளம்

இந்த மாற்றங்களின் நோக்கம்

இந்த மாற்றங்கள் மூலம்:

  • திறமையான தொழிலாளர்களை New Zealand-க்கு ஈர்க்க
  • நிறுவனங்கள் Skilled Workers-ஐ தக்க வைத்துக்கொள்ள
  • நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க

என்று அரசு தெரிவித்துள்ளது.

2026 August முதல் Skilled Migrant Category திட்டம் மேலும் எளிமைப்படுத்தப்பட்டு, திறமையான தொழிலாளர்களுக்கு New Zealand-ல் குடியிருப்பு பெற புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.

From August 2026, several key changes will take effect in the New Zealand Skilled Migrant Category (SMC) Visa program. These updates include confirmed occupation lists, simplified median wage rules, clearer qualification requirements, and extended validity for English language tests. A new residence pathway for trades and technicians has also been introduced. The changes aim to attract skilled workers and help meet New Zealand’s labor market needs.