UK Legal Migration Rules Changes for Family & Work Visas
UK இல் 2024 ஆம் ஆண்டு குடும்ப மற்றும் வேலை விசாக்களுக்கான சட்ட விதிகளில் மாற்றங்கள்
2023 December 4 ஆம் திகதி, உள்துறை செயலாளர் James Cleverly குடியேற்றத்தை குறைக்கும் நோக்கில் “Five-Point Plan” என்று விவரித்த விசா விதிகளுக்கான எதிர்கால மாற்றங்களை அறிவித்தார். அதற்கான மேலும் தகவல்களை உள்துறை அமைச்சகம் 2023 December 21 ஆம் தேதி வெளியிட்டது, இதில் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட சில அறிவிப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இப்பொழுது மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன, இதற்கான குடியேற்ற விதிகளில் 2024 February 19 மற்றும் March 14 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்ட இரண்டு திருத்தங்கள் இணக்கமாக வெளிவந்துள்ளன.
UK இல் இந்த ஐந்து முக்கிய மாற்றங்கள் என்ன?
- சமூக பராமரிப்பு பணியாளர்கள் (Social Care Workers) அவர்களது விசாவுடன் Dependents அதாவது தங்களின் வாழ்கை துணை மற்றும் பிள்ளைகளை கூட்டி வர அனுமதி இல்லை.
- தகுதி வாய்ந்த பணியாளர்கள் விசா (Skilled Worker Visa) க்கு கொடுக்கப்படும் அடிப்படை குறைந்தபட்ச சம்பளம் £26,200 இலிருந்து £38,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் ஒவ்வொரு வேலைக்கும் உரிய குறைந்தபட்ச சம்பளமான ‘Going Rate’ சம்பளமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- Skilled Worker Visa ற்கு குறைவான அடிப்படை சம்பளத்துடன் ஒருவரை அனுமதி வழங்கக்கூடிய வேலைகளின் பட்டியல் சுருக்கப்பட்டுள்ளது மற்றும் புதிய பெயராக “Immigration Salary List” என மாற்றப்பட்டுள்ளது.
- கணவன்,மனைவி / வாழ்கை துணை விசாவிற்கு ஒருவரை அனுமதிக்க அவர்களது குறைந்தபட்ச வருமானம் £18,600 இலிருந்து £29,000 ஆக உயர்ந்துள்ளது.
- British பல்கலைக்கழகங்களில் படித்த வெளிநாட்டுக் கல்லூரி பட்டதாரிகளுக்கான இரண்டு வருடங்கள் கொண்ட எந்தவொரு Unsponsored Work Permit வழங்கும் Graduate Visa ன் சீர்திருத்தமானது, அதன் சாத்தியமான தவறான பயன்பாட்டை சரிபார்க்கும் ஆய்வு.
இந்த மாற்றங்கள் எப்போது நடந்தது?
- புதியவராக வந்த Care Workers உடனடியாக குடும்பத்தை கொண்டு வருவதற்கான தடை 2024 March 11ஆம் திகதியன்று செயல்படுத்தப்பட்டது.
- Skilled Worker க்கான குறைந்தபட்ச சம்பள அதிகரிப்பு 2024 April 4ஆம் திகதியன்று செயல்படுத்தப்பட்டது.
- Shortage Occupation List ஐ மாற்றிய Interim Immigration Salary List 2024 April 4 ஆம் திகதியன்று செயல்படுத்தப்பட்டது; இந்த List ஐ இந்த ஆண்டிற்கு பிறகு மறுபரிசீலனை செய்யப்படும்.
- கணவன், மனைவி / வாழ்கை துணை விசாவிற்கு குறைந்தபட்ச வருமானம் 11 April 2024 அன்று £29,000 ஆக உயர்ந்தது, 2024ஆம் ஆண்டின் பின்னர் ஏதோ ஒரு கட்டத்தில் இதனை சுமார் £34,500 வரை உயர்த்த திட்டமிட்டனர், பின்னர் இறுதியாக 2025 இல் சுமார் £38,700 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
- மாணவர் விசா குறித்த ஆய்வை Migration Advisory Committee May 14, 2024 அன்று வெளியிட்டது, அதில் குறிப்பிடத்தக்க துஷ்பிரயோகம் கண்டறியப்படவில்லை, எனவே இந்த வழியை திறந்தே வைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
UK அரசாங்கம் இந்த மாற்றங்களைச் செய்ய முடிவு செய்ததற்கான காரணம் என்ன?
UK அமைச்சர்கள் குடியேற்றம் மிக அதிகமாக உள்ளது என்று நம்புகின்றனர். 2022 ஆம் ஆண்டில் மொத்த குடியேற்றம் (குடியேறியவர்களின் எண்ணிக்கையில் இருந்து வெளிநாடு புறப்பட்டவர்களின் எண்ணிக்கை கழித்து) 764,000 ஆக மதிப்பிடப்பட்டது.
சமீப மொத்த குடியேற்ற அதிகரிப்புக்கு முக்கிய பங்களிப்பாளர்களாக – சர்வதேச மாணவர்கள், சமூக சேவை தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் (பராமரிப்பவர்கள்), மனிதாபிமான விசா திட்டங்கள் மற்றும் அகதி கோரிக்கை விண்ணப்பதாரர்கள் ஆகியோராக இருந்தனர்.
2023 May மாதம் தனித்தனியாக அறிவிக்கப்பட்டு 2024 ஆரம்பத்தில் இருந்து நடைமுறையில் உள்ள Student Dependent விதிமுறைகளுக்கான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, கடந்த December ல் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அனைத்து மாற்றங்களும் அப்போது இருந்திருந்தால் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு வந்தவர்களில் 300,000 பேர், வந்திருக்க முடியாது என்று உள்துறை அமைச்சகம் (Home Office) கூறுகிறது.
The UK government introduced significant changes to family and work visa rules in 2024, aimed at reducing immigration. Key changes include higher minimum salary thresholds for Skilled Worker Visas, restrictions on dependents for social care workers, and increased income requirements for spouse/partner visas. The Graduate Visa scheme was also reviewed for misuse. These changes, implemented between March and April 2024, are part of a broader strategy to reduce net migration, which was at 764,000 in 2022. The Home Office estimates these changes could have reduced last year’s immigration by 300,000.



