Germany யில் வீட்டு உரிமையாளர் அதிக வாடகை விதிக்கிறாரா? உங்களுக்கான பதிவு!
Germany யில் புதிய கருவி(Calculator) வாடகை சுரண்டலை எதிர்க்கிறது
Germany யின் இடது கட்சியான ‘die Linke’ அறிமுகப்படுத்திய புதிய Online கருவியைப் பயன்படுத்தி, Berlin, Leipzig, Freiburg மற்றும் Hamburg ஆகிய நகரங்களில் வசிக்கும் வாடகைதாரர்கள் தங்களுக்கு அதிக வாடகை விதிக்கப்படுகிறதா என்பதை கண்டறியலாம். மேலும், ஒரு Click ல் தொடர்புடைய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யலாம்.
எப்படி வேலை செய்கிறது?
- தங்கள் வாடகை விவரங்களை Online ல் உள்ளிட்டால், இந்த Calculator (Mietwucher-Rechner) அவர்கள் அதிக வாடகை செலுத்துகிறார்களா என்பதை கணக்கிடுகிறது.
- அதிக வாடகை விதிக்கப்பட்டால், கணக்கிட்ட பிறகு ஒரு Click ல் உள்ளூர் வீட்டுவசதி அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யலாம்.
வீட்டு உரிமையாளர்கள் இரண்டு சட்டரீதியான வரம்புகளை மீறினால், வாடகை சுரண்டலில் ஈடுபட்டதாகக் கருதப்படலாம்.
- 20% அதிக வாடகை: வீட்டு உரிமையாளர்கள், உள்ளூர் வாடகை விகிதத்தை விட 20% அதிகமாக வாடகை வசூலித்தால், அவர்களுக்கு 50,000 Euros வரை அபராதம் விதிக்கப்படலாம்.
- 50% அதிக வாடகை: வீட்டு உரிமையாளர்கள், உள்ளூர் வாடகை விகிதத்தை விட 50% அதிகமாக வாடகை வசூலித்தால், அது குற்றமாகக் கருதப்பட்டு, சிறை தண்டனை கூட விதிக்கப்படலாம்.
Berlin ல் பெரும் வரவேற்பு:
- Calculator (Mietwucher-Rechner) அறிமுகமான முதல் வாரத்தில் 5,672 Berlin மக்கள் இதைப் பயன்படுத்தினர்.
- இவர்களில் 75% பேர் உள்ளூர் வாடகை விகிதத்தை விட சராசரியாக 56% அதிகமாக வாடகை செலுத்துவதாக கண்டறியப்பட்டது.
Germany யில் வீட்டுவசதி அதிகாரிகளின்(Local Housing Authorities) நடவடிக்கை:
- Germany யில் கடந்த 20 ஆண்டுகளில் மிக மோசமான வீட்டுப் பற்றாக்குறை நிலவுகிறது.
- இதனால் பல வாடகைதாரர்கள் வீட்டை இழக்கும் பயத்தில் வீட்டு உரிமையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தயங்குவார்கள்.
- ஆனால், அதிக வாடகை செலுத்தும் வாடகைதாரர்கள் நேரடியாக வீட்டு உரிமையாளரை தொடர்பு கொள்ள வேண்டியதில்லை.
- வீட்டுவசதி அதிகாரிகள், பொது நலன் கருதி இதை கையாள்வார்கள்.
- வீட்டுவசதி அதிகாரிகள் விசாரணை நடத்தி, அதிக வாடகை விதிக்கப்பட்டுள்ளது என்று கண்டறிந்தால், வாடகைதாரர்களுக்கு வாடகை குறைக்கப்படும். மேலும், அதிகமாக செலுத்திய வாடகை தொகையும் திருப்பித் தரப்படும்.
மற்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு இந்த சேவை கிடைக்குமா?
தற்போது, Berlin, Leipzig, Freiburg மற்றும் Hamburg ஆகிய நகரங்களில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த Calculator ஐப் பயன்படுத்த முடியும். ஆனால், Germany யின் மற்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கும் அதிக வாடகை விதிக்கப்பட்டால் அதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று கட்சி விளக்கியுள்ளது.
உதாரணமாக, Frankfurt ல் வீட்டுவசதி அதிகாரிகள் சில வீட்டு உரிமையாளர்களுக்கு 321,000 Euros அபராதம் விதித்துள்ளனர். மேலும், 419,000 Euros ஐ வாடகைதாரர்களுக்கு திருப்பித் தந்துள்ளனர்.
எல்லா நகரங்களுக்கும் பொருந்தும்:
- 50,000-க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அனைத்து நகரங்களிலும் வாடகை கட்டுப்பாடு பொருந்தும்.
- பெரும்பாலான நகரங்களில் உள்ள வீட்டுவசதி சங்கங்கள் இதுபோன்ற Calculator களை வழங்குகின்றன.
நீங்கள் வசிக்கும் நகரத்தில் வாடகை கட்டுப்பாடு இருக்கிறதா? உங்கள் வீட்டு உரிமையாளர் உங்களுக்கு அதிக வாடகை விதிக்கிறாரா என்று சந்தேகிக்கிறீர்களா?
இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம்!
உங்கள் நகரத்தின் வீட்டுவசதி அதிகாரியை நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அவர்கள் உங்கள் பிரச்சனையை கேட்டு, அதற்கான தீர்வை கண்டுபிடிக்க உதவுவார்கள்.
உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்றால், கவலை வேண்டாம். Die Linke என்ற ஒரு கட்சி, இந்த விடயத்தில் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு மாதிரி கடிதத்தை வழங்கியுள்ளது. இந்த கடிதத்தை நீங்கள் வீட்டுவசதி அதிகாரியிடம் அனுப்பலாம்.
Germany’s Left Party (die Linke) has launched a rent calculator for tenants in Berlin, Leipzig, Freiburg, and Hamburg to check for overcharges. Over 5,600 Berliners used it in the first week, with 75% discovering illegally high rents. The tool allows tenants to report exploitation directly to local housing authorities, ensuring refunds and rent reductions without direct landlord disputes. Similar legal protections exist for tenants in other cities with Mietspiegel limits.



