நியூசிலாந்தில் உங்கள் கல்விப் பயணத்தைத் தொடங்க இது ஒரு பொன்னான வாய்ப்பு.
University of Waikato-வின் Vice Chancellor’s International Excellence Scholarship-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளங்கலை (Undergraduate) மற்றும் முதுகலை (Postgraduate) திட்டங்களில் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
2015-ல் நிறுவப்பட்ட University of Waikato Vice Chancellor’s International Excellence Scholarship சிறந்த கல்வித் திறனுள்ள சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
NZD $15,000 வரை மதிப்புடைய இந்த உதவித்தொகை, உலகளாவிய தூதுவர்களாக மாறும் திறமையான மாணவர்களை ஊக்குவிக்கிறது.
நியூசிலாந்தில் படிக்கத் திட்டமிட்டால், இப்போதே விண்ணப்பிக்குங்கள்!
உதவித்தொகை பற்றிய மேலதிக விவரங்கள்
பல்கலைக்கழகத்தின் பெயர்: University of Waikato
நாடு: New Zealand
கல்வி நிலை: இளங்கலை மற்றும் முதுகலை (Undergraduate & Postgraduate)
நிதி உதவி: Partially Funded
கால அளவு: 1 முதல் 3 ஆண்டுகள் வரை
Scholarship-ன் நன்மைகள் (Benefits)
- இந்த நியூசிலாந்து Scholarship ஆனது NZD $15,000 வரை மதிப்புடையது. இது மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் (Tuition Fees) நேரடியாகச் செலுத்தப்படும்.
- இளங்கலைப் படிப்புகளுக்கு அதிகபட்சமாக $15,000 வரையிலும், முதுகலைப் படிப்புகளுக்கு அதிகபட்சமாக $10,000 வரையிலும் இந்த Scholarship வழங்கப்படலாம்.
- நியூசிலாந்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றில் படிப்பதற்கான அரிய வாய்ப்பு இது.
- பன்னாட்டுப் பண்பாட்டை அனுபவிக்கவும், தரமான கல்வி முறையைப் பெறவும் இந்த வாய்ப்பு உதவும்.
தகுதி வரம்புகள் (Eligibility Criteria)
இந்த Vice Chancellor’s International Excellence Scholarship 2025-க்கு விண்ணப்பிக்க நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய முக்கிய தகுதிகள்:
- விண்ணப்பிக்கும் நேரத்தில் நீங்கள் வெளிநாட்டில் (சர்வதேச மாணவராக) வசிப்பவராக இருக்க வேண்டும்.
- Waikato University-யில் எந்தவொரு திட்டத்திலும் (Program) அல்லது Diploma படிப்பிலும் நீங்கள் ஏற்கனவே சேர்ந்து இருக்கக் கூடாது.
- பல்கலைக்கழகத்திடமிருந்து நீங்கள் ஒரு நிபந்தனைக்குட்பட்ட (Conditional) அல்லது நிபந்தனையற்ற (Unconditional) Offer Letter-ஐ பெற்றிருக்க வேண்டும்.
- நீங்கள் Waikato University-யில் Undergraduate அல்லது Postgraduate படிப்புக்கு முதன்முறையாக விண்ணப்பிப்பவராக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 12 மாதங்கள் கால அளவுள்ள முழு நேரப் பட்டப்படிப்புத் திட்டத்தில் சேர வேண்டும். (Full-time Degree Program)
- விண்ணப்பிக்கும் நேரத்தில் Waikato University-யில் எந்தவொரு Undergraduate அல்லது Postgraduate திட்டத்திலும் சேர்ந்து, கல்விக் கட்டணம் செலுத்தி இருக்கக் கூடாது.
- மாணவர் Exchange Programs மூலம் வரும் மாணவர்களுக்கு இந்த Scholarship பொருந்தாது.
- நீங்கள் எந்தவொரு Sponsor செய்யும் அமைப்பு அல்லது உறுதியளிக்கப்பட்ட கடன் திட்டத்தின் (Guaranteed Credit arrangement) மூலமாகவும் வந்திருக்கக் கூடாது.
- உங்களுடைய முந்தைய கல்வியில் குறைந்தபட்சம் B+ க்கு சமமான GPA-வை பெற்றிருக்க வேண்டும்.
- Waikato University-யின் ஆங்கில மொழித் தகுதித் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
- இந்த Scholarship-ஐ மற்ற எந்த நிதி உதவியுடனும் சேர்த்து பெற முடியாது.
அதாவது, Waikato University வழங்கும் மற்ற Scholarships, Awards, Grants, அல்லது Funds உடன் இதை இணைத்து பயன்படுத்த முடியாது.
அதேபோல், Education New Zealand அல்லது Manaaki Scholarship போன்ற பிற நியூசிலாந்து அரசாங்கம் வழங்கும் Scholarship-யும் இதன் கூட சேர்க்க அனுமதி இல்லை.

தெரிவு செய்யும் வரம்புகள் (Selection Criteria)
- கல்வித் தகுதி மற்றும் செயல்திறன்(Academic merit and performance).:
- விண்ணப்பதாரரின் உயர் கல்வித் தகுதிகள் (Degrees, Certifications) மற்றும் கல்விச் செயல்பாடுகளில் சிறப்பான தேர்ச்சி / திறமை (குறிப்பிட்ட செயல்திறன் மற்றும் மதிப்பெண்கள்) ஆகியவை முக்கியமானவை.
- பல்கலைக்கழகத்தின் உலகளாவிய தூதுவராக மாறும் திறன் மற்றும் ஊக்கம்(Potential and motivation to become global ambassadors):
- பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, சர்வதேச அளவில் பல்கலைக்கழகத்தின் மதிப்பை உயர்த்தும் திறனையும், அதற்கான ஆழ்ந்த ஆர்வத்தையும் கொண்டிருத்தல். (ஆளுமை, தொடர்புத் திறன், தலைமைப் பண்பு மற்றும் ஊக்கம்)
விண்ணப்பிக்கும் முறை (Application Process)
Vice Chancellor’s International Excellence Scholarship 2025-க்கு விண்ணப்பிக்க நீங்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Email மூலம் உங்களைப் பதிவு செய்து கொள்ளவும்.
- விண்ணப்பத்தை தொடங்க ‘Apply now’ பொத்தானை அழுத்தவும்.
- தனிப்பட்ட மற்றும் கல்வித் தகவல் உள்ளிட்ட தேவையான அனைத்துத் தகவல்களையும் வழங்கவும்.
- நீங்கள் சேர விரும்பும் Degree type, பாடத்திட்டம் (Program), Semester மற்றும் Year ஆகியவற்றைத் தேர்வு செய்யவும்.
- தேவையான அனைத்துப் படிவங்களையும் பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும்.
- Waikato University-யில் இருந்து நிபந்தனைக்குட்பட்ட அல்லது நிபந்தனையற்ற சேர்க்கை அனுமதி கடிதத்தை பெற்றிருக்க வேண்டும்.
- Online விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போது, நீங்கள் ஏன் Waikato University-யில் படிக்க விரும்புகிறீர்கள், மேலும் பல்கலைக்கழகத்திற்கு எவ்வாறு உலகளாவிய தூதுவராக இருப்பீர்கள் என்பதை விளக்கி, குறிப்பிட்ட விவரங்களை வழங்க வேண்டும்.
- தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து, இறுதி தினத்திற்கு முன் விண்ணப்பிக்கவும்.
குறிப்பு:
பல்கலைக்கழகத்தின் மூன்று முக்கிய Trimesters-ல் — A, B, மற்றும் C Trimesters — நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் Trimesters ஆரம்பிப்பதற்கு நான்கு வாரங்களுக்கு முன்னதாகவே உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதை உறுதி செய்யவும்.
விண்ணப்ப கால வரையறை (Application Deadline)
பின்வரும் Trimesters-கான அனுமதி கடிதங்கள் பெறுவதற்கான (விண்ணப்பிப்பதற்கான) இறுதித் திகதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| Trimesters | கடைசி நாள் (Deadlines) |
| A Trimesters | November 30 |
| B Trimesters | April 30 |
| C Trimesters | August 31 |
| H or X Trimesters | October 31 |
Study in New Zealand with the University of Waikato! Applications are now open for the Vice Chancellor’s International Excellence Scholarship — a golden opportunity for talented undergraduate and postgraduate international students.
Established in 2015, this prestigious scholarship rewards academic excellence and encourages students with the potential to become global ambassadors.
Valued up to NZD $15,000, it’s your chance to begin your academic journey at one of New Zealand’s top universities.
Dreaming of studying in New Zealand? Apply now and make it happen!



