Germany யில் வீடு வாடகைக்கு எடுப்பதா அல்லது வாங்குவதா: உங்களுக்கு எது சிறந்தது?
Germany, குறிப்பாக Berlin போன்ற பெரிய நகரங்களில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு கேள்விதான், “வீடு வாங்குவது நல்லதா? அல்லது வாடகைக்கு எடுப்பது நல்லதா?” என்பது. இந்த முடிவுக்கு வர பல காரணிகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டின் விலை எவ்வளவு? வாடகை எவ்வளவு? வட்டி விகிதம் எப்படி இருக்கிறது? போன்ற கேள்விகள் நம் மனதில் எழலாம்.
ZIEGERT என்ற நிறுவனம் இந்த விஷயத்தைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து, வெளிநாட்டவர்கள் இந்த முடிவை எடுக்கும் போது என்னென்ன காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை விளக்கியுள்ளது.
Germany யில் வீடு வாங்குவது இப்போது எளிதாகிவிட்டதா?
Germany யில் வீடுகளின் விலை சமீப காலமாக மாறிக்கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன் வீடு வாங்க வங்கி கடன் வாங்கினால் அதிக வட்டி கட்ட வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அந்த வட்டி குறைந்துவிட்டது. இப்போது வீடு வாங்க வங்கி கடன் வாங்கினால், முன்பு போல அதிக பணம் கட்ட வேண்டியதில்லை. அதாவது, வீடு வாங்குவது கொஞ்சம் எளிதாகிவிட்டது.
Berlin போன்ற பெரிய நகரங்களில் வீடுகளின் விலை ஏன் அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு காரணம், அந்த நகரங்களில் வீடு வாங்க விரும்புபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் புதிய வீடுகளை கட்டுவது மிகவும் குறைவு. இதனால், வீடுகளின் தேவை அதிகமாக இருப்பதால், விலையும் அதிகமாகவே இருக்கிறது.
Germany யில் வீடு வாங்குவதன் நன்மைகள்
Germany யில் நீண்ட காலமாக தங்க திட்டமிடும் வெளிநாட்டவர்களுக்கு, வீடு வாங்குவது வாடகைக்கு எடுப்பதை விட பல நன்மைகளை வழங்குகிறது.
- நிலைத்தன்மை: வீடு வாங்கினால், வாடகை வீட்டில் இருப்பதை விட நிலைத்தன்மையாக இருக்கும். வாடகை வீட்டில், வாடகை விலை எப்போது வேண்டுமானாலும் உயரலாம். ஆனால், சொந்த வீட்டில் அப்படி ஒரு பிரச்சனை இருக்காது.
- பணத்தை சேமிக்கலாம்: தற்போது வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், வீடு வாங்கினால், மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் தொகை குறைவாக இருக்கும். இதனால், நீண்ட காலத்தில் அதிகளவான பணத்தை சேமிக்க முடியும்.
- சொத்து மதிப்பு உயரும்: நல்ல இடத்தில் வீடு வாங்கினால், அதன் மதிப்பு காலப்போக்கில் உயரும். இது ஒரு நல்ல முதலீடாக இருக்கும்.
- இதனால், எதிர்காலத்தில் நீங்கள் வீட்டை விற்றால், அதிக பணம் கிடைக்கும்.
- வீடு வாங்கும்போது முன்பணம் மற்றும் இறுதி கட்டணங்கள் போன்ற செலவுகள் அதிகமாக இருக்கும். ஆனால் நீண்ட காலத்தில், வீட்டின் மதிப்பு அதிகரிப்பதால், இந்த செலவுகளை ஈடுசெய்யலாம்.
- குறைந்த மாதாந்த கட்டணம்: நீங்கள் 20% முன்பணம் செலுத்தினால், மாதந்தோறும் கட்ட வேண்டிய Mortgage கட்டணம் குறைவாக இருக்கும். இது வீடு வாங்குவதை இன்னும் லாபகரமானதாக ஆக்குகிறது.
Germanyயில் வீடு வாடகைக்கு எடுப்பதன் நன்மைகள்
நெகிழ்வுத்தன்மை தேவைப்படுவோருக்கு வாடகை நல்லது:
- எளிதான இடமாற்றம்: வாடகை வீட்டில் வசிக்கும்போது, வேலை அல்லது தனிப்பட்ட காரணங்களால் வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தால், எளிதாக இடம்பெயரலாம்.
- பராமரிப்பு செலவு இல்லை: வீடு வாங்கினால், வீட்டை பராமரிக்க, பழுதுபார்க்க, புதுப்பிக்க என பல செலவு செய்ய வேண்டும். ஆனால் வாடகை வீட்டில் இந்த செலவுகள் இருக்காது.
- குறைந்த பொறுப்பு: வாடகை வீட்டில் வசிக்கும்போது, வீட்டின் பராமரிப்பு, வரி செலுத்துதல் போன்ற பொறுப்புகள் வீட்டு உரிமையாளருக்கு இருக்கும்.
வெளிநாட்டவர்கள்(Expats) கவனிக்க வேண்டியவை
வெளிநாட்டவர்கள் வீடு வாங்குவது அல்லது வாடகைக்கு எடுப்பது என்ற முடிவை எடுக்கும் போது, தங்களின் தனிப்பட்ட சூழ்நிலைகளை கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
1. தங்குவதற்கான கால அளவு:
- நீண்ட கால திட்டம்: ஜெர்மனியில் 5-10 வருடங்களுக்கு மேல் தங்க திட்டமிட்டால், வீடு வாங்குவது நல்லது. இதன் மூலம் முதலீடு செய்த பணத்தை மீட்க முடியும்.
- குறுகிய கால திட்டம்: குறுகிய காலத்திற்கு தங்க திட்டமிட்டால், வாடகை வீடு போதுமானதாக இருக்கும். வீடு வாங்கினால் அதிக செலவு ஏற்படும்.
2. வட்டி விகிதம் மற்றும் சந்தை நிலைமை:
- தற்போதைய வட்டி விகிதம்: தற்போது வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், வீடு வாங்குவதற்கு நல்ல நேரமாக இருக்கிறது.
- எதிர்கால மாற்றங்கள்: ஆனால் வட்டி விகிதம் எப்போது வேண்டுமானாலும் உயரலாம். அதேபோல், வீட்டு விலையும் மாறலாம்.
3. நிதி நிலைமை:
- முன்பணம் மற்றும் கட்டணங்கள்: வீடு வாங்க முன்பணம், வரி, பத்திரப்பதிவு கட்டணம் போன்ற செலவுகள் தேவைப்படும்.
- மாதாந்திர கட்டணம்: வீட்டுக் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் கட்ட வேண்டிய தொகை அதிகமாக இருக்கும்.
- நிதி திட்டமிடல்: வீடு வாங்கும் முன், நீண்ட கால நிதி திட்டமிடல் அவசியம்.
4. வீட்டை பராமரிப்பது:
- வீடு வாங்கினால்: வீட்டை பராமரிக்க, பழுதுபார்க்க, புதுப்பிக்க நேரமும் பணமும் செலவழிக்க வேண்டும்.
- வாடகை வீடு: வாடகை வீட்டில் வீட்டை பராமரிக்கும் பொறுப்பு வீட்டு உரிமையாளருக்கு இருக்கும்.
5. வரி விதிப்பு மற்றும் வட்டி பாதுகாப்பு:
- Germany யில் வீடு வாங்கினால்: வீட்டுக்கான வட்டி, வரி, பராமரிப்பு செலவுகளை வரியில் கழிக்கலாம்.
- Germany யில் வட்டி: Germany யில் நீண்ட காலத்திற்கு (10 அல்லது 15 வருடங்கள்) வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. இது நீண்ட கால திட்டமிடலை எளிதாக்குகிறது.
- அமெரிக்கா(USA) மற்றும் இங்கிலாந்து(UK): இந்த நாடுகளில் வட்டி விகிதம் மாறிக்கொண்டே இருக்கும். இது நீண்ட கால திட்டமிடலை கடினமாக்குகிறது.
வீடு வாங்க சரியான நேரம் இப்போதா?
வட்டி விகிதம் குறைந்துள்ளது: 2023-ம் ஆண்டுக்குப் பிறகு வட்டி விகிதம் குறைந்துள்ளது. இது வீடு வாங்குவதற்கு நல்ல சூழ்நிலையாக உள்ளது.
வீட்டு விலை உயரலாம்: Berlin போன்ற நகரங்களில் வீடுகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், வீட்டு விலை தொடர்ந்து உயரலாம். அதே நேரத்தில், புதிய வீடுகளை கட்டுவது குறைவாகவே உள்ளது.
- வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போது வாங்குவது நல்லது: இப்போது வீடு வாங்கினால், மாதந்தோறும் கட்ட வேண்டிய தொகை குறைவாக இருக்கும்.
- வீட்டு விலை உயரும்: வீட்டு விலை உயர்ந்தால், அதிக பணம் கொடுத்து வீடு வாங்க வேண்டியிருக்கும்.
- நீண்ட கால நன்மைகள்: வீடு வாங்குவது நீண்ட காலத்திற்கு பார்க்கும்போது நல்ல முதலீடாக இருக்கும்.
உங்கள் தனிப்பட்ட சூழ்நிலையை மதிப்பீடு செய்யுங்கள்
Germany யில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் வீடு வாங்குவது அல்லது வாடகைக்கு எடுப்பது என்பதை முடிவு செய்யும் போது, தங்களின் தனிப்பட்ட சூழ்நிலை, நிதி நிலைமை மற்றும் சந்தை நிலைமைகளை கவனமாக ஆராய்ந்து பார்த்து முடிவு எடுக்க வேண்டும்..
Expats in Germany must weigh personal circumstances, financial readiness, and market conditions when deciding to rent or buy. Buying offers stability and long-term benefits, while renting provides flexibility and less responsibility. Carefully align your decision with your financial goals and future plans.



