இம் ஆண்டிற்கான கோடை கச்சேரிகளில் (Summer Concerts) ஒன்றிற்கான இலவச டிக்கெட்டுகளை வெல்லுங்கள்!
The Concertgebouw இசை அரங்கம் இந்த கோடை காலத்தில் July 1 முதல் August 31 வரை தங்களின் வருடாந்த கோடை கச்சேரிகளை நடத்தவுள்ளது. IamExpat என்ற இணையதளம் ஐந்து வெவ்வேறு இசை நிகழ்ச்சிகளுக்கான 10 ஜோடி டிக்கெட்டுகளை வழங்குகிறது. எனவே, நீங்கள் வெற்றி பெற வாய்ப்பைப் பெற இப்போதே பங்கு பெறுங்கள் .
கலந்து கொள்ள, படிவத்தை நிரப்பி, நீங்கள் எந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள், ஏன் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவும்!
நீங்கள் வெற்றி பெறுபவர்களில் ஒருவராக இருக்கலாம்!
- இடம்: Concertgebouw Main Hall, Concertgebouwplein 10, 1071 LN, Amsterdam
- நேரம்: நீங்கள் தேர்ந்தெடுக்கும் இசை நிகழ்ச்சியைப் பொறுத்து (கீழே விவரங்களைப் பார்க்கவும்) July 23 செவ்வாய், August 16 வெள்ளிக்கிழமை, August 17 சனிக்கிழமை அல்லது August 22 வியாழக்கிழமை
- டிக்கெட் ஜோடிகளின் எண்ணிக்கை: இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு 10
July மற்றும் August 2024 இல் Concertgebouwவில் கோடை கச்சேரிகள்!
உங்கள் அன்பானவர்களுடன் இணைந்து, உற்சாகமூட்டும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை விட கோடை காலத்தை வரவேற்க வேறு எந்த வழியும் இல்லை. கிளாசிக்கல் முதல் ஜாஸ் வரை, திரைப்பட இசை முதல் அ கப்பெல்லா வரை என 80க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளின் தொகுப்புடன், பார்வையாளர்களுக்கு பல்வேறு தேர்வுகள் உள்ளன.
Concertgebouwவில் கோடை கச்சேரிகளில் (SummerConcerts) ஒன்றிற்கு சென்றால், நிகழ்ச்சி இடைவேளைகளில் CHANDON Garden Spritz Cocktail லை நீங்கள் அனுபவிக்க முடியும். இருப்பினும், வேடிக்கை இதோடு முடிவதில்லை! ஏனெனில் பல இசை நிகழ்ச்சிகளில் Meet & Greet அல்லது After party, DJ போன்றவை இடம்பெறும். இந்த கோடை கச்சேரிகள் VriendenLoterij sponsor செய்கிறது.
IamExpat என்ற இணையதளம் கீழே உள்ள இசை நிகழ்ச்சிகளில் ஒவ்வொன்றிற்கும் 10 ஜோடி டிக்கெட்டுகளை வழங்குகிறது:
Tiken Jah Fakoly (July 23)
“ஆபிரிக்கன் ரெக்கேவின் மாஸ்டர் (Master of African Reggae)” என்று அழைக்கப்படும் Tiken Jah Fakoly இசை நிகழ்ச்சியும் இதில் இடம்பெற உள்ளது. ஐவரிய மக்களும் ஆபிரிக்கர்களும் பொதுவாக சந்திக்கும் அநீதிகளை எதிர்த்து அவரது இசை குரல் எழுப்புகிறது. இவரது இசை நிகழ்ச்சி நிச்சயமாக கவனிக்க வேண்டிய ஒன்று. இவர் July 23 அன்று Concertgebouwவில் நிகழ்ச்சி நடத்துவார்.
Dvořák’s Symphony No. 8 & Mozart’s Piano Concerto No. 22 (August 16)
தென் கொரிய பியானோ கலைஞர் Yeol Eum Son, August 16 ஆம் தேதி Eduardo Strausser என்பவரின் இசைத் தலைமையில் Dvořák’s (ட்வோறாக்) இன் பிரியமான எட்டாவது Symphony மற்றும் Mozart’s ன் Piano Concerto எண் 22 ஆகியவற்றை இசைப்பார்.
MIAGI Orchestra: ஆபிரிக்க கால்தடத்தைத் தேடி (ஆகஸ்ட் 17)
எதிர்பார்க்கப்படும் மற்றொரு இசை நிகழ்ச்சி ” MIAGI Orchestra: ஆபிரிக்க கால்தடத்தைத் தேடி”. தென் ஆப்பிரிக்காவின் முழு மக்கள்தொகையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 60 இளம் இசைக்கலைஞர்கள், உலகமெங்கிலும் இருந்து ஆபிரிக்க புலம்பெயர்ந்தோரில் இருந்து வரும் ஆபிரிக்க நாட்டுப்புற இசை மற்றும் Classic Jazz இசை எண்களின் நவீன ஏற்பாடுகளை இசைப்பார்கள். இவர்கள் August 17 அன்று Concertgebouwவில் நிகழ்ச்சி நடத்துவார்கள்.
Video Games இசைத் தொகுப்புகளின் (Soundtracks) ரசிகரா நீங்கள்? அப்படியானால், ஈமர் இசைத் தலைமையில் நடத்தப்படும் மற்றும் Antwerp Symphony Orchestra செய்யும் “Video Games in Concert” நிகழ்ச்சியை தவறவிடாதீர்கள்!
இது இந்த கோடை காலத்தில் Concertgebouwவில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் ஒரு சில தேர்வுகளே ஆகும். முழு நிகழ்ச்சித் தொகுப்பையும் பார்க்க, இன்றுதான் Concertgebouw இணையதளத்தைப் (The Concertgebouw Website) பார்வையிட்டு உங்கள் டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளுங்கள்!
The Concertgebouw music hall will host its annual summer concerts from July 1 to August 31. The website IamExpat is giving away 10 pairs of tickets for five different music events. So, join now for a chance to win!
To participate, fill out the form and let us know which music event you’d like to attend and why you believe you should win!



