UK விசாவிலிருந்து Health மற்றும் Care Worker Visa க்கு மாற்றுதல்
நீங்கள் UK-ல் சுகாதாரத் துறையில் பணிபுரிய விரும்பும் ஒரு சுகாதார நிபுணராக இருந்தால், Health மற்றும் Care Worker Visa-வைப் பெறுவது மிகவும் முக்கியம். எங்கள் Pulampeyar.com Website இல், Health மற்றும் Care Worker Visa-ற்கு மாற விரும்பும் நபர்களுக்கு சிறந்த வழிகாட்டுதல்களை வழங்குகிறோம்.
Health மற்றும் Care Worker Visa என்பது Skilled Worker Visa போன்றது. இந்த விசா, Doctors, Nurses, Health Professionals, மற்றும் Adult Social Care Professionals க்கு UK-ல் வேலை செய்ய உதவுகிறது. UK-ல் சுகாதாரத்துறையில் வேலை செய்யும் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான தொழிலாளர்களுக்கு இந்த விசாவை வழங்குகின்றன. இந்த விசாவை வழங்க, குறிப்பிட்ட தகுதிகள் மற்றும் சம்பளத் தகுதிகள் இருக்க வேண்டும்.
நீங்கள் ஏற்கனவே UK இல் வேறு வகையான விசாவில் இருந்தால், Health மற்றும் Care Worker Visa ற்கு மாற விண்ணப்பிக்க முடியும்.
இந்த விசாவை பெற்றால், 5 வருடங்கள் வரை UK-ல் வசித்து வேலை செய்யலாம். மேலும், இந்த 5 வருடங்களுக்குப் பிறகு, UK-ல் நிரந்தரமாக தங்கலாம். இதன் மூலம், விரும்பிய வேலையை மாற்றிக் கொள்ளலாம், அரசாங்கத்தின் நலத்திட்டங்களையும் பயன்படுத்தலாம்.
முடிவு வரும் வரை நீங்கள் UK, Ireland, the Channel Islands அல்லது Isle of Man ஐ விட்டு வெளியே செல்லக்கூடாது. இல்லையெனில் உங்கள் விண்ணப்பம் ரத்து செய்யப்படும்.
01. யார் இந்த விசாவிற்கு மாற்ற விண்ணப்பிக்க முடியாது?
நீங்கள் தற்போது UK இல் பின்வரும் விசாக்களில் ஏதேனும் ஒன்றில் இருந்தால் Health மற்றும் Care Worker Visa-ற்கு மாற விண்ணப்பிக்க முடியாது:
- சுற்றுலா விசா (Visit Visa)
- குறுகிய கால மாணவர் விசா (Short-term Student Visa)
- குழந்தை மாணவரின் பெற்றோர் விசா (Parent of a Child Student Visa)
- பருவகால தொழிலாளி விசா (Seasonal Worker Visa)
- தனியார் வீட்டில் வேலை செய்யும் தொழிலாளி விசா (Domestic Worker in a Private Household Visa)
- குடிவரவு பிணை Immigration Bail
ஏனென்றால் உங்களுக்கு குடும்ப காரணங்களுக்காக சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
நீங்கள் இந்த வகைகளில் ஒன்றாக இருந்தால், UK ஐ விட்டு வெளியேறி வெளிநாட்டிலிருந்து Health மற்றும் Care Worker Visa-ற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
02. யார் Health மற்றும் Care Worker Visa-ற்கு மாற்ற தகுதியுடையவர்?
UK இல் இருந்து Health மற்றும் Care Worker Visa-ற்கு மாற தகுதியுடையவராக இருக்க, நீங்கள் பின்வரும் தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
- தற்போதைய விசா வகை: நீங்கள் Health மற்றும் Care Worker Visa-ற்கு மாற அனுமதி கிடைக்க வழிவகுக்கும் விசா வகையின் கீழ் UK இல் இருக்க வேண்டும்.
- சுகாதார மற்றும் பராமரிப்பு துறையில் வேலை: நீங்கள் UK இல் சுகாதார மற்றும் பராமரிப்பு துறையில் வேலை வாய்ப்பைப் பெற்றிருக்க வேண்டும். இதில் மருத்துவர்கள், Nurses, சுகாதார உதவியாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய தொழில்கள் உள்ளன.
- ஆங்கில மொழி திறன்: நீங்கள் ஆங்கில மொழியில் நன்கு பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்து, இந்தத் தேவை மாறுபடலாம்.
மேலும், உங்கள் சூழ்நிலைகளைப் பொறுத்து வேறு சில தகுதிகளும் தேவைப்படும். உங்களுக்கு இந்த விசா கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள, எங்கள் பதிவை தொடர்ந்து படியுங்கள்.
UK இல் இருக்கும்போது Health மற்றும் Care Worker Visa-ற்கு எப்படி மாறுவது?
நீங்கள் ஏற்கனவே வேறு விசாவில் UK இல் இருந்தால், உங்கள் தற்போதைய விசா காலாவதிக்கு முன் Online-ல் விண்ணப்பிக்க வேண்டும்.
தொழில் குறியீடு இந்த விசாவிற்கு தகுதியானதா என்பதை சரிபார்க்கவும்.
Health மற்றும் Care Worker Visa-க்கு தகுதியடைய, உங்கள் வேலை பின்வரும் வகையான வேலைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்:
- 1171: Health Services and Public Health Managers and Directors
- 1231: Health Care Practice Managers
- 1232: Residential, day and Domiciliary Care Managers and Proprietors
- 2113: Biochemists and Biomedical Scientists
- 2114: Physical Scientists
- 2211: Generalist Medical Practitioners
- 2212: Specialist Medical Practitioners
- 2221: Physiotherapists
- 2222: Occupational Therapists
- 2223: Speech and Language Therapists
- 2224: Psychotherapists and Cognitive Behaviour Therapists
- 2225: Clinical Psychologists
- 2226: Other Psychologists
- 2229: Therapy Professionals not Elsewhere Classified
- 2231: Midwifery Nurses
- 2232: Registered Community Nurses
- 2233: Registered Specialist Nurses
- 2234: Registered Nurse Practitioners
- 2235: Registered Mental Health Nurses
- 2236: Registered Children’s Nurses
- 2237: Other Registered Nursing Professionals
- 2251: Pharmacists
- 2252: Optometrists
- 2253: Dental practitioners
- 2254: Medical radiographers
- 2255: Paramedics
- 2256: Podiatrists
- 2259: Other Health Professionals not Elsewhere Classified
- 2461: Social Workers
- 3111: Laboratory Technicians
- 3211: Dispensing Opticians
- 3212: Pharmaceutical Technicians
- 3213: Medical and Dental Technicians
- 3219: Health Associate Professionals not Elsewhere Classified
- 6131: Nursing Auxiliaries and Assistants
- 6132: Ambulance Staff (excluding Paramedics)
- 6133: Dental Nurses
- 6135: Care Workers and Home Carers
- 6136: Senior Care Workers
Your Partner and Children
நீங்கள் உங்கள் விசாவை மாற்றினாலும், உங்கள் குடும்பத்தினரின்(வாழ்கை துணை மற்றும் பிள்ளைகள்) விசா தானாகவே மாறாது. அவர்கள் தங்களுடைய விசாவை தனித்தனியாக மாற்ற வேண்டும். அவர்கள் தங்கள் விசாவை மாற்றாவிட்டால், அது முன்பே குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும்.
அவர்கள் உங்களுடன் சேர்ந்து விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் தற்போதைய விசா காலாவதிக்கு முன் எந்த நேரத்திலும் விண்ணப்பிக்கலாம்.
Health மற்றும் Care Worker Visa-ற்கு மாறுவதற்கான தகுதித் தேவைகள்
UK இல் இருந்து Health மற்றும் Care Worker Visa-ற்கு மாற தகுதியுடையவராக இருக்க, நீங்கள் பின்வருவனவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்:
- நீங்கள் தற்போது UK இல் Health மற்றும் Care Worker Visa-ற்கு மாற அனுமதிக்கும் ஒரு செல்லுபடியாகும் விசாவில் இருக்க வேண்டும்.
- Non-Tradeable Points 50 புள்ளிகளைப் பெற வேண்டும்;
- Tradeable Points குறைந்தது 20 புள்ளிகளைப் பெற வேண்டும்;
- UK-ல் தங்க உங்களுக்கு தேவையான பணம் இருக்க வேண்டும் அல்லது உங்கள் வேலை வழங்குநர் உங்களுக்கான செலவுகளை ஏற்க ஒப்புக்கொள்ள வேண்டும்;
- நல்ல நடத்தை உள்ளவராக இருக்க வேண்டும்.
உங்கள் வேலை வழங்குநர், உங்களுக்கு Health மற்றும் Care Worker Visa கிடைக்க தேவையான தகுதிகளை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், நீங்கள் இந்த விசாவிற்கு தகுதியானவர் என்பதை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும். உங்கள் வேலை வழங்குநர் ஒரு மருத்துவமனை அல்லது சுகாதார நிறுவனமாக இருந்தால், அவர்கள் இங்கிலாந்து அரசுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Note : லண்டனில் அமைந்துள்ள UKVI (UK Visas & Immigration) மற்றும் அதன் வணிக பங்காளியான UKVCAS Sopra Steria மூலம் உங்கள் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை சேவையை (Super Priority Service-SPS) பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம், உங்கள் விண்ணப்பம் பற்றிய முடிவு 24 மணி நேரத்தில் UKVI ஆல் எடுக்கப்படும். இந்த சேவையை பயன்படுத்தும் போது, விரைவாக விசா கிடைக்கும் என்றாலும், அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
If you’re in the UK under an eligible visa, you may switch to the Health and Care Worker visa, provided you meet the necessary requirements and have sponsorship from the NHS, an NHS supplier, or a care home for an approved role. This visa category offers benefits such as exemption from the Immigration Health Charge and reduced application fees.
Certain visa holders, like visitors, short-term students, and seasonal workers, cannot switch to a Health and Care Worker visa from within the UK and must apply from abroad.
References:
GOV.UK : Health and Care Worker visa



