அமெரிக்காவில் 2026 Diversity Visa திட்டம் (Green Card Lottery) தற்போது October 2, 2024 திறக்கப்பட்டுள்ளது.

Green Card Lottery கான timeline, செலவு மற்றும் விண்ணப்பிக்கும் விதம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

அமெரிக்கா அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை, ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளிலிருந்து மக்களை அங்கே வசிக்க அழைக்கிறது. இது பன்முகத்தன்மை இடம்பெயர்வு விசா திட்டம் என கூறப்படுகிறது அதாவது Diversity Immigrant Visa Program. இந்த விசாக்கள் அமெரிக்காவுக்கு குறைந்த அளவு இடம்பெயர்வு விகிதம் கொண்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். ஒவ்வொரு ஆண்டும் 55,000 பேருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். யாருக்கு இந்த விசாக்கள் (Diversity Visas – DVs) கிடைக்கும் என்று குலுக்கல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

 உலகத்தை ஆறு பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் கொடுக்கப்படும் விசாக்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. எந்த பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு குறைவான மக்கள் போகிறார்களோ, அந்த பகுதிக்கு அதிக விசாக்கள் கிடைக்கும்.  கடந்த ஐந்து வருடத்தில் அமெரிக்காவுக்கு (US) 50,000-க்கும் மேற்பட்ட மக்களை அனுப்பிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நாடு அதிகபட்சமாக 7% விசாக்களை (Diversity Visas) மட்டுமே பெற முடியும். இதனால், ஒரு நாடு மட்டும் அதிக விசாக்களைப் பெற்றுவிடாமல், பல நாடுகளுக்கு வாய்ப்பு கிடைக்கின்றன.

உதாரணமாக, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகத்தை ஆறு பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம். இந்த ஆறு பகுதிகளில் இருந்து அமெரிக்காவுக்கு குறைவான மக்கள் வரும் பகுதிகளுக்கு அதிக விசாக்கள் கொடுக்கப்படும்.

DV Lottery க்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்

முக்கிய அறிவிப்பு:

Diversity Immigrant Visa Program ல் விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை. அமெரிக்க அரசாங்கம் இந்த திட்டத்தை நடத்துவதற்கு வெளிப்புற ஆலோசகர்கள் அல்லது தனியார் சேவைகளைப் பயன்படுத்துவதில்லை. விண்ணப்பதாரர்களுக்கு DV விண்ணப்பத்தை தயாரிப்பதற்கு உதவி வழங்கும் தரகர்கள் அல்லது பிற நபர்கள் அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதி அல்லது ஒப்புதலின்றி இதைச் செய்கின்றனர். DV விண்ணப்பத்தை தயாரிப்பதற்கு வெளிப்புற தரகர்கள் அல்லது உதவியைப் பயன்படுத்துவது முற்றிலும் விண்ணப்பதாரரின் விருப்பப்படி உள்ளது. இங்கே எங்கள் மோசடி எச்சரிக்கையைப் படிக்கவும்.

ஒரு தகுதியான விண்ணப்பத்தை விண்ணப்பதாரர் நேரடியாக Online மூலம் சமர்ப்பித்தாலும் அல்லது ஒரு தரகர் மூலம் சமர்ப்பித்தாலும், Kentucky Consular Center ல் உள்ள கணினியால் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு சமமாக இருக்கும். Lottery பதிவு காலத்தில் பெறப்படும் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் அதன் பிராந்தியத்தில் சமமான வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்தால், அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும். விண்ணப்பத்தின் ஆதாரம் எதுவாக இருந்தாலும், இது பொருந்தும்.

2026 DV Lotteryக்கு தகுதியற்ற நாடுகளில் இவை அடங்கும்:

  • Bangladesh
  • Brazil
  • Canada
  • China (including Hong Kong SAR)
  • Colombia
  • Dominican Republic
  • El Salvador
  • Haiti
  • Honduras
  • India
  • Jamaica
  • Mexico
  • Nigeria
  • Pakistan
  • Philippines
  • South Korea
  • Venezuela
  • Vietnam

தேவையான கல்வி அல்லது வேலை அனுபவம்

DV லோட்டரி திட்டத்திற்கு தகுதியானவராக இருக்க, நீங்கள் இவற்றில் ஒன்று இருக்க வேண்டும்:

  • உயர்நிலைப் பாடசாலை கல்வி அல்லது அதற்கு சமமான கல்வி
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் தகுதியான தொழிலில் இரண்டு ஆண்டுகள் வேலை அனுபவம்.

Diversity Visa விண்ணப்பதாரர்கள் குறைந்தது உயர்நிலைப் பாடசாலை பட்டம் அல்லது கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வேலை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த வேலை அனுபவம் அமெரிக்க தொழிலாளர் துறை (U.S. Department of Labor) தீர்மானித்த குறைந்தது இரண்டு ஆண்டுகள் பயிற்சி தேவைப்படும் ஒரு தொழிலில் இருக்க வேண்டும்.

உங்கள் சொந்த நாடு தகுதியற்றது என்றால், நீங்கள் Diversity Visa ற்கு தகுதியானவராக இருக்க இரண்டு வழிகள் உள்ளன:

  • உங்கள் வாழ்கை துணைவர் தகுதியான நாட்டில் பிறந்திருந்தால், உங்கள் வாழ்கை துணைவருடன் விண்ணப்பித்து, உங்கள் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்கை துணைவரின் பிறப்பிடத்தைத் தேர்வு செய்யலாம்.
  • உங்கள் பெற்றோரில் யாரேனும் உங்கள் பிறப்பிடமான நாட்டில் சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களாக இல்லையெனில், உங்கள் தாய் அல்லது தந்தையின் பிறப்பிடத்தைத் தேர்வு செய்யலாம்.

2026 DV Lottery கான முக்கிய விவரங்கள்

  • பதிவு காலம்: October 2, 2024 – November 5, 2024 
  • Official Website: dvprogram.state.gov
  • பங்கேற்பு செலவு: இலவசம்
  • வெற்றியாளர்கள் அறிவிப்பு: May 2025
  • விசா விண்ணப்ப காலம்: October 1, 2025 – September 30, 2026

The Diversity Immigrant Visa (DV) Program offers 55,000 visas annually to immigrants from countries with low U.S. immigration rates. Applicants are selected through a random lottery, with visas distributed across six geographic regions. No fees are charged to enter, and using paid intermediaries offers no advantage. Submitting more than one entry per person results in disqualification.