2026-ஆம் ஆண்டில் கனடாவில் அதிக சம்பளம் வழங்கும் 20 சிறந்த தொழில்கள்

2026-இல் கனடாவில் ஒரு தொழிலைத் தேர்வு செய்வது என்பது உங்கள் தனிப்பட்ட ஆர்வம், கல்வித் தகுதிகள், மற்றும் வருமான வாய்ப்புகள் ஆகிய மூன்றுக்கும் இடையே சரியான சமநிலையை உருவாக்குவது ஆகும். ஒவ்வொரு மாகாணத்திலும், உங்கள் அனுபவ நிலையைப் பொறுத்தும் சம்பள அளவுகள் மாறுபடலாம்.

அதினால், உயர் கல்வி, சிறப்பு திறன்கள், மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் சில தொழில்கள் கனடாவில் எப்போதும் அதிக சம்பள பட்டியலில் முன்னிலையில் உள்ளன.

Indeed Canada வெளியிட்ட சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், 2026-ஆம் ஆண்டில் கனடாவில் அதிக வருமானம் வழங்கும் 20 முக்கிய தொழில்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும், கனடா குடிவரவு (PR / Work Permit) நோக்கங்களுக்காக பயன்படும் NOC 2021 குறியீடுகளும் ஒவ்வொரு தொழிலுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியல் கனடாவில் வேலை தேடும்வர்கள், வெளிநாட்டிலிருந்து குடியேற விரும்புவோர், மற்றும் தங்கள் தொழிலை மாற்ற நினைக்கும் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.

மருத்துவத் துறை (மிக உயர்ந்த ஊதியம் பெறுபவர்கள்)

1. Orthodontist

  • NOC 2021: 31110
  • சராசரி ஆண்டு ஊதியம்: $398,523
  • பற்கள் மற்றும் தாடை சீரமைப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பவர்கள்.

2. மயக்க மருந்து நிபுணர் (Anesthesiologist)

  • NOC 2021: 31100
  • சராசரி ஆண்டு ஊதியம்: $339,938
  • அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு மயக்க மருந்து அளித்தல் மற்றும் அவர்களின் உயிர் நிலைப்பாடுகளைக் கண்காணித்தல்.

3. மனநல மருத்துவர் (Psychiatrist)

  • NOC 2021: 31100
  • சராசரி ஆண்டு ஊதியம்: $333,711
  • மனநல கோளாறுகளைக் கண்டறிந்து மருந்து மற்றும் ஆலோசனைகள் மூலம் சிகிச்சையளிப்பவர்கள்.

4. அறுவை சிகிச்சை நிபுணர் (Surgeon)

  • NOC 2021: 31101
  • சராசரி ஆண்டு ஊதியம்: $327,976
  • காயங்கள் மற்றும் நோய்களைக் குணப்படுத்த அறுவை சிகிச்சைகளை மேற்கொள்பவர்கள்.

5. இதய நோய் நிபுணர் (Cardiologist)

  • NOC 2021: 31100
  • சராசரி ஆண்டு ஊதியம்: $275,716
  • இதயம் மற்றும் இரத்த ஓட்ட மண்டலம் சார்ந்த நோய்களுக்குச் சிகிச்சையளிப்பவர்கள்.

6. குடும்ப மருத்துவர் (Physician – Family/General)

  • NOC 2021: 31102
  • சராசரி ஆண்டு ஊதியம்: $218,742
  • பொதுவான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் நோயறிதலை வழங்கும் முதல்நிலை மருத்துவர்கள்.

உயர் சம்பளம் தரும் Management மற்றும் Technology துறை வேலைகள்

7. தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி
(Chief Marketing Officer – CMO)

  • NOC 2021: 10022 | ஊதியம்: $144,389

8. மென்பொருள் பொறியியல் மேலாளர்
(Software Engineering Manager)

  • NOC 2021: 20012 | ஊதியம்: $136,038

9. துணைத் தலைவர் (Vice President)

  • NOC 2021: 00015 | ஊதியம்: $127,236

10. தகவல் தொழில்நுட்ப இயக்குனர் (Director of IT)

  • NOC 2021: 20012 | ஊதியம்: $126,924

11. நிறுவன கட்டமைப்பு வடிவமைப்பாளர் (Enterprise Architect)

  • NOC 2021: 21211 | ஊதியம்: $123,125

12. நிறுவன நிதி கட்டுப்பாட்டாளர் (Corporate Controller)

  • NOC 2021: 10010 | ஊதியம்: $123,125
  • நிறுவனத்தின் நிதி மற்றும் கணக்கியல் செயல்பாடுகளைக் கவனிப்பவர்.

13. மென்பொருள் வடிவமைப்பாளர் (Software Architect)

  • NOC 2021: 21231 | ஊதியம்: $116,842

கனடாவில் மற்ற அதிக சம்பளம் தரும் தொழில்கள்

Job TitleNOC 2021சராசரி ஊதியம்
14. மருந்தாளர்
(Pharmacist)
31120$113,985
15. தரவு விஞ்ஞானி
(Data Scientist)
21211$96,641
16. தயாரிப்பு மேலாளர்
(Product Manager)
21221$95,214
17. Cybersecurity Analyst21220$94,386
18. Sales Director60010$91,842
19. கட்டுமான மேலாளர்
(Construction Manager)
70010$88,967
20. இயந்திரப் பொறியாளர் (Mechanical Engineer)21301$85,714

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

01. கனடாவின் அதிக ஊதியம் பெறும் வேலை எது?
Orthodontists ஆண்டுக்கு சுமார் $400,000 வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளனர்.

02. எந்தத் துறைகள் அதிக வருமானம் தருகின்றன?
மருத்துவத் துறை (Healthcare) முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத் துறைகளும் உள்ளன.

03. புலம்பெயர்ந்தவர்கள் இந்த வேலைகளைப் பெற முடியுமா?
நிச்சயமாக. ஆனால், பல பணிகளுக்கு கனடாவின் அங்கீகாரம் பெற்ற உரிமம் (Licensing) அல்லது கூடுதல் பயிற்சிகள் தேவைப்படலாம்.

04. சம்பளம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்குமா?
இல்லை. மாகாணம், நகரம் மற்றும் தொழிலாளர் தேவையைப் பொறுத்து ஊதியம் மாறுபடும்.

In 2026, the highest-paying jobs in Canada typically require advanced education, specialized skills, and strong technical expertise. While salaries vary by province and level of experience, this list of 20 top-earning occupations, based on Indeed Canada data, serves as a valuable guide for job seekers, immigration applicants (PR / Work Permit), and professionals considering a career change.