Home Office, இங்கிலாந்தில் (UK) உள்ள இடம்பெயர்வு விண்ணப்பங்களுக்கு, Immigration Rules களில் மாற்றங்களை அறிவித்தது. இந்த அறிவிப்பு September 10, 2024 அன்று வெளியிடப்பட்டது. இந்த மாற்றங்கள் 2024 ஆம் ஆண்டின் இறுதி மற்றும் 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள திகதியில் அமுலுக்கு வருகின்றது.

UK அரசாங்கத்தின் புதிய சட்டம்

2025 January 2 ஆம் திகதிக்கு பின்னர் மாணவர் வீசா ஊடக UK செல்ல இருக்கும் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டிய விடயங்கள்:

UK ல் படிக்கும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கை செலவுகளை கவனித்துக்கொள்ள முடியாமல் வெவ்வேறு வேலைகளை செய்வதனால், அவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஒழுங்காக தொடர முடியாதுள்ளது என்று பரந்தளவான குற்றச்சாட்டு UK அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த குற்றச்சாட்டுக்களை முடிவுக்கு கொண்டு வருவதற்க்காக UK அரசாங்கம் புதிய சட்ட நடவடிக்கைகளை கொண்டு வந்துள்ளது. அதாவது, மாணவர் வீசா ஊடக UK செல்லுபவர்கள் கல்வி கற்று முடியும் மட்டும் ஒவ்வொரு மாதமும் தங்கள் வங்கியில் நிதியிருப்பை (Bank Balance) காட்ட வேண்டும்.  

(Pounds Sterling to SLR – Sep 2024 திகதிக்கு உரிய கட்டணங்கள்)

  • London ல் கல்வியை தொடரக்கூடிய மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் £1,334 ஆக இருந்தது தற்போது £1,483 ஆக அதிகரித்துள்ளது. ( 604,605.24 SLR / 165,904.97 INR )
  • London க்கு வெளியில் கல்வியை தொடரக்கூடிய மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் £1,023 ஆக இருந்தது தற்போது £1,136 ஆக அதிகரித்துள்ளது. ( 463,121.00 SLR / 127,085.67 INR )

London ல் 9 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்குக் கற்கும் மாணவர்கள், தங்களின் விசா விண்ணப்பச் செயல்முறையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் £1,483 என்ற படி, குறைந்தபட்சமாக £13,348 வங்கி சேமிப்பில் உள்ளன என்பதை நிரூபிக்க வேண்டும்.

பிரித்தானியாவில் அன்றாட வாழ்க்கை செலவுகள் அதிகரித்தால் இந்த நிதி வரம்பும் உயரும், என்பதை UK அரசாங்கம் அறிவித்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான பணம் உங்களிடம் உள்ளதென நிரூபிக்க தேவையில்லை:

அதாவது நீங்கள் பின்வரும் நிலைகளில் இருந்தால், நிதி தேவையை நிரூபிக்க தேவையில்லை:

  • நீங்கள், உங்கள் மாணவர் விசா விண்ணப்பத்தின் திகதிக்கு 12 மாதங்களுக்கு முன் UK விசா பெற்றிருந்தால் – நீங்கள் தற்போது UK ல் இருக்க வேண்டும்.
  • நீங்கள் மாணவர் Union Sabbatical அதிகாரியாக விண்ணப்பிக்கிறீர்கள். (Student Union Sabbatical Officer)
  • நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட Foundation Programme ல் Postgraduate Doctor அல்லது பல் மருத்துவராக (Dentist) விண்ணப்பிக்கிறீர்கள்.

நீங்கள் ‘Differential Evidence Requirement‘ பட்டியலில் உள்ள ஒரு நாட்டிலிருந்து வந்தால், 

அதாவது நீங்கள் வெளிநாடுகளில் உள்ள பிரித்தானிய  தேசியமாக இருந்தால் அல்லது கீழ்க்காணும் நாடுகள் அல்லது பிரதேசங்களில் இருந்து வந்தால், உங்களிடம் தேவையான அளவுக்கு பணம் உள்ளதை நிரூபிக்க தேவையில்லை.

AustraliaCanadaFranceKazakhstanMexicoSerbia
AustriaChileGermanyKuwaitNetherlandsSingapore
BahrainChinaGreeceLatviaNew ZealandSlovakia
BarbadosCroatiaHong KongLiechtensteinNorwaySlovenia
BelgiumRepublic of CyprusHungaryLithuaniaOmanSouth Korea
Botswana
Czech RepublicIcelandLuxembourg
PeruSpain
BrazilDenmarkIndonesiaMacaoPolandSweden
BruneiThe Dominican RepublicIrelandMalaysiaPortugalSwitzerland
BulgariaEstoniaItalyMaltaQatar
Taiwan
CambodiaFinlandJapanMauritiusRomaniaThailand
TunisiaUnited Arab EmiratesUnited States of America

எனினும், நீங்கள் விண்ணப்பம் செய்ய தீர்மானம் எடுக்கும்முன், நீங்கள் இந்த ஆதாரங்களை வழங்குமாறு கேட்கலாம்.

நீங்கள் ஆதாரங்களை வழங்க வேண்டுமானால், உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு உங்களுக்கு UK Visas மற்றும் Immigration (UKVI) மூலம் தொடர்பு கொள்ளப்படும்.

To study in the UK, you must have enough money to cover your course fees and living expenses. The required amount varies based on your circumstances and the type of application you are making. You need to show sufficient funds to cover your course fees for one academic year (up to 9 months), as indicated on your Confirmation of Acceptance for Studies (CAS). If you have held a valid visa in the UK for at least 12 months, you do not need to prove you have this money for your visa application. For living expenses, you’ll need £1,334 per month (up to 9 months) if studying in London, or £1,023 per month (up to 9 months) if studying outside London. If you’re boarding at a residential independent school, you must pay boarding fees as stated in your CAS.

Relevant Source https://www.gov.uk/student-visa/money