“Visiting Visa வில் வருபவர்கள் இனிமேல் கனடாவிலிருந்து Work Permit ஆக மாற்ற விண்ணப்பிக்க முடியாது” – அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) (Immigration, Refugees and Citizenship Canada)

2024 August 28 ஆம்  திகதியிலிருந்து, குடியிருப்பாளர்கள், அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) (Immigration, Refugees and Citizenship Canada) கனடாவில் உள்ளவர்களுக்கு Work Permit க்கு விண்ணப்பிக்க அனுமதித்த தற்காலிக பொது கொள்கையை நிறுத்தி விட்டது. இந்த கொள்கை முதலில் 2020 August மாதத்தில், COVID-19 தொற்றுநோய்க்குறித்த பயணக் கட்டுப்பாடுகளால் நாட்டை விட்டு வெளியேற முடியாதவர்களுக்கு உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கொள்கையின் கீழ், கனடாவில் உள்ள Visitors நாட்டை விட்டு வெளியேறாமல் Work Permit ஆக விண்ணப்பிக்க முடிந்தது.

மேலும், கடந்த 12 மாதங்களில் Work Permit வைத்திருந்த வெளிநாட்டு குடியிருப்பாளர்கள், கனடாவில் தங்கள் நிலையை “Visitors” ஆக மாற்றியிருந்தால், புதிய Work Permit விண்ணப்பம் பற்றிய முடிவுக்காக காத்திருக்கும்போது சட்டபூர்வமான Work Permit க்காக விண்ணப்பிக்க தகுதியானவராக இருந்தனர்.

இனியும் Visitor Visa இனை Work Permit ஆக மாற்ற தேவையான மாற்று செயல்முறைகள்: 

  • Canada வர Visitor Visa வுக்கு விண்ணப்பிக்கவும்.
    • தேவைகள் மற்றும் கட்டணங்களை கவனிக்கவும்.
    • தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவும், 
  • LMIA ஆதரவு கொண்ட வேலை வாய்ப்பைப் பெறவும், (தேவையானால்) LMIA இல்லாமல் மாற்று வழிகளை ஆராயவும்
  • USA எல்லை வழி சென்று அங்கிருந்து LMIA / Non-LMIA மூலம் பெற்ற வேலைக்கான Work Permit க்கு விண்ணப்பிக்கவும்.
தற்காலிக கொள்கை முடிந்த பிறகு – Flagpoling

இந்த கொள்கை காலாவதியாகிய பிறகு, விசிட்டிங் விசாவில் இருப்பவர்கள் அமெரிக்கா எல்லை மூலம் கனடாவை விட்டு வெளியேறி, Work Permit க்காக விண்ணப்பிக்க வேண்டும், பின்னர் கனடாவில் மீண்டும் நுழைவதற்கான Flagpoling என்ற செயல்முறை மூலம் வர வேண்டும்.

தற்காலிக வேலை அனுமதி / Interim Authorization to Work: 

நீங்கள், உங்கள் வேலை அனுமதி அங்கீகாரத்தைப் பெறுவதற்கு காத்திருக்கும் போது தற்காலிக Work Permit ஐ கோரலாம்.

1.0 Visitor விசா க்கு விண்ணப்பித்தல் (TRV) 

கனடாவில் Visitor விசாவை Work Permit ஆக மாற்றுவதற்கான முதல் படி, கனடிய Visitor ஆக இருப்பதாகும். கனடாவில் Visitor விசாவிற்கு (தற்காலிக குடியிருப்பாளர் விசா/ Temporary Resident Visa – TRV) விண்ணப்பிக்கும் முன் நீங்கள் பின்வரும் தேவைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

1.1 Visitor விசா கட்டணங்கள் மற்றும் தேவைகள்

  (CAD to SLR – Sep 2024 திகதிக்கு உரிய கட்டணங்கள் )

  • Visitor விசா விண்ணப்பக் கட்டணம் $100 CAD (சுமார் 5,200 INR/ 22,200 SLR) ஆகும், அதற்கு Biometrics கட்டணம் $85 CAD (சுமார் 4,400 INR/ 18,860 SLR) ஆகும். 
  • உங்கள் Visitor விசாவை நீடிக்க $100 CAD (சுமார் 5,200 INR/ 22,200 SLR) ஒருவருக்கான  கட்டணம் தேவைப்படுகிறது.
  •  உங்கள் சுற்றுலா நிலையை மீள பெற $200 CAD (சுமார் 11,065.45 INR/ 44,377 SLR) விசா கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கிறது.  
  • நீங்கள் நாட்டை பார்வையிட்ட பிறகு, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நாட்டை விட்டு செல்வீர்கள் என்பதற்கான ஆதாரம்.  
  • கனடாவில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து தங்களை பராமரிக்க போதுமான நிதிகள் உள்ளன என்பதற்கான ஆதாரம்.
  • சரியான உடல் நிலை இருப்பது மற்றும் தேவைப்பட்டால் மருத்துவ பரிசோதனை செய்ய தயாராக இருக்க வேண்டும்.  
  • எந்த குற்றச்சாட்டும் அனுமதிக்கப்படவில்லை என போலீசார் சான்றிதழ் பெற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.  
  • விசா அதிகாரியின் கோரிக்கையின் அடிப்படையில் அனைத்து ஆதரவு ஆவணங்களையும் வழங்கக் கூடியவராக இருக்க வேண்டும்.
1.2 Canada Visitor Visa செயல்முறைக்கான நேரங்கள்

Temporary Resident Visa-TRV விண்ணப்பங்கள் பொதுவாக 30 நாட்களில் செயலாக்கப்படுகின்றன. ஆனால், விண்ணப்பத்தின் வகை, விண்ணப்பதாரரின் நாடு, மற்றும் Application Backlog போன்ற காரணிகளுக்கு அடிப்படையாக இது மாறுபடக்கூடும். அதிகாரப்பூர்வ IRCC இணையதளத்தில் புதிய செயல்முறை நேரங்களை எப்போதும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முழுமையான மற்றும் துல்லியமான ஆவணங்கள் தாமதங்களைத் தவிர்க்க உதவக்கூடும். தேவையானால், ஒரு குடியுரிமை நிபுணருடன் ஆலோசிக்கவும்.

அதிகாரப்பூர்வ Immigration, Refugees and Citizenship Canada (IRCC) இணையதளத்தில் மிக அண்மைய செயல்முறை நேரங்களை எப்போதும் சரிபார்ப்பது சிறந்தது.

1.3 Visitor Visa க்கு  விண்ணப்பிப்பதற்கான செயல்முறை 
  1. நீங்கள் Online மூலமா அல்லது நேரிலா எந்த முறை மூலம் விண்ணப்பிக்க விரும்புகிறீர்கள் என முடிவு செய்யுங்கள்.  
  2. அனைத்து தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன் ஒரு வீசா விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்.
  3. விசா செயல்முறை கட்டணத்திற்கு, Certified Check அல்லது Bank Draught மூலம் கட்டணம் செலுத்துங்கள்.  
  4. உங்கள் Passport, புகைப்படங்கள் மற்றும் பிற ஆவணங்களை நெருங்கிய கனடிய விசா விண்ணப்ப மையத்திற்கு கொண்டு செல்லுங்கள்.  
  5. உங்கள் Fingerprints மற்றும் புகைப்படத்தை (Biometrics) வழங்க வேண்டும்.
  6. கனடா விசா விண்ணப்ப மையத்திற்கு சென்று உங்கள் விசா விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.  
  7. விசா விண்ணப்ப மையத்தில் இருந்து, தனிப்பட்ட கண்காணிப்பு எண்ணுடன் (Unique Tracking Number) Receipt ஐ பெற்றுக் கொள்ளுங்கள்.
  8. உங்கள் விண்ணப்பத்தை Online ல் கண்காணிக்க இந்த எண்ணைப் பயன்படுத்துங்கள்.

2.0 வேலை வாய்ப்பு மற்றும் LMIA பெறுதல்

நீங்கள் கனடா நாடிற்குள் சென்ற பிறகு, வேலைக்கான விண்ணப்பம் செய்யவும், சாதகமான LMIA (Labour Market Impact Assessment) பெறவும் நீங்கள் குறுகிய நேரத்தை கொண்டிருப்பீர்கள். மேலும், வேலை வாய்ப்பை பெறுவது மிகவும் கடினமான செயல்முறை. எனவே, உங்கள் ஆய்வை சரியாக மேற்கொள்வது மிகவும் சிறந்தது. இந்த குறிப்பில் உங்களுக்கு உதவியாக விரிவான விளக்கம் உள்ளது.

2.1 Research for the Job
  • நீங்கள் செல்லும் Canadian city தொழிலாளர் சந்தை வாய்ப்புகளைப் புரிந்துகொள்ளுங்கள்.  
  • உங்கள் NOC (National Occupational Classification) குறியீட்டை அந்த பகுதியின் தேவைப்படும் வேலைகளுடன் ஒப்பிடுங்கள்.  
  • Indeed, LinkedIn, Glassdoor போன்ற இணையதளங்களில் வேலைக்கு விண்ணப்பியுங்கள்.  
  • வேலை வழங்குபவரின் இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கவும்.  
  • நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வேலை வாய்ப்புகளை கண்டுபிடிக்க உதவ முடியும்.
2.2 சாதகமான LMIA (Labour Market Impact Assessment) பெறுதல்

போதுமான Job Research ன் பிறகும்கூட, கனடிய வேலை வழங்குபவரிடமிருந்து வேலை வாய்ப்பை பெறமுடியாத வாய்ப்பு அதிகமாகவே இருக்கலாம். ஏனெனில், ஒரு வேலை வழங்குபவருக்கு உங்களை வேலைக்கு நியமிக்க LMIA தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும், மேலும் பல வேலை வழங்குபவர்கள் தற்காலிக Visitors க்கு Sponsor வழங்க தயாராக இல்லை.

 Visitor விசாவில் இருக்கும் போது Work Permit பெற உங்கள் வாய்ப்புகளை மேம்படுத்தும் காரணிகள்:

  • வேலை வழங்குபவர்களுக்கு, உங்களை விட மிகமிகச் சிறந்த திறமைகளை வேறு யாரிடமும் பெற்றுக்கொள்வது கடினம் என நிரூபித்தல்.
  • கனடாவில் உங்களுக்கு Support வழங்குவதற்கு ஏதுவாக நண்பர்கள், உறவினர்கள் போன்ற பல தொடர்புகளை வைத்திருக்கிறீர்களா?
  • உங்களுக்கு பொருத்தமான வேலைகளை தேடித் தரக்கூடிய ஒரு நபரை அல்லது நிறுவனத்தை நியமித்திருக்கிறீர்களா?
2.3 LMIA (Labour Market Impact Assessment) இல்லாமல்,  Visitor விசாவிலிருந்தது Open Work Permit ஐ பெற முடியுமா?
  • உங்கள் மனைவி / கணவன் / Common-Law Partner கல்வி அனுமதியுடன் DLI (Designated Learning Institution) இல் படித்தால், நீங்கள் ஒரு தற்காலிக  Visitor ஆக Open Work Permit க்கு விண்ணப்பிக்கலாம்.
  • உங்கள் மனைவி / கணவன் / Common-Law Partner வேலை Work Permit உடன் NOC 0, A, மற்றும் B இல் குறிப்பிடப்பட்ட வேலைகளில் வேலை செய்யுகிறாராகின், நீங்கள் ஒரு Visitor விசா வைத்திருப்பவராக Work Permit க்காக விண்ணப்பிக்கலாம்.
  • உங்கள் மனைவி / கணவன் / Common-Law Partner குடியுரிமைக்காக (PR) காத்திருந்தால், “Approval in Principal” நிலையை பெற்றிருந்தால், நீங்கள் ஒரு Visitor ஆக Work Permit க்கு விண்ணப்பிக்கலாம்.
  • நீங்கள் Spousal Sponsorship திட்டத்தின் கீழ் (PR) குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தால், முடிவுக்காக காத்திருக்கும்போது Work Permit க்காக விண்ணப்பிக்கலாம்.

3.0 Visitor விசாவை Work Permit மாற்றுதல்

Why Temporary Policy Expired

Immigration, Refugees and Citizenship Canada (IRCC) கனடாவின் உள்ளே இருந்து Work Permit விண்ணப்பிக்க Visitors க்கு அனுமதித்த தற்காலிக பொதுக் கொள்கையை நிறுத்தப்பட்டுள்ளது . IRCC, கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை மீள்கட்டமைப்பதற்கும், குடியிருப்புக் கட்டமைப்பின் பரிசுத்தத்தைக் காப்பாற்றுவதற்கும் இந்த கொள்கையை நிறுத்த முடிவு செய்துள்ளது. சில நபர்கள், சரியான அனுமதியின்றி கனடாவில் வேலை செய்ய, வெளிநாட்டவர்களை ஏமாற்ற இந்த கொள்கையை தவறாகப் பயன்படுத்தினார்கள்.

ஆதலால் நீங்கள் Flagpoling என்ற செயல்முறையைக் செயல்படுத்த வேண்டும்.

3.1 Flagpoling என்றால் என்ன?

இந்த தற்காலிக செயல்முறையில், Visitors அமெரிக்கா எல்லை வழியாக கனடாவை விட்டு வெளியேறி, வேலை அனுமதிக்காக விண்ணப்பித்த பின்னர் கனடாவிற்கு மீண்டும் நுழைய வேண்டும்.

Flagpole செயல்முறை மூலம் புதிய கனடிய வேலை அனுமதியைச் செயல்படுத்துவது சட்டப்படி அனுமதிக்கபடும். ஆனால், இந்த செயல்முறையின் போது உண்மையாகவும், துல்லியமான தகவல்களை வழங்குவதும் முக்கியமாகும். தவறான தகவல்களை வழங்குவது கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம். Flagpole செய்ய அல்லது உங்கள் குடியுரிமை நிலையை மாற்ற முன், ஒரு குடியுரிமை நிபுணருடன் ஆலோசிக்கவும்.

3.2 Visitor விசாவை வேலை அனுமதியாக மாற்றுதல் சம்பந்தமான கேள்வி பதில்கள்.
1. நான் கனடாவில் Visitor ஆக 6 மாதங்களுக்கும் மேலதிகமாக தங்கினால் என்ன நடக்கும்?

நீங்கள் கனடாவில் Visitor ஆக ஆறு மாதங்களுக்கும் மேலதிகமாக தங்கினால், நீங்கள் ஒரு அதிகமாக தங்கியவர் அல்லது “Out-of-Status” என்று கணிக்கப்படுவீர்கள். உங்கள் அனுமதியுள்ள காலத்தைத் தாண்டி தங்குவது பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது, இதில்:

  • வருகையாளர் நிலையை இழப்பது (Loss of Visitor Status):

உங்கள் அனுமதியுள்ள காலத்தை தாண்டினால், உங்கள் நுழைவு நிபந்தனைகளை மீறுவதாகும், மற்றும் இதனால் நீக்கப்படுதல் அல்லது பிற குடியிருப்புக் கட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  • குடியிருப்பு விளைவுகள்

சிக்கல்களைத் தவிர்க்கவும், கனடிய குடியிருப்புக் சட்டங்களுடன் இணக்கமாக இருக்கவும், கனடாவில் தங்குவதற்கான அனுமதியுள்ள காலத்தை பின்பற்றுவது மிகவும் முக்கியமாகும். உங்களுக்கான அனுமதித்த காலத்தை தாண்டினால், எதிர்காலத்தில் கனடா நாட்டுக்கு செல்லும் பயணத் திட்டங்களுக்கு இடர்களை ஏற்படுத்தக்கூடும்.

2. கனடாவில்  Visitor விசாவை Work Permit ஆக மாற்ற எவ்வளவு நாட்கள் ஆகும்?

Online விண்ணப்பங்களுக்கு நிலையான செயற்பாட்டுக் காலமாக 16-20 நாட்கள் ஆகும். ஆனால், மேலதிக செயற்பாட்டுத் தேவைகளுக்கு அல்லது சிக்கல்களுக்கு ஏற்ப சில விண்ணப்பங்கள் அதிகளவான காலம் எடுக்கும், அப்படி எடுக்கப்பட்டால் 15-20 வாரங்கள் ஆகலாம்.

For Knowledge: Labour Market Impact Assessment (LMIA)

(LMIA) என்பது கனடாவில் உள்ள ஒரு வேலைப்பதிவாளர் வெளிநாட்டு தொழிலாளரை வேலைக்கு அமர்த்துவதற்கு முன் பெற வேண்டிய ஒரு ஆவணமாகும்.

ஒரு சாதகமான LMIA, கனடாவில் உள்ள வேலையை நிரப்ப வெளிநாட்டு தொழிலாளரின் தேவை இருப்பதை காட்டும். இது, கனடிய தொழிலாளர்கள் அல்லது நிரந்தர குடியுரிமையாளர்கள் அந்த வேலையை செய்யக் கிடைக்கவில்லை என்பதையும் நிரூபிக்கும். சாதகமான LMIA-ஐ சில சமயங்களில் உறுதிப்படுத்தும் கடிதம் எனவும் அழைக்கலாம்.

வேலை வழங்குபவருக்கு LMIA தேவைப்படுமானால், அவர்கள் அதை விண்ணப்பிக்க வேண்டும். வேலை வழங்குபவர் LMIA-ஐ பெற்ற பிறகு, தொழிலாளர் Work Permit க்கான விண்ணப்பத்தைச் செய்யலாம்.

Work Permit க்கான விண்ணப்பம் செய்ய, தொழிலாளருக்கு தேவையானவை;

  • A Job Offer Letter
  • A Contract
  • A Copy of the LMIA, and
  • The LMIA Number

Summary in English: Update on Visitor Visa to Work Permit in Canada
As of August 28, 2024, Immigration, Refugees and Citizenship Canada (IRCC) has ended the temporary policy that allowed visitors to apply for work permits from within Canada. This policy, introduced in August 2020, was designed to help visitors affected by COVID-19 travel restrictions.

With the policy’s expiration, visitors must now follow new procedures to obtain a work permit. Key steps include applying for a visitor visa, securing an LMIA-supported job offer, and exploring alternative pathways if an LMIA is not feasible. The process may involve “Flagpoling,” which requires exiting Canada through the US border to apply for a work permit and then re-entering Canada. Additionally, interim authorization to work can be requested while awaiting work permit approval.