Netherland-ன் கடுமையான Immigration Rules-ஆல் தொழில்நுட்பத் துறை பாதிக்கப்படுமா?
High Skilled வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகையை குறைக்கும் நோக்கில் Dutch அரசாங்கம் புதிய, கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தத் தயாராகி உள்ளது. இந்த முடிவு Netherlands–ன் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பணியாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள Netherlands-ன் தொழில் சந்தை , Skilled Workers குறைந்தால், நிறுவனங்கள் கடுமையான சவால்களை சந்திக்க நேரிடும் என வணிகத் துறை எச்சரிக்கிறது.
High Skilled Migration திட்டத்தில் என்ன புதிய மாற்றங்கள்?
2025ஆம் ஆண்டு, குடியேற்ற எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியாக, திறன்மிக்க வெளிநாட்டு தொழிலாளர்கள் திட்டம் போன்ற மாற்றங்களை அறிவித்து உள்ளது .
இந்த மாற்றங்களின் முக்கிய நோக்கங்கள்:
- குறைந்த சம்பள குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல்
- திட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது
அதற்காக:
- குறைந்தபட்ச சம்பள வரம்பு உயர்த்தப்படுகிறது
- Work Permit வழங்கும் விதிகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன
சம்பளத் தகுதியில் முக்கிய உயர்வு
தற்போது 30 வயதுக்குக் குறைவான Skilled Migrant Workers-க்கு மாதம் 4,171 Euro-க்கு குறைந்தபட்ச வருமானம் அவசியமாக உள்ளது. இது நாட்டின் சராசரி மொத்த வருமானத்திற்கு சமமானதாகும்.
புதிய திட்டத்தின் கீழ்:
- இந்த தொகை 1.1 மடங்கு உயர்த்தப்படும்
- சமீபத்தில் பட்டம் பெற்ற EU Blue Card வைத்திருப்போரின் சம்பள நிலைக்கு இணையாக மாற்றப்படும்
இதனால் சம்பளத் தகுதியில் பல நுறு Euro வரை உயர்வு ஏற்படலாம்.
Ministry of Social Affairs இந்த மாற்றங்களை வடிவமைத்து வருவதுடன், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தெளிவான திட்டத்தை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே குறைந்துள்ள Skilled Migration
Netherlands-ன் புள்ளிவிவரத் துறை வெளியிட்ட தகவலின்படி:
- 2024ஆம் ஆண்டு 16,000 Skilled Workers வேலைக்காக Netherlands வந்துள்ளனர்
- இது முந்தைய ஆண்டை விட 26% குறைவு
இந்த தொழிலாளர்கள் பெரும்பாலும்:
- IT நிபுணர்கள்
- Software Developers
- Data மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள்
இந்த துறைகளில் உள்ளூர் நிபுணர்கள் பற்றாக்குறையாக இருப்பதால், Dutch நிறுவனங்கள் வெளிநாட்டு திறமைகளில் பெரிதும் சார்ந்திருக்கின்றன.
நிறுவனங்களின் வெளிப்படையான எச்சரிக்கை
Picnic நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Michiel Muller கூறுகையில்:
“நாங்கள் உலகம் முழுவதும் திறமைகளை தேடிக்கொண்டிருக்கிறோம்.
அறிவாற்றல் கொண்ட புலம்பெயர்ந்தோரின் வருகையை கட்டுப்படுத்துவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்காது.
ஏற்கனவே நமக்கு தொழிலாளர் பற்றாக்குறை உள்ளது.”
ASML, Just Eat Takeaway, Bol.com, Marktplaats, Booking.com போன்ற முன்னணி நிறுவனங்களும் இதே கவலையை வெளிப்படுத்தியுள்ளன.
அவர்கள் வலியுறுத்துவது:
“சர்வதேச அளவில் போட்டியிட புதுமையான தொழில்நுட்ப திறமைகள் அவசியம்.
Software மற்றும் Data நிபுணத்துவம் ஐரோப்பாவில் அரிதாக இருப்பதால், இத்தகைய பணிகளுக்கு வெளிநாட்டு திறமைகளை நியமிக்க வேண்டியுள்ளது.”
அரசியல் மட்டத்திலும் எதிர்ப்பு
இந்த திட்டங்களுக்கு எதிராக D66 மற்றும் VVD போன்ற அரசியல் கட்சிகளும் கவலை தெரிவித்துள்ளன. அவர்கள் கூறுவது, இந்த நடவடிக்கைகள் நாட்டின் வணிக வளர்ச்சியை பாதிக்கலாம் மற்றும் பொருளாதார போட்டித்திறனை குறைக்கக்கூடும் என்பதாகும். இதனால், புதிய விதிகளை நடைமுறைப்படுத்தும் முன்னர், அதன் தாக்கங்கள் குறித்து நன்கு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கட்சிகள் எச்சரிக்கின்றனர்.
“செலவு உயர்த்துவது தீர்வு அல்ல”
Intelligence Group நிறுவனத்தின் CEO Geert-Jan Waasdorp கூறுகிறார்:
“குடியேற்ற நிபுணர்களை நியமிப்பதை அதிக செலவாக்குவது பயனுள்ள தீர்வு அல்ல.
பெரிய நிறுவனங்களுக்கு பணம் பிரச்சினையாக இல்லை.”
அவரின் பரிந்துரை:
- நீண்டகால தொழில்சந்தை தேவைகளை அரசு கவனிக்க வேண்டும்
- ஒவ்வொரு வெளிநாட்டு நிபுணருக்கும் இணையாக ஒரு உள்ளூர் நபரை பயிற்சி அளிக்க வேண்டும்
- இரண்டு ஆண்டுகளில் அந்த நபர் அந்தப் பொறுப்பை ஏற்க முடியும்
முடிவுரை
குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது அரசின் நோக்கமாக இருந்தாலும், Netherlands-ன் வளர்ச்சி, புதுமை மற்றும் உலகளாவிய போட்டித்திறன் Skilled Workers-ன் வருகையை அதிகம் சார்ந்துள்ளது.
எனவே, கட்டுப்பாடுகளுடன் சேர்த்து, உள்ளூர் திறன் மேம்பாடு மற்றும் நீண்டகால மனிதவளத் திட்டமிடல் ஆகியவற்றிலும் அரசு கவனம் செலுத்துவது அவசியமாகிறது.
The Dutch government plans to tighten Immigration Rules under the Highly Skilled Migrant Scheme by raising minimum salaries and revising work permit requirements. This move has raised concerns among tech companies like ASML, Picnic, Bol.com, and Booking.com, as the Netherlands already faces labor shortages in IT, software, and data roles. Political parties D66 and VVD warn that these stricter Immigration Rules could slow business growth and reduce economic competitiveness. Experts suggest that instead of making hiring more expensive, the government should focus on long-term solutions, such as training local talent alongside foreign experts. Imposing strict Immigration Rules without strengthening local capacity could threaten the country’s innovation and global competitiveness.


