New Zealand ல் பருவகால தொழிலாளர்களுக்கான புதிய தற்காலிக விசா 

சில தொழில்களில் வேலை செய்யும் நபர்கள் குறைபாடு ஏற்படும் போது, அந்தத் தொழிலில் வேலை வாய்ப்புகள் தருபவர்களுக்கு உதவும் வகையில், New Zealand அரசாங்கம் புதிய வகையான வேலை அனுமதி (Work Visa) ஒன்றை அறிவித்துள்ளது. இதன் மூலம், அந்தத் தொழில்களில் தற்காலிகமாகத் தேவைப்படும் மேலதிக தொழிலாளர்களை வெளிநாட்டிலிருந்து அழைத்து வர முடியும்.

இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் தற்காலிக வழி. இந்த வழி, பருவகால வேலைகளின் கால அளவுக்கு ஏற்றவாறு இருக்கும்.

இந்த வேலைக்கு தகுதியாக இருக்க, நீங்கள் செய்யும் வேலை நேரடியாக வானிலை மாற்றங்களால் பாதிக்கப்பட வேண்டும். உதாரணமாக, விவசாயப் பொருட்களை அறுவடை செய்தல், Ski Instructing பயிற்சி அளித்தல் அல்லது மரங்களை நடுதல் போன்ற வேலைகள். இந்த வேலை May 31, 2025க்குள் தொடங்கி 9 மாதங்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது. தோட்டக்கலை, திராட்சை வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொடர்பான வேலைகள் வேறு விசாக்களின் கீழ் வருவதால், இதற்கு பொருந்தாது.

March 31, 2025 க்குள் வெளிநாட்டவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

New Zealand ல் ஒரு வேலை வழங்குநர் என்ற முறையில் நீங்கள் செய்ய வேண்டியது:

  • வேலை கொடுக்கும் நிறுவனம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.(Employer Accreditation)
  • தொழிலாளருக்கு ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது NZD $29.66 நியூசிலாந்து டாலர் (இது 2024 October மாதத்தில் SLR 5,511.62 இலங்கை ரூபாய்க்கு சமம்) ஊதியம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 30 மணி நேரம் வேலை கொடுக்க வேண்டும்.
  • வேலை பற்றிய விவரங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும். வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் சேர்த்து தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட வேலை வழங்குநர் விசாவை Accredited Employer Work Visa (AEWV) தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, பருவகால வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நீண்ட கால விசா கொடுப்பது பற்றி சிந்தித்து வருகிறார்கள். Accredited Employer Work Visa (AEWV) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

The New Zealand Government has introduced a new subcategory of the Specific Purpose Work Visa to offer short-term relief for employers in industries facing seasonal peaks. This temporary pathway is tailored for roles directly affected by weather changes, such as harvesting, ski instructing, or tree planting. The job must begin on or before 31 May 2025 and last no longer than 9 months. Horticulture, viticulture, and fishing crew work covered by other visas are excluded. Employers must hold accreditation, pay at least NZD $29.66 per hour for 30 hours a week, advertise the role beforehand, and provide proof to the migrant for their application, which is due by 31 March 2025.