அங்கீகாரம் பெற்ற வேலை வழங்குநர் வேலைவிசா – AEWV

AEWV – தொடர்பான முக்கிய தகவல்கள்

New Zealand ல் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு மிக முக்கியமான விசாக்களில் ஒன்று AEWV விசா. இந்த விசாவை பெறுபவர்கள், New Zealand ல் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் அதிகபட்சம் 5 வருடங்கள் வரை வேலை செய்யலாம்.

AEWV திட்டத்தின் முக்கிய நோக்கம், New Zealand ல் உள்ளவர்களுக்கு முதலில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதுதான். ஆனால், New Zealand ல் ஒரு குறிப்பிட்ட வேலைக்குத் தேவையான திறமையான தொழிலாளர்கள் போதாது என்றால், அந்த வேலைக்குத் தேவையான திறன் கொண்ட வெளிநாட்டவர்களை நிறுவனங்கள் எளிதாக நியமித்துக்கொள்ளலாம்..

இந்த திட்டத்தின் மூலம், வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்களை மோசமாக நடத்துவதைத் தடுக்க முடியும். ஏனென்றால், இந்த திட்டத்தில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முடியும். இதனால், வெளிநாட்டு தொழிலாளர்கள் நியாயமான சம்பளம் மற்றும் வேலை நிலைமைகளைப் பெறுவதை உறுதி செய்ய முடியும்.

அனைத்து விண்ணப்பங்களும் இணைய வலைதளம் Immigration Online ல் ஆகும்.

Accreditation process – அங்கீகார செயல்முறை என்றால் என்ன?

வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தில் மூன்று முக்கிய படிநிலைகள் உள்ளன:

  1. நிறுவனம் தகுதியுள்ளதா என்பதை சரிபார்ப்பது:
    முதலில், அந்த நிறுவனம் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்குத் தகுதியுடையதா என்பதை சரிபார்க்கப்படும்.
  2. வேலை வாய்ப்பு சரியாக உள்ளதா என்பதை சரிபார்ப்பது:
    அந்த நிறுவனம் வெளியிடும் வேலை வாய்ப்பு சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கப்படும்.
  3. விசா வழங்குதல்:
    மேற்கண்ட இரு படிநிலைகளும் சரியாக இருந்தால், வெளிநாட்டுத் தொழிலாளிக்கு Work Visa வழங்கப்படும்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு முன், நிறுவனங்கள் அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். இந்த அங்கீகாரம் கிடைத்த பிறகுதான், வெளிநாட்டவர்களுக்கு Work Visa வழங்க முடியும்.

ஒரு நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ஒருவரை வேலைக்கு அமர்த்த விரும்பினால், அந்த வேலைக்கு New Zealand ல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதற்காக அந்த வேலையை பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும். யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றால் மட்டுமே வெளிநாட்டிலிருந்து ஒருவரை வேலைக்கு அமர்த்துவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

ஒரு நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ஒருவரை வேலைக்கு அமர்த்துவதற்கான அனுமதி (AEWV) பெற்ற பிறகு, அந்த வெளிநாட்டவர் New Zealand ல் வேலை செய்ய விண்ணப்பிக்கலாம்.

AEWV இன் கீழ், New Zealand ல் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர் ஒருவர், வேலை விசா பெறுவதற்கு பல கட்டங்களைக் கடக்க வேண்டும். இதில் நிறுவனம் தகுதியுள்ளதா என்பதை சரிபார்ப்பது, வேலைக்கு New Zealand ல் உள்ளவர்கள் இல்லையா என்பதை சரிபார்ப்பது போன்ற பல சரிபார்ப்புக்கள் இருக்கும். மேலும், விசா பெற்ற பிறகும் சில சரிபார்ப்புக்கள் தொடர்ந்து நடைபெறும். 

 New Zealand க்கு தேவையான புலம்பெயர்ந்தவர்களை கொண்டு வருவதற்கும், குடியேற்ற அமைப்பின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கும் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்தும் வகையில், அவை நோக்கத்திற்கு ஏற்றவை என்பதை உறுதி செய்ய எங்கள் அமைப்புகளை நாங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து சரிசெய்கிறோம்.

New Zealand அரசாங்கம், New Zealand ற்கு தேவையான திறமையான தொழிலாளர்களை இங்கு அழைத்து வருவதோடு, நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாக்கின்றார்கள். இதை சரியாக செய்ய, செயல்பாடுகளை தொடர்ந்து சரிபார்த்து, தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்து வருகின்றார்கள்.

முக்கிய தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்

New Zealand ல் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான விண்ணப்பங்கள் மூன்று கட்டங்களாக திறக்கப்பட்டன. முதலில் நிறுவனங்கள், பின்னர் வேலை சரிபார்ப்பு, இறுதியாக வெளிநாட்டவர்கள் என இந்த வரிசையில் விண்ணப்பங்கள் திறக்கப்பட்டன.

2024 September 23ம் திகதி வரை, 1,27,228 பேருக்கு New Zealand ல் வேலை செய்ய விசா வழங்கப்பட்டுள்ளது. 29,540 நிறுவனங்கள் இதற்கு அனுமதி பெற்றுள்ளன. தற்போது 83,894 பேர் AEWV இந்த விசாவை வைத்து New Zealand ல் வேலை செய்து வருகிறார்கள். 

2024 April 7ஆம் திகதி, வெளிநாட்டவர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கான விசா திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த மாற்றங்களில் பின்வருவன அடங்கும்:

  • ANZSCO நிலை 4 மற்றும் 5 என்ற குறைந்த திறமை தேவைப்படும் வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள், இனி ஆங்கில மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
  • New Zealand ல் AEWV விசாவில் வேலை செய்ய விரும்புபவர்கள் குறிப்பிட்ட அளவு திறமையும், வேலை அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
  • ANZSCO நிலை 4 மற்றும் 5 என்ற New Zealand ல் குறைந்த திறமை தேவைப்படும் வேலைகளுக்கு வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் நிறுவனங்கள், முதலில் New Zealand ல் உள்ளவர்களிடம் அந்த வேலைக்கு ஏற்ற நபரை தேட முயற்சித்திருக்க வேண்டும்.
  • ANZSCO நிலை 4 மற்றும் 5 என்ற குறைந்த திறமை தேவைப்படும் வேலைகளுக்கு வரும் வெளிநாட்டவர்களின் தங்கும் காலம் 5 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
  • இனி, ஒரு நிறுவனம் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்பினால், ‘Franchisee’ என்ற வகையிலான அனுமதி பெற முடியாது. அதற்கு பதிலாக, ‘தரமான வேலைவாய்ப்பு’, ‘அதிக அளவு வேலைவாய்ப்பு’ அல்லது ‘முக்கோண வேலைவாய்ப்பு’ என்ற வகைகளில் ஒன்றின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும்.

Post-accreditation Checks

அங்கீகாரம் பெற்ற பிறகும், நிறுவனங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் ஆய்வு நடத்தப்படலாம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 16% நிறுவனங்கள் மீது ஆய்வு நடத்தப்படும். விண்ணப்பிக்கும்போது, நிறுவனங்கள் தாங்கள் கொடுத்த தகவல்கள் சரியானவையா என்று சரிபார்க்கவும், அவர்கள் நல்ல வேலை வழங்குநர்களாக இருக்கிறார்களா என்று பார்க்கவும், அங்கீகாரம் பெற்ற பிறகும் ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படும்.

நாங்கள் மேற்கொள்ளும் 16% Post-Accreditation Checks பின்வரும் வகைகளை உள்ளடக்கியவை:

  • Random Selection
  • குறிப்பிட்ட வகையிலான அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மீது மேலதிக கவனம் செலுத்தி ஆய்வு செய்யப்படும். 
  • அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மீதான ஆய்வு.
  • பொதுமக்கள் அல்லது பிற வழிகளில் எங்களுக்கு தெரிவிக்கப்பட்ட புகார்கள் தொடர்பான நிறுவனங்கள் மீதான ஆய்வு.

அங்கீகாரம் பெற்ற பிறகு செய்யப்படும் சரிபார்ப்பு (Post-Accreditation Checks) என்பது ஒரு வழக்கமான செயல்முறையாகும். இந்த சரிபார்ப்பு, (AEWV) வேலை அனுமதி பெற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீதான குறிப்பிட்ட புகார்கள் அல்லது பிரச்சினைகள் தொடர்பானது அல்ல. 

நிறுவனங்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் மற்றும் வேலை அனுமதி (AEWV) சட்டங்களுக்கு இணங்க வேண்டும். இதை மீறினால், அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

As at 23 September 2024

  • இடம்பெயர்வுத்துறை (INZ) 3,352 வேலை வழங்குநர்கள் மீது 4,643 Post-Accreditation சரிபார்ப்புக்களை மேற்கொண்டுள்ளது. மேலும் 222 சரிபார்ப்புக்கள் நடந்து வருகின்றன.
  • 2024 April 4ஆம் திகதி முதல், Ministry of Business, Innovation and Employment (MBIE) அங்கீகாரம் பெற்ற வேலை வழங்குநர்கள் மீது 4,391 புகார்களைப் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை, நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பதை மட்டும் காட்டுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
  • தற்போது 258 நிறுவனங்கள் மீது 268 விசாரணைகள் நடந்து வருகின்றன. சில நிறுவனங்கள் மீது ஒன்றுக்கு மேற்பட்ட விசாரணைகள் நடப்பதால் இந்த எண்ணிக்கை அதிகமாக காட்டப்படுகிறது. (சில Duplicates என்பதால்)
  • 496 வேலை வழங்குநர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் 138 வேலை வழங்குநர்களின் அங்கீகாரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
  • 19 நிறுவனங்களின் வேலை வழங்கும் உரிமையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், எந்த நிறுவனத்தின் உரிமையையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படவில்லை. இந்த முடிவுகள் பல காரணங்களால் எடுக்கப்படலாம். அதில் சில நிறுவனங்கள் செய்த தவறுகளின் காரணமாகவும் இருக்கலாம்.

வேலை வழங்குநர் அங்கீகாரத்தை ரத்து செய்வது மற்றும் இடைநிறுத்துவது (Revoking and suspending)

வேலை வழங்குநர்கள் சட்டத்தை மீறினால் அல்லது தரமான சேவைகளை வழங்கவில்லை என்றால், அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படலாம் அல்லது தற்காலிகமாக நிறுத்தப்படலாம். ஒரு நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தால், அதைப் பற்றி முழுமையாக விசாரிக்கப்படும். விசாரணைக்குப் பிறகு, அவர்கள் செய்த தவறு உறுதி செய்யப்பட்டால், அவர்களின் அனுமதி ரத்து செய்யப்படும். பெரும்பாலான நிறுவனங்கள் சட்டத்தைப் பின்பற்றுகின்றன. ஆனால், சில நிறுவனங்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பு இருக்கும்.

The Accredited Employer Work Visa (AEWV) in New Zealand allows migrants to work for up to five years with accredited employers facing genuine skill shortages. The application process involves three steps: employer accreditation, job checks, and visa applications, with rigorous post-accreditation checks to ensure compliance. Recent changes have introduced an English language requirement for low-skilled roles and reduced the maximum stay for those positions from five years to three. The scheme has approved over 127,000 applications since its launch, but concerns about compliance have led to investigations and revocations of accreditation for some employers. The AEWV also allows holders to change employers or jobs, providing flexibility.

Sources
Official Website of Immigration New Zealand (INZ):
https://www.immigration.govt.nz/