நியூசிலாந்தில் தற்காலிக வேலைகள்

குறுகிய கால வேலை தேடுகிறீர்களா? நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள்!

நியூசிலாந்தில் பருவகால வேலைகளை கண்டுபிடிப்பது ஒப்பீட்டளவில் இலகுவானது, குறிப்பாக நீங்கள் நியூசிலாந்திற்கு செல்ல தயாராக இருந்தால். உங்கள் அடுத்த தற்காலிக வேலையைப் பெறுவதற்குத் தேவையான அனைத்தையும் இங்கே காணலாம். 

நியூசிலாந்தில் பருவகால வேலைகளை கண்டுபிடிப்பது எப்படி?

நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், Immigration NZ இல் வேலை வகை மற்றும் மாதத்தின் அடிப்படையில் கிடைக்கும் வேலைகளை பட்டியலிடும் நாட்காட்டி உள்ளது. பருவகால வேலை நாட்காட்டியைப் பார்க்கவும்.

சம்பளம் 

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நியூசிலாந்தில் பருவகால வேலை செய்பவர்கள் இப்போதைய நிலவரப்படி (30/10/24), மணித்தியாலத்திற்க்கு குறைந்தபட்ச ஊதியம் $23.15 (SLR 4,039.69) பெற வேண்டும். பெரும்பாலான பருவகால வேலைகளுக்கு வாரத்திற்கு 30-40 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அதாவது, வரி கழிப்பதற்கு முன், நீங்கள் மாதத்திற்கு $2800 (SLR 488,601.32) அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கலாம்.

மறுபுறம், ‘அங்கீகரிக்கப்பட்ட பருவகால தொழிலாளர்கள்’ (‘Recognised Seasonal Workers’) திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது $25.47 (SLR 4,444.53) சம்பாதிக்க முடியும்.

என்ன வகையான பருவகால வேலைகள் கிடைக்கும்?

பழம் மற்றும் காய்கறி பறித்தல், Processing அதாவது பதனிடல், விளைச்சல், தயாரிப்பு போன்ற செயலாக்கம் மற்றும் Packing – ஆண்டு முழுவதும்

பழம் மற்றும் காய்கறி பறித்தல் மற்றும்  Processing வேலைகள் நியூசிலாந்தில் மிகவும் பரவலாக கிடைக்கும் பருவகால வேலைகளாகும். பொதுவாக நீங்கள் பழங்கள் அல்லது காய்கறிகளை அறுவடை செய்து, பின்னர் அவற்றைப் Pack செய்து வரிசைப்படுத்துவீர்கள்.

நீங்கள் மரங்களை கத்தரிக்கலாம், பயிர்களை பராமரிக்கலாம், காய்கறிகளை நடலாம் அல்லது பழங்களை மெல்லியதாக மாற்றலாம். Packhouse மற்றும் அலுவலக பணிகளும் கிடைக்கின்றன. இந்தத் தொழிலில் பணிபுரிய, நீங்கள் உடல் தகுதியுடையவராகவும், வெளியில் வேலை செய்ய தயாராகவும், மாறி மாறி வரும் காலநிலை மாற்றங்களில் வேலை செய்ய தயாராகவும் இருக்க வேண்டும்.

01. திராட்சைத் தோட்டங்கள், Winery தயாரிப்பாளர்கள் மற்றும் திராட்சை பறிப்பு – ஆண்டு முழுவதும்

  • Hawke’s Bay
  • Wairarapa
  • Nelson
  • Marlborough
  • Canterbury
  • Otago

திராட்சை அறுவடை காலம் February யில் வடக்குப் பகுதிகளில் தொடங்கி May மாதம் வரை Otago மற்றும் Canterbury போன்ற தெற்குப் பகுதிகளில் தொடர்கிறது, ஆனால் ஆண்டின் மீதி நாட்களில் வேறு வேலைகள் கிடைக்கின்றன. Winery தொழிற்சாலை வேலைகள் முக்கியமாக கிராமப்புற பகுதிகளில், பெரும்பாலும் நியூசிலாந்தின் மிகப்பெரிய Wine தயாரிப்பு பகுதியான Marlborough வில் உள்ளன.

Wine ல் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், இந்த பருவகால வேலைகள் Wine தொழிற்சாலை அல்லது திராட்சைத் தோட்டத்தில் நிரந்தர வேலைக்கு மாற ஒரு சிறந்த வழியாக இருக்கும். இந்த வேலைகளின் போது வெயிலில் நீண்ட நாட்களுக்கு தொடர்ச்சியான உடல் உழைப்பை வழங்க வேண்டி இருக்கும், எனவே நீங்கள் ஒப்பீட்டளவில் பொருத்தமாக இருக்க வேண்டும்.

02. வனவியல் (Forestry) – முக்கியமாக குளிர்காலத்தில்

  • Northland
  • Hawke’s Bay
  • Otago
  • Southland
  • Rural areas

மரம் நடுவதுதான் வனவியலில் முக்கியமான பருவகால வேலை ஆகும். ஆனால் வேறு வேலை வாய்ப்புகளும் உள்ளன. இந்த வேலைகளுக்கு தகுதிகள் எதுவும் தேவையில்லை, ஆனால் இது கடினமான உடல் உழைப்பு. எனவே நீங்கள் உடல் தகுதியுள்ளவராகவும், வலிமையானவராகவும், எந்த சூழ்நிலையிலும் வேலை செய்ய தயாராகவும் இருக்க வேண்டும்.

உங்களுக்கான ஊதியம் நட்ட மரத்திற்கு என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதாவது நீங்கள் எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சம்பாதிக்கலாம்.

வேலை தேடுவதற்கு, நீங்கள் வனவியல் NZ வெளியிடும் தொழில்துறையின் பட்டியலில் உள்ள நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம்.

03. வேளாண்மை மற்றும் பால்பண்ணை – ஆண்டு முழுவதும்

கிராமப்புற பகுதிகள்

குறிப்பாக ஆடு குட்டி ஈனுதல் மற்றும் ஆடு வெட்டுதல் போன்ற காலத்தின் போது (August முதல் May வரை) வேளாண் துறை எப்போதும் பணியமர்த்துகிறது. இந்தப் பணிகளில் வேலை செய்ய அனுபவம் தேவையில்லை, ஆனால் நீங்கள் பொதுவாக உடல் தகுதியுடையவராகவும், வலிமையானவராகவும், எல்லா நிலைகளிலும் விலங்குகளுடன் பணிபுரிய தயாராகவும் இருக்க வேண்டும்.

பனிச்சறுக்கு மைதானங்கள் மற்றும் பனிச்சறுக்கு நகர வேலைகள் – May முதல் October வரை

  • மைய உயர்நிலம் வட தீவு (Central plateau North Island)
  • தென் தீவு முழுவதும் (Throughout the South Island)

நியூசிலாந்தில் மிகப்பெரிய பனிச்சறுக்கு பகுதிகள் Wanaka, Queenstown மற்றும் Mount Hutt ஆகிய இடங்களில் உள்ளன. பனிச்சறுக்கு பயிற்சி, சாய்வு பராமரிப்பு, போக்குவரத்து, பாதுகாப்பு, விருந்தோம்பல், சில்லறை விற்பனை போன்ற பல்வேறு பணிகள் உள்ளன. சில பணிகளுக்கு தகுதிகள் மற்றும் அனுபவம் தேவைப்படும், ஆனால் Lift Operator மற்றும் உணவகம் போன்ற பல பணிகளுக்கு தகுதிகள் தேவையில்லை.

நீங்கள் கொஞ்சம் குளிரைத் தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். Snowboarding அல்லது பனிச்சறுக்கு செய்ய ஆர்வமாக இருப்பதும் உங்கள் நேரத்தை அனுபவிக்க(Enjoy) உதவும். இந்தப் பணிகளுக்கு பருவ காலத்திற்க்கு முன்பே விண்ணப்பிப்பது நல்ல யோசனையாகும்.

உங்கள் தேடலைத் தொடங்க தயாரா?

பருவகால வேலை தேடத் தயாராக இருந்தால், முதலில் தேவையான விஷயங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஆஸ்திரேலியாவைத் தவிர வேறு நாட்டிலிருந்து வருகிறீர்கள் என்றால், உங்களுக்கு வேலை விசா தேவைப்படலாம். அதை முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

நியூசிலாந்தில், குறிப்பாக Auckland மற்றும் Queenstown போன்ற நகரங்களில் வீடு வாடகைக்கு கிடைப்பது கொஞ்சம் கடினம். அதனால், நீங்கள் அங்கு செல்ல முடிவு செய்தால், முதலில் தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து கொள்வது நல்லது. உங்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனம் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவலாம்.