Australian PR விண்ணப்பிக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்

Australian PR பெறுவதற்கான காரணங்கள்:

  • உலகின் 8வது மகிழ்ச்சியான நாடு
  • 2025-ல் Australia-வில் 185,000 PRகள் புதிதாக வழங்க உள்ளது.
  • திறமையான தொழில்முனைவோருக்கு 800,000 வேலைவாய்ப்புகள்
  • Australian PR உடன் 100 மடங்கு ROI
  • உலகளாவிய சுகாதார சேவை
  • உங்கள் குழந்தைகளுக்கு இலவச கல்வி
  • ஓய்வூதிய நலன்கள்
  • Australian குடியுரிமைக்கு எளிதான வழி(Australian Citizenship)

Australian நிரந்தர வசிப்பிட அந்தஸ்து என்பது Permanent Resident Visa வைப் பெற்ற நபருக்கு வழங்கப்படுகிறது. ஆனால் Australian PR உடையவர்கள் Australian Citizenship (ஆஸ்திரேலிய குடியுரிமை) பெற்றவர்கள் அல்ல. Australia வில் Permanent Residents 5 ஆண்டுகள் நிரந்தரமாக வசிக்கலாம், படிக்கலாம் மற்றும் வேலை செய்யலாம். 4 ஆண்டுகள் PR அந்தஸ்தில் Australia வில் வசித்த பிறகு, தகுதியின் அடிப்படையில் குடியுரிமைக்கு(Citizenship) விண்ணப்பிக்கலாம்.

Australian PR விசா பெறுவதற்கான படிகள்:

பொதுவாக, Australian PR செயல்முறை பின்வரும் மூன்று வெவ்வேறு நிலைகளைக் கொண்டுள்ளது.

Australia திறன் மதிப்பீடு(Skill Assessment):
Australia வில் நியமிக்கப்பட்ட ஒரு Skill Assessment அமைப்பு மூலம் உங்கள் திறமையை மதிப்பிட வேண்டும்.விரைவான பதிலுக்கு, தேவையான ஆவணங்களை விரைவில் சமர்ப்பிக்கவும்.

Australia PR Visa அங்கீகாரம்:
தேவையான ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, Australia குடிவரவுத் துறை (DHA) உங்கள் விண்ணப்பத்தை விரிவாக ஆராய்ந்து, நீங்கள் அவர்களின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்திருந்தால், அவர்கள் உங்களுக்கு விசா வழங்குவார்கள்.

Australia க்கு பயணம்:
Visa அங்கீகாரம் கிடைத்ததும், Visa கடிதத்தில் குறிப்பிடப்பட்ட திகதியில் Australia க்கு செல்ல வேண்டும்.

Australia வில் Permanent Resident கான Visa options

Australia வில் Permanent Resident கான பிரபலமான Visa  விருப்பங்கள் இங்கே உள்ளன:

  • Subclass 189 visa
  • Subclass 190
  • Business Innovation Stream
  • Investor Stream
  • Subclass 891 Visa
  • Graduate Work Visa
  • Professional Year Program (PYP)
  • GTI (Global Talent Independent Program)
  • Australia Parent Visa 

Australia PR க்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்

  • 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் 
  • Australia புள்ளி அட்டவணையில்(Australian Points Grid) 65 புள்ளிகள் 
  • செல்லுபடியாகும் திறன் மதிப்பீடு(Skills Assessment)
  • IELTS அல்லது PTE மதிப்பெண் 
  • சுகாதார காப்பீடு(Health Insurance)
  • பொலிஸ் சான்றிதழ்(Police Verification Certificate)

Australian PR க்கு விண்ணப்பிப்பதற்க்கான தேவைகள்

Australian PR Visa ற்கு தகுதி பெற குறைந்தது 65 புள்ளிகள் தேவை ஆகும். நீங்கள் அதிக புள்ளிகள் பெற்றால், உங்களுக்கு விரைவில் விசா கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதாவது 80 முதல் 85 புள்ளிகள் பெற்றால், உங்களுக்கு மிக விரைவாக விசா கிடைக்கும். 

வெவ்வேறு தகுதித் தேவைகளுடன் Australian PR Visa ற்கு விண்ணப்பிக்க பல்வேறு வகைகள் உள்ளன. ஆனால் பொதுவான தகுதி காரணிகள் பின்வருமாறு:

Category Maximum Points
Age (25-32 years)30 points
English Proficiency (8 bands)20 points
Work Experience outside Australia (8-10 years)15 points
Work Experience in Australia (8-10 years)20 points
Education (outside Australia) – Doctorate degree20 points
Niche Skills such as Doctorate or Master’s Degree by Research in Australia10 points
Study in a Regional Area5 points
Accredited in Community Language5 points
Professional year in a Skilled Program in Australia5 points
State Sponsorship (190 visa)5 points
Skilled Spouse or De facto Partner (Age, Skills & English Language Requirements to be met)10 points
Spouse or De facto Partner with ‘Competent English’ (No need to meet Skills Requirement or Age Factor)5 points
Applicants without a Spouse or De facto Partner or where a Spouse is an Australian Citizen or PR Holder10 points
Relative or Regional Sponsorship (491 visa)15 points

Age :

25 முதல் 32 வயதுக்குள் இருந்தால் அதிகபட்சமாக 30 புள்ளிகள் கிடைக்கும். PR விசாவிற்கு விண்ணப்பிக்க உங்கள் வயது 45 வயதுக்கு கீழே இருக்க வேண்டும்.

English Proficiency:

IELTS தேர்வில் 8 Bands மதிப்பெண் பெற்றால் அதிகபட்சமாக 20 புள்ளிகள் கிடைக்கும். இருப்பினும், Australian Immigration Authorities (Australian குடிவரவு அதிகாரிகள்) IELTS, PTE போன்ற எந்த English Proficiency Tests யும் அனுமதிக்கின்றனர். இந்த தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேவையான மதிப்பெண்ணை பெற நீங்கள் முயற்சி செய்யலாம்.

Work Experience:

கடந்த 10 ஆண்டுகளில் 8 ஆண்டுகளுக்கும் மேலான வெளிநாட்டு திறமையான வேலை(Skilled Employment) அனுபவம் இருந்தால் உங்களுக்கு 15 புள்ளிகள் கிடைக்கும்;
குறைவான ஆண்டுகள் வேலை அனுபவம் இருந்தால் குறைவான புள்ளிகள் தான் கிடைக்கும்.
விண்ணப்பத்தின் திகதியிலிருந்து 8 முதல் 10 ஆண்டுகள் வரையிலான Australia வில் திறமையான வேலை (Skilled Employment) அனுபவம் இருந்தால் உங்களுக்கு அதிகபட்சமாக 20 புள்ளிகள் கிடைக்கும்.

Skilled Employment in AustraliaPoints
Less than 1 year0
1-2 years5
3-4 years10
5-7 years15
8-10 years20

Education:

கல்வித் தகுதியின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. Australia பல்கலைக்கழகத்திலிருந்து Doctorate Degree அல்லது Australia அரசாங்கம் அங்கீகரித்த வெளிநாட்டு பல்கலைக்கழகத்திலிருந்து Doctorate Degree பெற்றால் அதிகபட்ச புள்ளிகள் வழங்கப்படும்.

QualificationsPoints
A Doctorate Degree from an Australian University or Institute outside Australia.20
A Bachelor’s (or Masters) Degree from an Australian University or Institute outside Australia.15
Diploma or Trade Qualification Completed in Australia10
Any Qualification or Award Recognized by the Relevant Assessing Authority for your Nominated Skilled Occupation.10
Master by Research or a Doctorate Degree from an Australian Educational Institution in the STEM Fields10

Language Proficiency:

ஆங்கில மொழியில் போதுமான திறமை இருப்பதற்கான ஆதாரத்தை நீங்கள் வழங்க வேண்டும்.

Skilled Occupation Lists (SOL):

Australia க்கு குடிபெயர விரும்புபவர்கள், Australia அரசாங்கம் வெளியிடும் Skilled Occupation Lists ல் (SOL) இருக்கும் தொழில்களில் ஒன்றில் திறமை பெற்றவராக இருக்க வேண்டும். இந்த பட்டியல் அவ்வப்போது மாறும்.

இந்த பட்டியலில் மூன்று வகை தொழில்கள் உள்ளன:

  1. Short-term Skilled Occupation List (STSOL): இது பொதுவாக தேவைப்படும் தொழில்கள்.
  2. Regional Occupations List (ROL): இந்த பட்டியலில் உள்ள தொழில்கள் குறிப்பிட்ட Australia மாகாணங்களில் அதிகம் தேவைப்படும் தொழில்கள்.
  3. Medium- and Long-term Strategic Skills List (MLTSSL): இந்த பட்டியலில் உள்ள தொழில்கள் Australia வின் நீண்ட காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொழில்கள்.

Spouse Application:

உங்கள் வாழ்க்கைத் துணையும் PR விசாவிற்கு விண்ணப்பித்தால், உங்களுக்கு மேலதிக 10 புள்ளிகள் கிடைக்கும். இந்த மேலதிக 10 புள்ளிகளைப் பெற, உங்கள் வாழ்க்கைத் துணை பின்வரும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

  • 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் 
  • ஆங்கிலத்தில் அடிப்படை திறமை மட்ட மதிப்பெண்கள் இருக்க வேண்டும் (Basic Competent Level Scores in English)
  • உங்கள் கணவர்/மனைவி விசாவிற்கு விண்ணப்பித்தால், அவர்கள் செய்யும் வேலையின் குறியீடு, நீங்கள் விண்ணப்பித்த வேலையின் குறியீடு இருக்கும் அதே வகையான வேலைகளின் பட்டியலில் இருக்க வேண்டும். அதாவது, இருவரும் ஒரே மாதிரியான தொழில் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

பிற தகுதிகள்:

நீங்கள் பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்தால் புள்ளிகள் பெறலாம்.

Study in a Regional Area 5 points
Accredited in Community Language 5 points 
Professional year in a Skilled Program in Australia 5 points 
State Sponsorship (190 visas) 5 points 
Relative or Regional Sponsorship (491 visa)15 Points

Australian PR க்கு விண்ணப்பிப்பது கவனமான திட்டமிடல், தகுதித் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் புள்ளிகளை அதிகரிப்பதை உள்ளடக்கிய ஒரு கட்டமைக்கப்பட்ட செயல்முறையாகும். உயர் வாழ்க்கைத் தரம், இலவச கல்வி, உலகளாவிய சுகாதார பாதுகாப்பு இருப்பதோடு அங்கே நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு Australian Citizenship பெறுவது இலகுவாக இருக்கும் (Australian PR Skilled Workers க்கு சிறந்த வாய்ப்பாகும்).
ஆனால் Australia வில் பல மாற்றங்கள் நடக்கும். அதனால், விசா விண்ணப்பிக்கும் முன், சமீபத்தில் மாற்றப்பட்ட தகவல்களை தொடர்ந்து அறிந்து இருக்க வேண்டும்.

Applying for Australian PR is a structured process that requires careful planning, meeting eligibility criteria, and maximizing points. With benefits like high living standards, free education, global healthcare, and a direct pathway to citizenship, Australian PR is an excellent opportunity for skilled professionals. Prospective applicants must stay updated on the latest occupation lists and visa options to enhance their chances of success.