January 2025 முதல் Australia வில் படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கான முக்கிய மாற்றங்கள்

2025 January 1 முதல் Australia வில் படிக்கும் மாணவர்களுக்கான விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள் நடைபெற உள்ளன.  இந்த மாற்றங்கள் என்ன, ஏன் முக்கியம் மற்றும் இந்த மாற்றங்களை எவ்வாறு எளிதாக கையாளுவது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

1. மாணவர் எண்ணிக்கை வரம்பு

Australia வில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளது. அதாவது, ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு குறிப்பிட்ட எண் நிர்ணயிக்கப்படும். இது அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வி அனுபவத்தை வழங்க உதவும்.

இந்த சட்டத்தால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

  • அனைவருக்கும் சிறந்த கல்வி: ஒவ்வொரு மாணவரும் போதுமான கவனம் பெறுவதை உறுதி செய்ய இது உதவும்.
  • கல்வி தரம் மேம்பாடு: மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக கவனித்துக்கொள்ள முடியும். இதனால், கல்வி தரம் மேம்படும்.
  • சிறந்த கற்றல் சூழல்: குறைவான மாணவர்கள் இருப்பதால், வகுப்பறைகள் நெரிசல் குறைவாக இருக்கும். இதனால், மாணவர்கள் சிறந்த கற்றல் சூழலில் படிக்க முடியும்.

இந்த சட்டம் ஏன் கொண்டு வரப்படுகிறது?

வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இடம் (Accommodation) போதாமல் போகிறது. இதனால், ஒவ்வொரு மாணவரும் கல்வியில் போதுமான கவனம் பெறாமல் போகலாம். போதுமான தங்குமிட வசதிகள் உள்ள கல்லூரிகள் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்படும். இந்த பிரச்சனையைத் தீர்க்கவே இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. 

2. மாணவர்களைப் பாதுகாத்தல்

  • ஏமாற்று வேலைகளை ஒழித்தல்: தரமற்ற கல்வி நிறுவனங்களை மூடி, மோசமான படிப்புகளை தடுப்பது.
  • புதிய மாணவர் சேர்க்கையை நிறுத்தல்: விசாரணைக்கு உட்பட்ட கல்லூரிகள் விதிமுறைகளுக்கு இணங்கும் வரை புதிய சர்வதேச மாணவர்களை சேர்க்க முடியாது.
  • கல்வி தரத்தை நிரூபித்தல்: புதிய நிறுவனங்கள் அல்லது படிப்புகள் உள்ளூர் மாணவர்களுக்கு 12 மாத காலத்திற்கு தரமான கல்வி வழங்கியதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு ஆதரவு: ஒரு பெண் அல்லது ஆண் தனது கணவர்/மனைவியிடம் இருந்து வன்முறைக்கு ஆளாகி, அதிலிருந்து தப்பி வந்தால், அவர்களுக்கு அரசாங்கம் பண உதவி மற்றும் சட்ட உதவி செய்யும். இதற்காக, அரசாங்கம் 5 வருடங்களில் $1 billion வரை செலவு செய்ய உள்ளது.
  • தேசிய மாணவர் அலுவலர்(National Student Ombudsman): February 1, 2025 முதல், மாணவர்கள் தங்கள் கல்லூரிகள் குறித்த புகார்களை தெரிவிக்க ஒரு அதிகாரி இருப்பார்.

3. குடிபெயர்வு சீர்திருத்தத்திற்கான நிதி (Funding for Migration Reform)

  • $18.3 Million ஒதுக்கீடு: குடிபெயர்வு தொடர்பான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்படும்.
  • தொழிலாளர் உரிமைகள் கல்வி: வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து கல்வி அளிப்பதற்காக $15 million ஒதுக்கீடு.
  • வேலைவாய்ப்பு தரவு:  வேலைவாய்ப்பு தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு, தொழிலாளர் சுரண்டலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் திட்டத்திற்காக $1.9 million ஒதுக்கீடு.

4. விசா மாற்றங்கள்

  • National Innovation Visa : சில குறிப்பிட்ட துறைகளில் பணிபுரியும் திறமையான தொழிலாளர்களுக்கான புதிய விசா அறிமுகப்படுத்தப்படும்.
  • Temporary Skill Shortage : 2024 November 23 முதல், விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பதிலாக ஒரு வருட வேலை அனுபவம் மட்டுமே தேவை.
  • Visa கட்டணம்: Visa கட்டணத்தில் தற்போது எந்த மாற்றமும் இல்லை, ஆனால் விரைவில் மாறலாம்.

இந்த மாற்றங்கள் உங்களுக்கு உங்களுக்கு எப்படி உதவும்?

  • தரமான கல்வி: இந்த மாற்றங்கள் உங்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும்.
  • பாதுகாப்பு: நீங்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் படிக்க முடியும்.
  • உரிமைகள்: உங்களுக்கு கிடைக்கும் உரிமைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு:

  • உங்கள் கல்லூரியின் Websites ஐ பார்க்கவும்.
  • Australia அரசாங்கத்தின் இணையதளத்தை பார்க்கவும்.
  • ஒரு கல்வி ஆலோசகரை அணுகவும்.

முக்கிய குறிப்பு: இந்த தகவல்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் உங்களுக்கு எப்படி பாதிக்கும் என்பதை அறிய, ஒரு நிபுணரை அணுகவும்.

Australia is updating its international education and migration policies to improve education quality, prevent fraud, and protect students. Key changes include student caps effective January 1, 2025, stricter quality standards for new institutions, and a new National Student Ombudsman launching February 1, 2025. Additional measures involve $18.3 million for migration reform, worker rights education, and data matching to prevent exploitation. Visa updates include the National Innovation Visa and relaxed work experience requirements for the Temporary Skill Shortage visa from November 23, 2024.