Switzerland மக்கள் எதைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள்?
Switzerland ல் 2025 ஆம் ஆண்டில் மக்கள் எதைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள் என்பதை UBS வங்கியின் சமீப ஆய்வு (Worry Barometer) வெளிப்படுத்தியுள்ளது. பணவீக்கம் பற்றிய கவலைகள் குறைந்து, குடியேற்றம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு குறித்த பதற்றம் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதாரக் காப்பீடு(Health Insurance) செலவு மிகப்பெரிய கவலை
UBS என்ற வங்கி, Switzerland ல் வசிக்கும் மக்களைப் பற்றி ஒரு ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 2,250 பேரிடம் அவர்களின் ஐந்து முக்கிய பிரச்சினைகள் குறித்து மக்கள் என்னென்ன விஷயங்களால் அதிகம் கவலைப்படுகிறார்கள் என்று கேட்டறிந்தார்கள். இது மிகவும் முக்கியமானது ஏனென்றால், Switzerland ல் மக்களுக்கு தங்கள் கருத்தைச் சொல்ல பல வாய்ப்புகள் உண்டு. எனவே, மக்களின் கவலைகளை அறிந்து கொள்வதன் மூலம், அரசாங்கம் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.
2024 December மாதத்தில் வெளியான ஒரு புதிய ஆய்வின்படி, Switzerland ல் மக்கள் மிகவும் கவலைப்படும் விஷயங்களில் Health Insurance செலவு முதலிடத்தில் உள்ளது. சுமார் 48% பேர் Insurance Premium தொடர்பான பிரச்சினைகள் தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளனர்.
மேலும், கடந்த மூன்று வருடங்களாக (2023, 2024 மற்றும் 2025), Insurance Premium செலவு 8% அதிகரித்துள்ளதால், மக்கள் இது குறித்து அதிகமாக கவலைப்படுகிறார்கள். Switzerland ல் சுகாதார சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், வருடத்தில் 1% மட்டுமே விலை உயர்த்துவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இந்த வாக்குறுதியை காப்பாற்ற முடியுமா என்பது இன்னும் தெரியவில்லை.
இரண்டாவது பெரிய கவலை காலநிலை மாற்றம்
Health Insurance செலவுகளுக்குப் பிறகு காலநிலை மாற்றம் குடியிருப்பாளர்களிடையே இரண்டாவது பெரிய கவலையாக இருந்தது, 32% பேர் அதை தங்கள் முதல் 5 பிரச்சினைகளில் ஒன்றாக பெயரிட்டனர். Alpine நாட்டில் மூன்று ஆண்டுகளாக வெப்பநிலை அதிகரித்து வரும் போதிலும், உலகளாவிய வெப்பமயமாதல் குறித்த கவலை 2023 ம் ஆண்டு முதல் 6% புள்ளிகள் குறைந்துள்ளது.
Switzerland ல் மிகவும் பொதுவாகக் குறிப்பிடப்படும் 20 கவலைகளில், மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கைச் செலவுகள் மற்றும் தனிப்பட்ட நிதிகளுடன் (Personal Finances) தொடர்புடையது – என்றாலும், 2023 ஆம் ஆண்டு முதல் பணவீக்கம் குறித்த கவலைகள் குறைந்துள்ளது. ஓய்வூதியம், வீட்டு வாடகை, மின்சார செலவு போன்ற விஷயங்களும் முதல் 10 இடங்களைப் பிடித்தன.
குடியேற்றம் மற்றும் குற்றம் தொடர்பான கவலை அதிகரித்து வருகிறது
குடியேற்றம், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் குற்றம் தொடர்பான கவலைகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. 2023 ம் ஆண்டில் குற்ற விகிதம் 10 ஆண்டுகளில் முதல் முறையாக அதிகரித்தது. மேலும், Switzerland ல் மக்கள் தொகை அதிகரித்து வருவது, வீட்டு வாடகை உயர்வு, ஓய்வூதியம் தொடர்பான விவாதங்கள் போன்ற காரணங்களால் மக்கள் கவலைப்படுகிறார்கள்.
UBS வங்கி கூறுவது என்னவென்றால், மக்கள் என்னென்ன விஷயங்களால் கவலைப்படுகிறார்கள் என்பது நாட்டில் நடக்கும் சம்பவங்களுடன் தொடர்புடையது. 2023 ஆம் ஆண்டில் குற்ற விகிதம் அதிகரித்தது. 2024 ஆம் ஆண்டில் மக்கள் தொகை அதிகரித்தது, வீட்டு வாடகை உயர்ந்தது, ஓய்வூதியம் தொடர்பான விவாதங்கள் நடந்தன. இதன் காரணமாக, இந்த விஷயங்கள் தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளன.
Switzerland ல் வசிப்பவர்களின் முக்கிய கவலைகள்:
2024 December மாதம் வரை Switzerland ல் மக்கள் அதிகமாக கவலைப்படும் விஷயங்கள் இவை:
- Health Issues, Health Insurance, Insurance Premiums (48%)
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் (32%)
- ஓய்வூதியம் (29%)
- அகதிகள், தஞ்சம் புகுந்தவர்கள் (Refugees, Asylum Issues) (28%)
- வெளிநாட்டினர், மக்களின் இயக்கம், குடியேற்றம் (26%)
- வீட்டு வாடகை உயர்வு (25%)
- மின்சாரம் (20%)
- Europe உடனான உறவு (18%)
- பணவீக்கம் (16%)
- தனிப்பட்ட பாதுகாப்பு, குற்றம், வன்முறை (15%)
UBS நடத்திய ஒரு ஆய்வில், 2025 ஆம் ஆண்டில் Switzerland ல் மக்கள் மிகவும் கவலைப்படும் விஷயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் Health Insurance செலவு அதிகரிப்பு (48%), காலநிலை மாற்றம் (32%), ஓய்வூதியம் (29%), அகதிகள் பிரச்சினைகள் (28%) மற்றும் வாடகை உயர்வு (25%) ஆகியவை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு காரணமாக, குற்றம், பாதுகாப்பு மற்றும் குடியேற்றம் தொடர்பான கவலைகளும் அதிகரித்து வருகின்றன.
A UBS survey reveals Switzerland’s top concerns for 2025: rising health insurance costs (48%), climate change (32%), pensions (29%), refugee issues (28%), and rent increases (25%). Crime, safety, and immigration worries are also growing due to population growth and higher living expenses.



