UK-ல் குறுகிய கால வேலை செய்வதற்கு என்னென்ன விசா விருப்பங்கள் உள்ளன?

Temporary Workers-க்கான விசா திட்டத்தில் பின்வரும் Sub-Visa பிரிவுகள் உள்ளன:

  • Creative – படைப்பாற்றல் தொழிலாளி;
  • Charity Worker – தொண்டுப் பணியாளர்;
  • Government Authorised Exchange – அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பரிமாற்றத் திட்டம்;
  • International Agreement Workers – சர்வதேச ஒப்பந்த தொழிலாளர்கள்; மற்றும்
  • Seasonal Workers – பருவகால தொழிலாளர்கள்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து Temporary Worker Visas-க்கும் விண்ணப்பதாரர் சரியான UK Sponsor Licence வைத்திருக்கும் ஒரு வேலை வழங்குனரால் Sponsor செய்யப்பட வேண்டும்.

Temporary Worker Visa வழிமுறை நிரந்தரக் குடியுரிமைக்கு(Indefinite Leave to Remain-ILR) வழிவகுக்காது. இருப்பினும், Temporary Workers இந்த Visa பிரிவில் செலவழித்த காலத்தை, 10 வருட நீண்ட கால வதிவிட விதிகளின் கீழ் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்.

Skilled Worker Visa

Skilled Worker Visa, ஐக்கிய இராச்சியத்தில் (UK) வசிக்கும் தொழிலாளர்களால் நிரப்ப முடியாத குறிப்பிட்ட திறன்கள் தேவைப்படும் வேலைகளில் வேலை செய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் Swizz நாட்டினர் உட்பட (EU குடியேற்றத் திட்டத்தின் கீழ் நிரந்தரக் குடியுரிமைக்குத் தகுதி பெறாதவர்கள்) வெளிநாட்டு நாட்டினரை Sponsor செய்ய UK வேலை வழங்குனர்களுக்கு உதவுகிறது.

விண்ணப்பிப்பதற்கான முக்கிய தேவைகள்

  • UK வேலை வழங்குனருக்கு சரியான Sponsor Licence இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரருக்கு Sponsorship Certificate வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் UK Sponsor-ரால் வழங்கப்பட்ட உண்மையான மற்றும் தகுதியான வேலை வாய்ப்பை நிரூபிக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட வேலைக்கான சம்பளத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • ஆங்கில மொழித் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பராமரிப்புத் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பொருத்தமானால், காசநோய் பரிசோதனை சான்றிதழ் (Tuberculosis Test Certificate) வழங்க வேண்டும்.
  • இந்த விசா UK-ன் புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற அமைப்பின் கீழ் வருவதால், தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகளைப் பெற வேண்டும்.

விசாவின் மூலம் கிடைக்கும் நன்மைகள்

  • UK Sponsor-காக வேலை செய்யும் உரிமை.
  • சில கட்டுப்பாடுகளுடன் மேலதிக Part-Time வேலை செய்ய அனுமதி.
  • தன்னார்வத் தொண்டில் ஈடுபட அனுமதி.
  • சில கட்டுப்பாடுகளுடன் கல்வி கற்க அனுமதி.

விசாவின் காலம் மற்றும் நிரந்தரக் குடியுரிமை

  • Skilled Worker Visa அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை வழங்கப்படும்.
  • இந்த Visa மூலம் 5 ஆண்டுகள் கழித்த பிறகு, UK-ல் நிரந்தரமாக வாழ அல்லது நிரந்தரக் குடியுரிமைக்கு (ILR) விண்ணப்பிக்க தகுதி பெறலாம்.

Dependant Visa (சார்ந்திருப்போர் விசா)

  • உங்கள் வாழ்க்கை துணை மற்றும் / அல்லது குழந்தைகள் உங்களைச் சார்ந்திருப்பவர்களாக (Dependant) UK-ல் வந்து சேர விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • அவர்கள் உறவு மற்றும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பொதுவாக, சார்ந்திருப்பவர்கள் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு UK-ல் வேலை செய்யவும் படிக்கவும் முடியும்.

விசா மாறுதல்

  • நீங்கள் ஏற்கனவே நீண்ட கால விசாவுடன் UK-ல் இருந்தால், Skilled Worker Visa வழிமுறைக்கு மாற விண்ணப்பிக்கலாம்.

Senior or Specialist Worker Visa

Senior or Specialist Worker Visa என்பது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகளாவிய வணிக இடமாற்ற (Global Business Mobility – GBM) வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். முன்பு இருந்த Intra-Company Transfer (ICT) Visa-ற்கு பதிலாக இந்த Visa வந்துள்ளது.

விசாவின் நோக்கம்: GBM Senior or Specialist Worker Visa குறிப்பாக மேலாளர்கள் அல்லது சிறப்பு ஊழியர்கள் தங்கள் வெளிநாட்டு முதலாளியுடன் இணைக்கப்பட்ட UK வணிகத்திற்கு மாறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான முக்கிய தேவைகள்

  • UK வணிகத்திற்கு சரியான Sponsor Licence இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரருக்கு Sponsorship Certificate வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
  • ஆண்டுக்கு மொத்தமாக £73,900 க்கும் குறைவான சம்பளம் பெறுபவராக இருந்தால், விண்ணப்பிப்பதற்கு முன்பு வெளிநாட்டு வேலை வழங்குனரிடம் குறைந்தபட்சம் 12 மாதங்கள் வேலை செய்திருக்க வேண்டும்.
  • ஆண்டுக்கு மொத்தமாக குறைந்தது £73,900 சம்பளம் பெறுபவராக இருந்தால், குறைந்தபட்ச வேலை செய்த கால வரையறை இல்லை.
  • இந்த Visa UK-ன் புள்ளிகள் அடிப்படையிலான குடியேற்ற அமைப்பின் ஒரு பகுதியாகும்.
  • செல்லுபடியாகும் Sponsorship Certificate பெற்றிருக்க வேண்டும்.
  • Senior or Specialist Worker-கான குறைந்தபட்ச திறன் மற்றும் சம்பள அளவை பூர்த்தி செய்யும் உண்மையான வேலை வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும்.
  • நிதி / பராமரிப்புத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பொருத்தமானால், காசநோய் பரிசோதனை சான்றிதழ் வழங்க வேண்டும்.

விசாவின் மூலம் கிடைக்கும் நன்மைகள்

  • Sponsor-காக வேலை செய்யும் உரிமை.
  • சில கட்டுப்பாடுகளுடன் தன்னார்வத் தொண்டு செய்ய அனுமதி.
  • சில கட்டுப்பாடுகளுடன் கல்வி கற்க அனுமதி.

நிரந்தரக் குடியுரிமை

இந்த Visa நிரந்தரக் குடியுரிமைக்கு (ILR) வழிவகுக்காது. UK-ல் நிரந்தரமாக வசிக்க விரும்பினால், Skilled Worker Visa போன்ற மாற்று Visa பிரிவுக்கு மாற விண்ணப்பிக்க வேண்டும்.

விசாவின் அதிகபட்ச காலம்

  • ஆண்டுக்கு £73,900 க்கும் குறைவான சம்பளம் பெறுபவராக இருந்தால், எந்த 6 ஆண்டு காலத்திலும் 5 ஆண்டுகள் வரை தங்கலாம்.
  • ஆண்டுக்கு £73,900 அல்லது அதற்கு மேற்பட்ட சம்பளம் பெறுபவராக இருந்தால், எந்த 10 ஆண்டு காலத்திலும் 9 ஆண்டுகள் வரை தங்கலாம்.

Dependant Visa (சார்ந்திருப்போர் விசா)

  • உங்கள் வாழ்க்கை துணை மற்றும் / அல்லது குழந்தைகள் உங்களைச் சார்ந்திருப்பவர்களாக UK-ல் வந்து சேர விண்ணப்பிக்கலாம்.
  • அவர்கள் உறவு மற்றும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பொதுவாக, சார்ந்திருப்பவர்கள் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு UK-ல் வேலை செய்யவும் படிக்கவும் முடியும்.

Global Talent Visa (உலகளாவிய திறமை விசா)

Global Talent Visa, Science, Technology, Engineering, Medicine, Humanities, கலை மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட திறமையான மற்றும் நம்பிக்கைக்குரிய தனிநபர்கள் UK-ல் வாழவும் வேலை செய்யவும் ஒரு வழியை வழங்குகிறது.

விண்ணப்பிப்பதற்கான தகுதி

  • விண்ணப்பதாரர் தனது துறையில் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக இருக்க வேண்டும் அல்லது எதிர்காலத்தில் தலைவராக வளரக்கூடிய சாத்தியக்கூறுகளைக் காட்ட வேண்டும்.
  • பொதுவாக, விண்ணப்பதாரர் தனது துறைக்கான பொருத்தமான நிபுணர் அமைப்பிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
  • குடிவரவு விதிகளால் வரையறுக்கப்பட்ட தகுதிவாய்ந்த மதிப்புமிக்க விருதைப் பெற்றவர்கள் ஒப்புதல் கட்டத்தைத் தவிர்க்கலாம்.

வேலை வாய்ப்பு

மிகக் குறைவான விதிவிலக்குகளுடன், Global Talent Visa UK-ல் கிட்டத்தட்ட எந்த வகையான வேலை அல்லது சுயதொழிலிலும் வேலை செய்ய உங்களை அனுமதிக்கும்.

Dependant Visa (சார்ந்திருப்போர் விசா)

  • உங்கள் வாழ்க்கை துணை மற்றும் / அல்லது குழந்தைகள் உங்களைச் சார்ந்திருப்பவர்களாக (Dependant) UK-ல் வந்து சேர Visa-க்கு விண்ணப்பிக்கலாம்.
  • அவர்கள் உறவு மற்றும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பொதுவாக, சார்ந்திருப்பவர்கள் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு UK-ல் வேலை செய்யவும் படிக்கவும் முடியும்.

விசா மாறுதல்

நீங்கள் ஏற்கனவே நீண்ட கால விசாவுடன் UK-ல் இருந்தால், Global Talent Visa வழிமுறைக்கு மாற தகுதி பெறலாம்.

விசாவின் காலம் மற்றும் நிரந்தரக் குடியுரிமை

  • Global Talent Visa-வை நீடிக்க முடியும்.
  • இது UK-ல் 3 அல்லது 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்த பிறகு நிரந்தரக் குடியுரிமைக்கு (ILR) வழிவகுக்கும்.

Scale-up Visa

Scale-up Visa என்பது வேகமாக வளர்ந்து வரும் UK வணிகங்கள் (Scale-up Businesses) தொடர்ந்து வளர்வதற்குத் தேவையான திறன்களைக் கொண்ட திறமையான நபர்களுக்கானது.

விசாவின் மூலம் கிடைக்கும் அனுமதி

இந்த Visa, தகுதி வாய்ந்த வேலையை UK-ன் Scale-up வணிகத்தில் செய்வதற்காக நீங்கள் ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழைய அனுமதிக்கிறது.

விண்ணப்பிப்பதற்கான முக்கிய தேவைகள்

  • UK வணிகம் சரியான Sponsor Licence வைத்திருக்க வேண்டும்.
  • நீங்கள் முதன்முதலில் விண்ணப்பிப்பதற்கு முன்பு உங்களுக்கு Sponsorship Certificate வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
  • UK வணிகத்திடமிருந்து குறைந்தது 6 மாதங்கள் நீடிக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்ட உண்மையான வேலை வாய்ப்பு இருக்க வேண்டும்.
  • அந்த தகுதியான வேலைக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சம்பளம் அல்லது அதற்கு மேற்பட்ட சம்பளம் பெற வேண்டும்.
  • ஆங்கில மொழித் தேவை, பராமரிப்புத் தேவை ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பொருத்தமானால், காசநோய் பரிசோதனை சான்றிதழ் வழங்க வேண்டும்.

விசாவின் காலம் மற்றும் நிரந்தரக் குடியுரிமை

  • Scale-up Visa ஆரம்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கப்படலாம்.
  • இந்த வழிமுறையிலோ அல்லது பிற தகுதியான வழிமுறைகளுடன் இணைந்தோ UK-ல் 5 ஆண்டுகள் கழித்த பிறகு, நீங்கள் நிரந்தரக் குடியுரிமைக்கு (ILR) விண்ணப்பிக்கலாம்.

ஸ்பான்சர் கட்டம் மற்றும் ஸ்பான்சர் இல்லாத கட்டம்

  • ஆரம்ப ஸ்பான்சர் கட்டம் (முதல் 6 மாதங்கள்): ஆரம்ப இரண்டு வருட விசா காலத்தில் முதல் 6 மாதங்களுக்கு, நீங்கள் ஐக்கிய இராச்சியத்தின் Scale-up வணிகத்தால் Sponsor செய்யப்பட்டு அங்கு பணியாற்ற வேண்டும். இந்த காலத்திற்குப் பிறகு, அந்த வணிகத்துடனான உங்கள் Sponsorship தானாகவே முடிவுக்கு வரும். இருப்பினும், நீங்கள் விரும்பினால் அவர்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றலாம் அல்லது வேறு வேலை தேடலாம்.
  • நீடிப்பு மற்றும் ஸ்பான்சர் இல்லாத கட்டம் (2 வருடங்களுக்குப் பிறகு): இந்த விசாவில் இரண்டு வருடங்களை முடித்த பிறகு, நீங்கள் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு உங்கள் Scale-up Visa-வை நீடிக்க விண்ணப்பிக்கலாம். உங்கள் முந்தைய ஐக்கிய இராச்சிய PAYE வருமானம் உங்கள் ஆரம்ப Scale-up Visa காலத்தில் குறைந்தது 50% நேரத்திற்கு ஆண்டுக்கு £33,000 ஆக இருந்திருந்தால், நீங்கள் எந்த குறிப்பிட்ட UK வேலை வழங்குனரிடமும் Sponsor பெற வேண்டியதில்லை.

Dependant Visa (சார்ந்திருப்போர் விசா)

  • உங்கள் வாழ்க்கை துணை மற்றும் / அல்லது குழந்தைகள் உங்களைச் சார்ந்திருப்பவர்களாக UK-ல் வந்து சேர விண்ணப்பிக்கலாம்.
  • அவர்கள் உறவு மற்றும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பொதுவாக, சார்ந்திருப்பவர்கள் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு UK-ல் வேலை செய்யவும் படிக்கவும் முடியும்.

There are many routes to working in the UK! From the Temporary Worker visa for short-term jobs to specialized visas for skilled professionals, various options await you. Are you a skilled worker? Or do you possess global talent? Do you aspire to work in a fast-growing company? Discover the visa that suits your qualifications! You also have the opportunity to bring your family to the UK. Some visas even lead to permanent residency!