Australia-வில் Nurse-ஆக வேலை செய்யத் தயாரா? உங்கள் Visa வழிகள் இதோ!

Australia-வில், திறமையான Nurses மிக அதிகமாக தேவைப்படுகிறார்கள். குறிப்பாக, கிராமப்புறங்களிலும், வயதானவர்களைப் பார்த்துக்கொள்ளும் இடங்களிலும் பல Nurses பற்றாக்குறையாக உள்ளது.

இந்தத் தேவை அதிகமாக இருப்பதால், வெளிநாடுகளில் படித்த Nurses-க்கு Australia-வில் நல்ல வேலை வாய்ப்புகளும், அருமையான வாழ்க்கை முறையும் கிடைக்கிறது.

நீங்கள் Australia-வில் ஒரு Nurse-ஆக வேலை செய்ய விரும்பினால், அதற்குத் தேவையான Australia Visa என்னென்ன என்பதை முதலில் தெரிந்துகொள்வது, உங்கள் கனவை நிஜமாக்கும் முதல் படியாகும்.

Nurses-கான முக்கிய Visa வகைகள்: 

Australia-வில் Nurse வேலைக்கு எனப் பல சிறப்பு Visa வாய்ப்புகள் உள்ளன. அவற்றில் சில முக்கியமானவை இங்கே:

01. Skilled Independent Visa – Subclass 189: 

இது உங்களுக்கு நிரந்தரமாக Australia-வில் தங்க (Permanent Residency) உதவும் விசா. இந்த விசாவிற்கு எந்த ஒரு வேலை வழங்குநரின் அல்லது Australia மாநில அரசின் உதவியும் தேவையில்லை. நல்ல படிப்புத் தகுதியும், அருமையாக ஆங்கிலம் பேசும் திறமையும் உள்ள Nurses-க்கு இது மிகவும் பொருத்தமானது.

02. Skilled Nominated Visa – Subclass 190: 

இந்த விசா பெற, Australia-வில் உள்ள ஒரு மாநிலமோ (State) அல்லது ஒரு பகுதியோ (Region) உங்களைப் பரிந்துரை செய்ய வேண்டும். இந்த விசா மூலமும் நீங்கள் Australia-வில் நிரந்தரமாகத் தங்கலாம் (Permanent Residency). ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேலை செய்ய விரும்பும் Nurses-க்கு இது மிகவும் நல்லது.

03. Skilled Work Regional (Provisional) Visa – Subclass 491: 

இது ஐந்து வருட விசா. Australia-வில் உள்ள ஒரு கிராமப்புற (Regional) பகுதி உங்களை Sponsor செய்தால் இந்த விசா கிடைக்கும். இந்த விசா மூலம், மூன்று வருடங்கள் அங்கே வேலை செய்த பிறகு, Nurses நிரந்தரமாக Australia-வில் தங்கலாம்.

04. Employer Nomination Scheme – Subclass 186: 

Australia-வில் உள்ள ஒரு வேலை வழங்குநர், Nurses ஆகிய உங்களை நிரந்தரமாகக் குடியமர்த்த Sponsor செய்ய முன்வந்தால், இந்த விசா உங்களுக்குக் கிடைக்கும்.

05. Temporary Skill Shortage Visa – Subclass 482: 

அங்கீகரிக்கப்பட்ட ஒரு வேலை வழங்குநரால் Sponsor செய்யப்படும்போது, Nurses Australia-வில் நான்கு ஆண்டுகள் வரை வேலை செய்ய இந்த விசா அனுமதிக்கிறது.

06. Training Visa – Subclass 407: 

வேலை செய்யும்போதே பயிற்சி எடுத்து தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் Nurses-க்கு இந்த விசா உதவும்.

பதிவு செய்வதும் வேலை கிடைப்பதும் எப்படி?

வெளிநாடுகளில் Nurse-ஆகப் படித்தவர்கள் Australian Visa-ற்கு விண்ணப்பிக்கும் முன் சில முக்கியமான வேலைகளைச் செய்ய வேண்டும். அதாவது, உங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதில் முக்கியமானது:

  • NMBA பதிவு (Nursing and Midwifery Board of Australia – NMBA Registration): உங்கள் கல்வித் தகுதிகள் NMBA மதிப்பீடு செய்யப்பட்டு. சில சமயம் ஒரு தேர்வு எழுதவும் வேண்டியிருக்கலாம்.
  • ஆங்கிலப் புலமை (English Language Proficiency): IELTS அல்லது OET போன்ற ஆங்கிலத் தேர்வுகளில் நீங்கள் குறிப்பிட்ட மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இது மிகவும் முக்கியம்.

இந்தப் பதிவுகள் எல்லாம் முடிந்த பிறகு, Nurses-க்கு நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். Australia-வில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் இருந்து கிராமப்புற மருத்துவமனைகள் வரை, வெளிநாட்டுச் Nurses-க்குப் பல Nursing வேலைகள் இருக்கின்றன.

விசா நடைமுறைகள் சவாலானதாகத் தோன்றலாம், ஆனால் உங்கள் கனவை நனவாக்க இதுவே சரியான நேரம். உங்கள் Australian Nursing பயணத்தைத் தொடங்க, இன்றே உங்கள் Visa வாய்ப்புகளை ஆராயுங்கள்!

Are you ready to work as a Nurse in Australia?
Australia currently has a high demand for skilled Nurses, especially in regional and aged care sectors. This presents a fantastic opportunity for internationally trained nurses to build a fulfilling life and gain excellent work experience in Australia. The first step to making your Australian nursing dream come true is understanding the right Australian Visa for you.

The visa process might seem challenging, but now is the perfect time to make your dream a reality. Start your Australian nursing journey by exploring your visa options today!