புதிய இங்கிலாந்து குடிவரவு விதிகள்: முக்கிய மாற்றங்கள்!
May 12, 2025 அன்று, UK அரசாங்கம் தங்கள் குடிவரவு முறையை மாற்றப்போவதாக ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டது. இப்போது, அந்த மாற்றங்களின் முதல் பகுதி July 22, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது.
July 1 அன்று வெளியான “மாற்றங்களின் அறிக்கை” (Statement of Changes), Skilled Worker Visas, Global Mobility Visas மற்றும் Scale-up Visas-க்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்த புதிய விதிகள் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், நிறுவனங்கள் உடனடியாக விசா விண்ணப்பங்களை விரைவுபடுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். குறிப்பாக, புதிய திறன் மற்றும் சம்பள எல்லைகளால் பாதிக்கப்படக்கூடிய ஊழியர்களுக்கு இது மிகவும் முக்கியம்.
குறைந்தபட்ச சம்பள அளவுகள் மாறிவிட்டன!
புதிய குறைந்தபட்ச சம்பள அளவுகள் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த சம்பளக் கணக்கெடுப்பின் (Annual Survey of Hours and Earnings – ASHE) அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. புதிய குறைந்தபட்ச சம்பள அளவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- புதிய பொது சம்பள வரம்பு: £38,700 → £41,700
- புதியவர்கள் அல்லது Immigration Salary List கீழ் புதிய சம்பளம்: £30,960 → £33,400
Visa-காக புதிதாக வருபவர்கள் அல்லது சில குறிப்பிட்ட Immigration Salary List-ல் உள்ளவர்களுக்கு, சம்பளம் £30,960 இலிருந்து £33,400 ஆக உயரும். - 2022 April 4 க்குப் பிறகு PhD பட்டம் பெற்றவர்களுக்கு புதிய சம்பளம்: £34,830 → £37,500
- 2024 April 4 க்கு முன் Sponsor செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான புதிய குறைந்தபட்ச சம்பளம்: £29,000 → £31,300
- 2022 April 4 க்கு முன் PhD பட்டம் பெற்றவர்களுக்கு புதிய சம்பளம்: £26,100 → £28,200
- Global Business Mobility visa: இந்த வகை விசாவுக்கான பொதுவான சம்பள வரம்பு £48,500 இலிருந்து £52,500 ஆக அதிகரிக்கிறது.
அனைத்து குறிப்பிட்ட தொழில் துறைகளுக்கான சம்பள விகிதங்களும் 2024 ஆம் ஆண்டுக்கான மணிநேரங்கள் மற்றும் வருவாய்க்கான வருடாந்த கணக்கெடுப்புக்கு ஏற்ப அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக:
- Financial managers and directors (Code 1131): £70,000 → £75,100
- Marketing, sales and advertising directors (Code 1132): £83,000 → £87,300
- IT project managers (Code 2131): £51,900 → £58,200
- Programmers and software development professionals (Code 2134): £49,400 → £54,700
சம்பள வரம்புகள் குடிவரவு ஆலோசனைக் குழுவால் (Migration Advisory Committee – MAC) தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படும்.
July 22, 2025 க்கு முன்னர் விசா பெற்றவர்கள் அல்லது Certificates of Sponsorship பெற்றவர்களுக்கு இடைக்கால விதிகள் (Transitional provisions) பொருந்தும்.
அதிகரித்த வேலைவாய்ப்புத் தகுதிக்கான புதிய விதிகள்
UK அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்பவர்களுக்கான வேலைவாய்ப்புத் தகுதிகளை மேலும் கடினமாக்கிவிட்டது.
முன்பு, ஒரு குறிப்பிட்ட கல்வித் தகுதி அல்லது அனுபவம் இருந்தால் போதும் என்றிருந்த நிலையில், இப்போது நீங்கள் UK-ல் விசா பெற்று வேலை செய்ய வேண்டும் என்றால், அந்த வேலைக்கு முன்பைவிட அதிக கல்வித்தகுதி அல்லது திறமை தேவைப்படும்.
UK Immigration விதிகளின்படி, இனிமேல் நீங்கள் UK-ல் வேலை செய்ய Sponsor செய்யப்பட வேண்டுமென்றால், அந்த வேலை ‘ஒழுங்குபடுத்தப்பட்ட தகுதிகள் கட்டமைப்பு (Regulated Qualifications Framework-RQF)’ என்ற அமைப்பில் குறைந்தது நிலை 6 இல் இருக்க வேண்டும்.
எளிமையாகச் சொன்னால், நீங்கள் Sponsor செய்யப்படும் வேலை Degree படித்தவர்களுக்கான வேலையாக இருக்க வேண்டும். இதனால், July 22, 2025 முதல், சுமார் 111 வேலைகள் (தொழில்கள்) இனி UK-ல் வேலை செய்ய விசா Sponsorship பெற முடியாது. அவை Sponsorship பெற முடியாத வேலைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும்.
இனி Sponsorship கிடைக்காத சில வேலைகள்:
- Public Service Professionals (3560)
- Buyers and Procurement Officers (3551)
- Finance Officers (4124)
- Human Resources and Industrial Relations Officers (3571)
- Veterinary Nurses (3240)
குறைவான திறமை தேவைப்படும் வேலைகளில் மாற்றம்
இனிமேல், குறைவான திறமை தேவைப்படும் வேலைகள் (RQF நிலை 3-5), அதாவது பட்டப்படிப்புக்குக் குறைவான திறமை தேவைப்படும் வேலைகள், Visa Sponsorship பெறும் வேலைகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
ஆனால், ஒரு சில சலுகைகள் உள்ளன. 2023-2024 ஆம் ஆண்டுகளில் குடிவரவு ஆலோசனைக் குழு (Migration Advisory Committee – MAC) ஆய்வு செய்தபோது, சில வேலைகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அந்த வேலைகள் தொடர்ந்து Sponsorship பெறலாம். ஆனால், அவை இரண்டு புதிய தனித்தனி பட்டியல்களுக்கு மாற்றப்படும்:
- Immigration Salary List (ISL):
- இந்தப் பட்டியலில், தற்போதுள்ள வேலைகளுடன், Care Managers – (1232) மற்றும் Nursing Assistants – (6131) ஆகிய இரண்டு புதிய வேலைகள் சேர்க்கப்படும்.
- இந்தப் பட்டியல் December 31, 2026 வரை நடைமுறையில் இருக்கும்.
- Temporary Shortage List (TSL):
- இந்தப் பட்டியல் தற்காலிகமாக December 31, 2026 வரை நடைமுறையில் இருக்கும்.
- இது குடிவரவு ஆலோசனைக் குழுவால் (Migration Advisory Committee-MAC) தொடர்ந்து மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்.
தற்போதைய விசா வைத்திருப்பவர்களுக்கு சில சலுகைகள் (இடைக்கால ஏற்பாடுகள்)
ஏற்கனவே UK-ல், இப்போது விதிகளால் பாதிக்கப்படும் வேலைகளில் Sponsor செய்யப்பட்டு இருப்பவர்கள், அல்லது July 22, 2025-க்கு முன் Certificate of Sponsorship பெற்றவர்கள் கவலைப்படத் தேவையில்லை.
இவர்கள் தங்கள் விசாவை நீடிக்கவோ (Extension), ஒரு விசா வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாற்றிக்கொள்ளவோ (Switch), அல்லது மேலதிக வேலை செய்ய அனுமதி பெறவோ (Supplementary Work Permission) முடியும்.
இந்தச் சலுகைகள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று இப்போது வரை ஒரு குறிப்பிட்ட காலவரையறை எதுவும் இப்போது நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், அரசாங்கம் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பு (Explanatory Memorandum), இந்தச் சலுகைகள் எப்போதும் நிலையாக இருக்காது என்றும், சரியான நேரத்தில் இது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கிறது.
Temporary Shortage list-ல் உள்ள வேலைகள்:
- 1243 Managers in logistics
- 1258 Directors in consultancy services
- 3111 Laboratory technicians
- 3112 Electrical and electronics technicians
- 3113 Engineering technicians
- 3114 Building and civil engineering technicians
- 3115 Quality assurance technicians
- 3116 Planning, process and production technicians
- 3120 CAD, drawing and architectural technicians
- 3131 IT operations technicians
- 3132 IT user support technicians
- 3133 Database administrators and web content technicians
- 3412 Authors, writers and translators
- 3414 Dancers and choreographers
- 3417 Photographers, audio-visual and broadcasting equipment operators
- 3422 Clothing, fashion and accessories designers
- 3429 Design occupations not elsewhere classified – only the following job types: Industrial and product designers, Packaging designers, Performance make-up artists, Set designers, Visual merchandising managers and designers
- 3512 Ship and hovercraft officers
- 3520 Legal associate professionals
- 3532 Insurance underwriters
- 3533 Financial and accounting technicians
- 3541 Estimators, valuers and assessors
- 3544 Data analysts
- 3549 Business associate professionals not elsewhere classified – only the following job types: Business support officers, Business systems analysts
- Contract administrators, Clinical coders, Clinical trials administrators, Research coordinators
- 3552 Business sales executives
- 3554 Advertising and marketing associate professionals
- 3571 Human resources and industrial relations officers
- 3573 Information technology trainers
- 4121 Credit controllers
- 4122 Book-keepers, payroll managers and wages clerks
- 4129 Financial administrative occupations not elsewhere classified – only the following job types: Box office assistants, Grants officers, Mortgage administrators, Revenue assistants (excludes National and Local government revenue occupations), Treasury assistants
- 4132 Pensions and insurance clerks and assistants
- 5213 Welding trades
- 5214 Pipe fitters
- 5223 Metal working production and maintenance fitters
- 5225 Air-conditioning and refrigeration installers and repairers
- 5231 Vehicle technicians, mechanics and electricians
- 5232 Vehicle body builders and repairers
- 5233 Vehicle paint technicians
- 5235 Boat and ship builders and repairers
- 5241 Electricians and electrical fitters
- 5242 Telecoms and related network installers and repairers
- 5244 Computer system and equipment installers and servicers
- 5245 Security system installers and repairers
- 5249 Electrical and electronic trades not elsewhere classified
- 5311 Steel erectors
- 5315 Plumbers and heating and ventilating installers and repairers
- 5319 Construction and building trades not elsewhere classified – only the following job types: Builders, Divers, Fence erectors, Industrial climbers
- Remotely Operated Vehicle (ROV) operators, Steel fixers and underpinners
- 5322 Floorers and wall tilers
- 5323 Painters and decorators
- 5330 Construction and building trades supervisors
- 8133 Energy plant operatives

குடும்ப உறுப்பினர்களுக்கு புதிய கட்டுப்பாடு (Dependents)
முக்கியமான ஒரு மாற்றம் என்னவென்றால், இனிமேல், Temporary Shortage List (TSL) அல்லது Immigration Salary List (ISL) ஆகியவற்றில் உள்ள வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் புதிய UK விசா விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை (Dependents) தங்களுடன் அழைத்து வர முடியாது.
யாரெல்லாம் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வர முடியும்? (விதிவிலக்குகள்)
இந்தக் கட்டுப்பாடு அனைவருக்கும் பொருந்தாது. சிலருக்கு மட்டும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர வாய்ப்புகள் உள்ளன:
- UK-வில் பிறந்த குழந்தைகள்.
- குழந்தையின் ஒரே உயிருள்ள பெற்றோர் (Sole Surviving Parent): குழந்தையின் மற்றொரு பெற்றோர் உயிருடன் இல்லை (இறந்துவிட்டார்) என்றால், விசா வைத்திருப்பவர். அல்லது
- குழந்தையின் முழுப் பொறுப்பையும் கொண்டவர்(Sole Parental Responsibility): ஒருவேளை குழந்தையின் மற்றொரு பெற்றோர் உயிருடன் இருந்தாலும், குழந்தையின் முழுப் பொறுப்பும் (சட்டரீதியான மற்றும் நடைமுறைரீதியான அனைத்து முடிவுகளும்) விசா வைத்திருப்பவரிடம் மட்டுமே இருந்தால். இது நீதிமன்ற உத்தரவு மூலம் அல்லது பிற சட்ட ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும்.
- விசாவுக்கு விண்ணப்பிப்பவரின் வாழ்க்கை துணை, ஏற்கனவே Skilled Worker Visa வைத்திருந்து, அவர் ‘இடைக்கால ஏற்பாடுகளின்’ கீழ் (transitional provisions) உள்ள ஒரு தகுதியான வேலையில் இருந்தால்.
உதாரணமாக: ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். மனைவியின் வேலை புதிய விதிகளால் (RQF நிலை 6-க்கு கீழ் உள்ள வேலை என்பதால்) குடும்ப உறுப்பினர்களைக் கொண்டுவர முடியாத பட்டியலில் இருந்தாலும், கணவர் ஏற்கனவே ஒரு Skilled Worker Visa வைத்திருந்து, அவரது வேலை இடைக்கால ஏற்பாடுகளின் கீழ் (Transitional Provisions) பாதுகாக்கப்பட்டு இருந்தால், அப்போது அந்த குடும்பத்திற்கு சலுகை வழங்கப்படும். அதாவது, மனைவி தனது குடும்ப உறுப்பினர்களை (Dependents) அழைத்து வர முடியும்.
இது, புதிய விதிகளால் பாதிக்கப்படும் பழைய விசா வைத்திருப்பவர்களுக்குக் கொடுக்கப்படும் ஒரு வகையான சலுகை அல்லது பாதுகாப்பு ஆகும்.
பராமரிப்புப் பணியாளர்கள் (Care Workers)
Care Workers மற்றும் Senior Care Workers (அதாவது, குறியீடுகள் 6135 மற்றும் 6136 கொண்ட வேலைகள்) இனி Sponsor செய்யப்பட்ட விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது. இந்த மாற்றம் July 22, 2025 முதல் அமலுக்கு வருகிறது, சில சலுகைகளுடன்.
இருப்பினும், ஒரு நல்ல செய்தி உள்ளது: இடைக்கால ஏற்பாடுகள் (Transitional Arrangements) July 22, 2028 வரை நடைமுறையில் இருக்கும். இதன் மூலம், ஏற்கனவே UK-ல் இந்த வேலைகளில் Sponsor செய்யப்பட்டு, Certificate of Sponsorship வழங்கப்பட்ட திகதிக்கு முன் குறைந்தபட்சம் மூன்று மாதமாவது வேலை செய்தவர்கள் தொடர்ந்து பயன் பெறலாம்.
உதாரணமாக : நீங்கள் ஒரு Certificate of Sponsorship (CoS) July 1, 2025 அன்று பெற்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இடைக்கால ஏற்பாடுகளின் (Transitional Arrangements) கீழ் நீங்கள் தொடர்ந்து தங்க விரும்பினால், இந்த CoS கிடைத்த திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன் (அதாவது April 1, 2025-க்கு முன்) நீங்கள் ஏற்கனவே அந்த வேலையில் சேர்ந்திருந்து, குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது வேலை செய்திருக்க வேண்டும்.
அடுத்து என்ன எதிர்பார்க்கலாம்?
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இங்கிலாந்து குடிவரவு விதிகளில் மேலும் சில மாற்றங்கள் வரக்கூடும்:
- Immigration Skills Charge (குடிவரவு திறன் கட்டணம்) 32% அதிகரிக்கும். (இந்தக் கட்டணம், வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்கும் நிறுவனங்கள் அரசாங்கத்திற்குச் செலுத்தும் கட்டணம்.)
- விசா விண்ணப்பிக்கும் முக்கிய நபருக்கும் (Principal Applicant) அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் (Dependents) பல்வேறு விசா வகைகளுக்கான ஆங்கில மொழித் தேவைகள் அதிகரிக்கப்படும்.
- பாராளுமன்றத்தில் ஒரு புதிய ‘குடும்ப கொள்கை கட்டமைப்பு’ (Family Policy Framework) அறிமுகப்படுத்தப்படும். (இது Family Visas மற்றும் குடும்பம் தொடர்பான பிற கொள்கைகளை வரையறுக்கும்.)
குடியேற்ற விதிமுறைகளில் வரவிருக்கும் மாற்றங்கள்
01. நிரந்தர வதிவிடத்திற்கான காலம்:
UK-ல் நிரந்தரமாகக் குடியேறுவதற்கு (Settlement) தற்போதுள்ள 5 வருடத் தொடர்ச்சியான வதிவிடத் தேவை 10 வருடங்களாக அதிகரிக்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்ட ‘மாற்றங்களின் அறிக்கை’ (Statement of Changes) இதில் எந்தக் குறிப்பையும் தரவில்லை.
02. சம்பள வரம்பு குறித்த முக்கியமான அறிவிப்பு:
ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், July 22, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு நிரந்தரக் குடியேற்றத்திற்கு (Settlement) விண்ணப்பிப்பவர்கள், July 22, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு நடைமுறையில் உள்ள புதிய சம்பள விகிதத்தை (Salary Going Rate) பூர்த்தி செய்ய வேண்டும்.
03. எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் மற்றும் கால வரையறை:
நிரந்தரக் குடியேற்றத்திற்கான தகுதிகளில் மாற்றங்கள் 2025 இல் ஒரு கலந்தாலோசனைக்குப் பிறகு, 2026 இல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதற்கான சரியான காலக்கெடுவை அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
புதிய குடிவரவு விதிகள் மற்றும் உங்கள் அடுத்தகட்ட நகர்வுகள்
இந்தக் குடிவரவு விதிகளில் சொல்லப்பட்ட மாற்றங்கள், July 22, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் விசா விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஆனால், இந்தத் திகதிக்கு முன் Certificates of Sponsorship வழங்கப்பட்டிருந்தால், அந்த விண்ணப்பதாரர்கள் July 22, 2025-க்கு முந்தைய பழைய விதிகளின் கீழ் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு இடைக்கால ஏற்பாடுகள் (Transitional Arrangements) பொருந்தும்.
முதலாளிகளுக்கான முக்கிய அறிவுரைகள்
முதலாளிகள் (நிறுவனங்கள்) இப்போதே தங்கள் ஊழியர்களின் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, உங்களிடம் Graduate Visa வைத்திருக்கும் ஊழியர்கள் இருந்தால், அவர்களின் விசா காலாவதியான பிறகு புதிய விதிகளால் அவர்கள் பாதிக்கப்படுவார்களா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
உங்கள் நிறுவனத்தில் சில வேலைகள், புதிய திறமை அல்லது சம்பள வரம்புகளால் பாதிக்கப்படலாம் எனில், இப்போதே தொழிலாளர்களை வேலைக்கு எடுத்து, Visa Sponsor செய்வதை விரைவுபடுத்துங்கள்.
Certificate of Sponsorship வழங்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதாவது, July 22-க்கு முன் ஒரு சான்றிதழை நீங்கள் வழங்கினால், விண்ணப்பதாரருக்கு September 22 வரை விசாவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கிடைக்கும்.
எனவே, தற்போதைய விதிகளின் கீழ் ஒருவருக்கு Visa Sponsor செய்ய விரும்பினால், July 22-க்கு முன்பே உங்கள் Certificate of Sponsorship-ஐ வழங்க வேண்டும்.
உங்கள் நிறுவனத்திற்கு மேலும் Certificate of Sponsorship தேவைப்பட்டால், உடனடியாக ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி விண்ணப்பியுங்கள்.
UK குடிவரவு விதிகள் அமலுக்கு வரும் கடைசி நாள் July 22 என்றாலும், சில சமயங்களில் Sponsor Management System சில நாட்களுக்கு முன்பே நிறுத்தப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். அதனால், கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், தேவையான Certificate of Sponsorship-ஐ முடிந்தவரை சீக்கிரம் வழங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
New UK Immigration Rules: Key Changes from July 22, 2025
The UK government is introducing significant immigration changes from July 22, 2025. These updates will increase salary thresholds for most visas (e.g., general minimum rising to £41,700) and raise the required skill level for sponsored jobs to degree-level (RQF Level 6), making many roles ineligible.
New visa applicants for certain shortage occupations (like Care Managers) generally won’t be able to bring dependents, with limited exceptions. Care workers (codes 6135/6136) will no longer be eligible for sponsored visas from July 22, 2025, though some transitional arrangements apply until July 22, 2028.
Future changes expected by late 2025 include a 32% increase in the Immigration Skills Charge and higher English language requirements. Employers are strongly advised to expedite current visa applications and Certificate of Sponsorship assignments before the July 22 deadline, as the system may close early.
Source: https://sherrards.com/news/important-uk-immigration-changes-from-22-july-2025/



