2026 ஆம் ஆண்டில் கனடாவில் அதிக தேவை உள்ள 15 வேலைவாய்ப்புகள்

2026ஆம் ஆண்டில் கனடாவின் வேலை சந்தை, மக்கள் தொகை மாற்றங்கள், வீட்டு வசதி தேவையின் உயர்வு, சுகாதாரத் துறையின் அதிகரிக்கும் அழுத்தங்கள் மற்றும் தொடர்ந்து நடைபெறும் Digital மாற்றம் ஆகிய காரணங்களால் நீண்டகால தொழிலாளர் பற்றாக்குறையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. பல்வேறு துறைகளில் செயல்படும் நிறுவனங்கள், நடைமுறை அனுபவம் கொண்ட திறன்கள், அங்கீகரிக்கப்பட்ட தகுதிகள் மற்றும் கனடிய வேலை சந்தையில் விரைவாக தங்களை ஒருங்கிணைக்கக்கூடிய திறன் கொண்ட பணியாளர்களை பெற கடும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.

கனடாவிற்கு புதிதாக குடியேறும் நபர்களுக்கும், தங்கள் தொழில் பாதையை திட்டமிட விரும்பும் குடியிருப்பாளர்களுக்கும்,நீண்ட காலத்திற்கு தொடர்ந்து தேவை இருக்கும் தொழில்களை கண்டறிதல், வேலைவாய்ப்புகளையும் குடியேற்ற வாய்ப்புகளையும் அதிகரிக்க உதவுகிறது.

இந்த வழிகாட்டி, தொழிலாளர் சந்தை போக்குகள், நிறுவனங்களின் தேவைகள் மற்றும் குடியேற்ற திட்டங்களுடன் உள்ள ஒத்திசைவை அடிப்படையாகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டிற்கான கனடாவின்15 வேலைவாய்ப்புகளை விளக்குகிறது. ஒவ்வொரு தொழிலுக்கும் தொடர்புடைய NOC 2021 குறியீடும், கனடாவில் எதிர்பார்க்கப்படும் சம்பள விபரம் இதில் வழங்கப்பட்டுள்ளன.


1. Administrative Assistant  NOC: 13110, 13111, 13112

நிர்வாக உதவியாளர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தினசரி அலுவலகப் பணிகள் சீராக நடைபெற முக்கிய ஆதரவாக செயல்படுகிறார்கள். கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் கையாளுதல், கூட்டங்கள் மற்றும் அட்டவணைகள் அமைத்தல், ஆவணங்கள் தயாரித்தல், மற்றும் அலுவலகத்திற்குள் தேவையான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வது இவர்களின் முக்கிய பொறுப்புகளாகும்.

2026ஆம் ஆண்டில், Cloud அடிப்படையிலான மென்பொருட்கள் மற்றும் Work From Home (வீட்டிலிருந்து வேலை) செய்ய உதவும் ஒத்துழைப்பு தளங்களை சரியாகவும் திறம்படவும் பயன்படுத்தத் தெரிந்திருப்பது நிர்வாக உதவியாளர்களுக்கு மிகவும் அவசியமாகியுள்ளது.

இன்றைக்கு பல நிறுவனங்கள் அலுவலகத்தில் நேரில் வேலை செய்வதையும், வீட்டிலிருந்து வேலை செய்வதையும் இணைத்த Hybrid முறையில் செயல்படுகின்றன. இதனால், நிர்வாக உதவியாளர்களின் வேலைப் பொறுப்புகள் முன்பை விட விரிந்துள்ளதுடன், அவர்கள் அதிக பணிகளை ஒருங்கிணைத்து கவனிக்க வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.

சம்பள அளவு: $38,000 முதல் $100,000 வரை

நிறுவன வளர்ச்சி மற்றும் அலுவலக சிக்கல்கள் அதிகரிப்பதால், Digital அறிவு கொண்ட திறமையான நிர்வாக உதவியாளர்களுக்கான தேவை தொடர்ந்து உயர்கிறது.


2. Planner  NOC: 21202

திட்டமிடுபவர்கள் (Planners) கட்டிடம், Logistics, உட்கட்டமைப்பு மற்றும் அரசுத் துறை போன்ற பல துறைகளில் திட்டங்கள், கால அட்டவணைகள் மற்றும் வளங்களை ஒருங்கிணைத்து நிர்வகிக்கிறார்கள்.அவர்கள் சாத்தியமான அபாயங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, பணிகளுக்கிடையேயான சார்புகளை திறம்பட நிர்வகிக்கிறார்கள். இதன் விளைவாக, திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் மற்றும் ஒதுக்கப்பட்ட செலவுத்திட்டத்திற்குள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்கிறார்கள்.

திட்டங்கள் நாளுக்கு நாள் அதிக சிக்கலானவையாகவும் செலவு சார்ந்தவையாகவும் மாறி வரும் சூழலில், செயல்திறன் மற்றும் பொறுப்புத்தன்மையை மேம்படுத்துவதில் திட்டமிடுபவர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள்.

சம்பள அளவு : $48,000 – $85,000
தேவை அதிகரிக்கும் காரணம்: அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கு ஒழுங்கான, திறமையான திட்டமிடல் அவசியமாகியுள்ளது.


3. Human Resources Manager NOC: 10011

மனித வள நிர்வாகிகள் பணியமர்த்தல், பணியாளர் திட்டமிடல், சட்ட விதிமுறைகள் மற்றும் ஊழியர் உறவுகளை நிர்வகிக்கிறார்கள். 2026ஆம் ஆண்டில் தொழிலாளர் பற்றாக்குறை,Work from home மற்றும் பணியாளர்களை  தக்கவைத்தல் முக்கிய பகுதிகளாக காணப்படுகின்றன 

சம்பள அளவு : $75,000 – $160,000

தேவை அதிகரிக்கும் காரணம்: திறமையான மனித வளத்தை ஈர்த்து நிர்வகிக்க வலுவான HR தலைமைத்துவம் நிறுவனங்களுக்கு அவசியம்.


4. Logistics Coordinator (NOC 13201)

Logistics Coordinator, பொருட்கள் சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அவர்கள்

  • போக்குவரத்து அட்டவணைகளை திட்டமிடுதல்,
  • சரக்குகள் எவ்வாறு நகர்கின்றன என்பதை கண்காணித்தல்,
  • விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் ஒருங்கிணைத்தல்

ஆகிய பணிகளை செய்து, முழு வழங்கல் சங்கிலி சீராகவும் திறம்படவும் செயல்படுவதை உறுதி செய்கிறார்கள்.

சம்பள அளவு: $62,000 – $122,000
தேவை அதிகரிக்கும் காரணம் : வழங்கல் தொடர் அமைப்பு தன்மை கனடாவின் முக்கியமான பொருளாதார முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது.


5. Marketing Manager NOC: 10022

Marketing Manager நிறுவனத்தின் நல்ல பெயரை உருவாக்கி வளர்ப்பதுடன், விளம்பரப் பிரச்சாரங்களை திட்டமிட்டு செயல்படுத்தி, வாடிக்கையாளர் ஈடுபாட்டை அதிகரிக்கிறார்கள். தரவு அடிப்படையிலான முடிவு எடுக்கும் திறன் பல்வேறு ஊடகங்களில் அனுபவமும் இந்தப் பணிக்கு மிகவும் முக்கியமானவை.

சம்பள அளவு: $62,000 – $125,000

தேவை அதிகரிக்கும் காரணம்: அதிக போட்டி உள்ள சந்தையில், நிறுவனங்கள் தங்களை பிற நிறுவனங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக  Marketing Manager செயல்படுகிறார்கள்.


6. Mechanical Engineer NOC: 21301

Mechanical Engineer உற்பத்தி, போக்குவரத்து, உட்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி துறைகளில் இயந்திர அமைப்புகளை வடிவமைத்து, பராமரிக்கிறார்கள்.

சம்பள அளவு: $68,000 – $132,000
தேவை அதிகரிக்கும் காரணம்: தொழில்துறை வளர்ச்சி மற்றும் உற்பத்தி விரிவாக்கம்போக்குவரத்து திட்டங்களில் அதிகரிக்கும் முதலீடு


7. Financial Analyst  NOC: 11101

நிதி பகுப்பாய்வாளர்கள் நிறுவனத்தின் நிதி தரவுகளை ஆய்வு செய்து,நிதி ஒதுக்கீடு , செலவுகள் மற்றும் வருமானம் தொடர்பான சரியான தீர்மானங்களை எடுக்க உதவுகிறார்கள்.

சம்பள அளவு: $63,000 – $145,000
தேவை அதிகரிக்கும் காரணம்: செலவுக் கட்டுப்பாடு மற்றும் ஆபத்து நிர்வாக திறன் அவசியம்.


8. Pharmacy Assistant  NOC: 33103

Pharmacy Assistant   மருந்துகளை ஒழுங்குபடுத்துதல், வாடிக்கையாளர்களுக்கு மருந்து தொடர்பான அடிப்படை தகவல்களை வழங்குதல் மற்றும் மருந்தாளருக்கு தேவையான உதவிகளை செய்யுதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறார்கள்.

சம்பளம் அளவு: $40,000 – $62,000
தேவை அதிகரிக்கும் காரணம் : தொடர்ந்து அதிகரித்து வரும் சுகாதார தேவைகள்.


9.  Accounting Technician NOC: 12200

Accounting Technician நிறுவனத்தின் நிதி பதிவுகள், கணக்குகள் பராமரிப்பு மற்றும் வரி தொடர்பான செயல்பாடுகளில் முக்கியமான பங்காற்றுகிறார்கள்.

சம்பளம் அளவு: $39,000 – $115,000
தேவை அதிகரிக்கும் காரணம் : சட்ட விதிகளை பின்பற்றுதல் மற்றும் நிதி தெளிவுத்தன்மை.


10. Software Developer  NOC: 21232

Software Developer பயன்படுத்துபவர் தேவைகளுக்கேற்ற மென்பொருள் பயன்பாடுகளை உருவாக்கி பராமரிக்கும் பணிகளை மேற்கொள்கிறார்கள்.

சம்பளம் அளவு: $70,000 – $140,00
தேவை அதிகரிக்கும் காரணம்: தொடர்ச்சியான Digital மாற்றம்.


11. Electrician  NOC: 72200

மின்சார நிபுணர்கள் மின்சார அமைப்புகளை நிறுவுதல், பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்கிறார்கள்.

சம்பளம் அளவு: $55,000 – $80,000
தேவை அதிகரிக்கும் காரணம்:  வீட்டு மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்கள்.


12. DevOps Engineer  NOC: 21320

மென்பொருள் வெளியீட்டு நிர்வாகம் மற்றும் அமைப்பின் நம்பகத்தன்மையை மேம்பாட்டில் முக்கிய பங்காற்றுகின்றனர்.

சம்பளம் அளவு: $70,000 – $135,000
தேவை அதிகரிக்கும் காரணம்:  பாதுகாப்பான, நம்பகமான  digital  அமைப்புகள்.


13. Welder  NOC: 72106

கட்டுமானம், உற்பத்தி மற்றும் போக்குவரத்து துறைகளில் பயன்படுத்தப்படும் உலோக அமைப்புகளை உருவாக்கவும் பழுதுபார்க்கவும் செய்கிறார்கள். அவர்கள் உட்கட்டமைப்பு திட்டங்கள், தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் சிறப்பு உற்பத்தி பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மேம்பட்ட திறன்கள் கொண்ட நிலையான வேலை வாய்ப்புகளும் உயர்ந்த சம்பளமும் பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

சம்பள அளவு: $42,000 – $76,000
தேவை அதிகரிக்கும் காரணம்: தொழில்துறை செயல்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு திறமையான Welder அவசியமாக உள்ளனர்.


14. Nurse  NOC: 31301, 32101

மருத்துவமனைகள் மற்றும் சமூக சுகாதார சேவைகளில் முக்கியமான பங்காற்றுகின்றனர்.

சம்பளம் அளவு: $60,000 – $110,000
தேவை அதிகரிக்கும் காரணம்: நீண்டகால சுகாதார பணியாளர் பற்றாக்குறை.


15. Early Childhood Educator NOC: 42202

அங்கீகரிக்கப்பட்ட குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் ஆரம்பக் கற்றல் திட்டங்களில், ஆரம்பக் குழந்தைப் பருவ கல்வியாளர்கள் குழந்தைகளின் வளர்ச்சியை ஆதரிக்கிறார்கள். குழந்தை பராமரிப்பு சேவைகள் விரிவுபடுத்தப்படுவதால், இந்தத் துறையில் தேவை அதிகமாக உள்ளது; பல மாகாணங்கள் குடியேற்றத் திட்டங்கள் மூலம் இந்தத் தொழிலை இலக்கு வைக்கின்றன.

சம்பளம் அளவு: $38,000 – $65,000
தேவை அதிகரிக்கும் காரணம்: குழந்தை பராமரிப்பு வசதிகள் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடையவை.


2026-ம் ஆண்டுக்கான Canada-வின் அதிக தேவை உள்ள வேலைகள்

  • அதிக தேவை உள்ள துறைகள்: சுகாதாரம், திறமையான தொழில்கள், தொழில்நுட்பம், தொழில்முறை சேவைகள்.
  • அதிக சம்பளம்: HR மேலாளர்கள், நிதி பகுப்பாய்வாளர்கள், Software & DevOps நிபுணர்கள், பொறியாளர்கள்.
  • திறமையான தொழில்கள்: மின்சார தொழிலாளர்கள், Welders இன்னும் முக்கியம்.
  • NOC 2021 மூலம் வேலை மற்றும் குடியேற்றத்திற்கு தகுதியுள்ளதா என்பதை அறிய முடியும்.
  • குடியேற்ற ஒத்திசைவு: Express Entry, PNP, Employer-Supported Work Permit வழிகளில் பல வேலைகள் தகுதி பெறுகின்றன.

In 2026, jobs in Canada are facing a significant long-term labour shortage, especially in healthcare, technology, skilled trades, and professional services. From Administrative Assistants to Software and DevOps Engineers, Nurses, and Welders, many roles remain in consistently high demand. With competitive salaries, strong job security, and clear immigration pathways through Express Entry, Provincial Nominee Programs (PNPs), and employer-supported work permits, these jobs in Canada offer excellent long-term career opportunities for newcomers and residents alike.