புதிய விசா வழிமுறைகளுடன் 2026-இல் New Zealand-ல் குடியேறத் திட்டமிடும் தமிழர்களுக்கு அரிய வாய்ப்பு!

New Zealand அரசு தனது ‘Skilled Migrant Category’ Visa விதிமுறைகளில் மிக முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. வரும் August  24, 2026 முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த புதிய நடைமுறைகள், அங்குTemporary Visa-க்களில் பணிபுரிந்து வரும் மற்றும் புதிதாகக் குடியேற விரும்பும் உலகளாவிய தமிழ் சமூகத்தினருக்கு, குறிப்பாகத் தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு (Trades and Technicians) நிரந்தரக் குடியுரிமை (PR) பெறுவதற்கான நல்வாய்ப்புகளைப் பெருக்கியுள்ளன.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வேலைவாய்ப்பு, குடும்ப எதிர்காலம் மற்றும் பொருளாதாரத் திட்டமிடலை இந்த மாற்றங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ஒரு விரிவான பார்வை இதோ:

புதிய இரண்டு குடியேற்ற வழிமுறைகள்

தற்போதுள்ள புள்ளி அடிப்படையிலான (Points-based) முறைக்குக் கூடுதலாக, இரண்டு புதிய பிரத்யேக வழிமுறைகளை நியூசிலாந்து அரசு அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் புள்ளிகள் பற்றாக்குறையால் தவித்த பலருக்கு நிரந்தரக் குடியுரிமைப் பாதை எளிதாகிறது.

  • Skilled Work Experience Pathway: கல்வித் தகுதி அல்லது வருமானப் புள்ளிகள் குறைவாக இருந்தாலும், நீண்ட காலப் பணி அனுபவத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இனி விண்ணப்பிக்க முடியும். குறிப்பிட்ட வகைப்பாட்டின் கீழ் (ANZSCO Level 1-3) 3 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவமும், New Zealand-ல் நிர்ணயிக்கப்பட்ட சராசரி ஊதியத்திற்கு மேல் (1.1 times the median wage) பெற்று 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவமும் இருந்தால் இந்தத் திட்டத்தில் தகுதி பெறலாம்.
  • தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான வழிமுறை (Trades and Technician Pathway): Plumbing, Electrician, Carpentry  வேலை போன்ற தொழில்நுட்பத் துறைகளில் உள்ள தமிழர்களுக்கு இதுவொரு பொற்காலம். முறையான டிப்ளோமா அல்லது சான்றிதழ் படிப்புடன் (NZQF Level 4 or higher), படிப்பிற்குப் பிந்தைய 2.5 ஆண்டுகள் அனுபவமும், New Zealand-ல் 1.5 ஆண்டுகள் சராசரி ஊதியத்துடன் கூடிய பணி அனுபவமும் இருந்தால் நேரடியாக விசா பெற விண்ணப்பிக்கலாம்.

புள்ளி வழங்கும் முறையில் சாதகமான மாற்றங்கள் (Changes to Points-based Pathway)

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 6-புள்ளிகள் திட்டத்திலும் சில முக்கியத் தளர்வுகள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறைந்த காலப் பணி அனுபவத்திற்கு அதிக புள்ளிகள்: New Zealand-ல் பணிபுரிந்த அனுபவத்திற்கான புள்ளிகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. உதாரணமாக, முன்பு 2 ஆண்டுகள் பணி அனுபவத்திற்கு 2 புள்ளிகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இனி 3 புள்ளிகள் வழங்கப்படும். 1.5 ஆண்டு அனுபவத்திற்கு 2 புள்ளிகள் கிடைக்கும். இதன் மூலம் மிக வேகமாகக் குறிப்பிட்ட 6 புள்ளிகளை எட்ட முடியும்.

வெளிநாட்டுப் படிப்புகளுக்கு அங்கீகாரம்: New Zealand வெளியே (இந்தியா அல்லது பிற நாடுகளில்) இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) அல்லது முதுகலை சான்றிதழ் பெற்றவர்களுக்கான புள்ளிகள் 3-லிருந்து 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Accountants நற்செய்தி: தகுதிவாய்ந்த சட்டரீதியான கணக்காய்வாளராக இருந்து, Australian CPA அமைப்பில் உறுப்பினராக உள்ள கணக்காளர்களுக்கு நேரடியாக 6 புள்ளிகள் வழங்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழ் புலம்பெயர் சமூகத்தினருக்கு ஏற்படும் நேரடித் தாக்கங்கள்

  • குடும்பங்களின் ஸ்திரத்தன்மை: Work Visas இருந்து நிரந்தரக் குடியுரிமைக்கு மாறுவதற்கான கால அவகாசம் குறைவதால், பிள்ளைகளின் கல்வி மற்றும் குடும்பத்தின் எதிர்காலத் திட்டமிடல் இனி நிம்மதியானதாக மாறும்.
  • பொருளாதார வளர்ச்சி மற்றும் ஊதிய உயர்வு (Wage Threshold): புதிய விசாக்களுக்கு விண்ணப்பிக்க  New Zealand சராசரி ஊதியம் (Median Wage) அல்லது அதற்கும் அதிகமான சம்பளம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் ஊழியர்களின் சட்டபூர்வமான வருமான நிலையும், சேமிப்பும் உயரும்.
  • சுயதொழில் புரிவோருக்கான கட்டுப்பாடு: இந்த புதிய குடியேற்ற திட்டங்களில் ‘சுயதொழில்’ (Self-employment) மூலமாகப் பெற்ற பணி அனுபவங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. எனவே, முறையான நிறுவனங்களில் பணிபுரியும் தமிழ் ஊழியர்களுக்கு மட்டுமே இது சாதகமாக அமையும்.

முடிவுரை

இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் August  2026 முதல் அமுலுக்கு வரவுள்ளதால், New Zealand  குடியேற விரும்பும் தமிழர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்களை New Zealand  கல்வித் தகுதி ஆணையத்தின் (NZQA – International Qualification Assessment) மூலம் முன்கூட்டியே மதிப்பீடு செய்து தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது. உங்களது தற்போதைய பணி எந்த வகைப்பாட்டின் (ANZSCO Skill Level) கீழ் வருகிறது என்பதைச் சரிபார்த்து, அதற்கேற்ப பணி அனுபவ ஆவணங்களைச் சேகரிக்கத் தொடங்குங்கள்.

இந்தக் கட்டுரை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. சட்டபூர்வமான அல்லது நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது நிபுணர்களை அணுகுமாறு வாசகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

New Zealand has announced major changes to its Skilled Migrant Category Visa system, effective from August 24, 2026. The new pathways will create more opportunities for skilled professionals and trades workers, including Tamil migrants, to gain Permanent Residency. The changes introduce new routes based on skilled work experience and trades such as plumbing, electrician, and carpentry, while also improving points for New Zealand work experience and overseas qualifications. These reforms aim to make the PR pathway more accessible for eligible migrants while supporting long-term career and family settlement plans.