Australia Awards Scholarship-க்கு விண்ணப்பித்தல்: இலங்கை மாணவர்களுக்கான முழுமையான வழிகாட்டி

இலங்கையின் எதிர்காலத் தலைவர்களாக உருவாக விரும்புகிறீர்களா? Australia-வில் உயர்கல்வி பயில உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? Australia Awards Scholarship தான் உங்களுக்கான சரியான வழி!

இந்த Scholarship மூலம், Australia-வில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கலாம், புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளலாம், மற்றும் உங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கலாம்.

Australia அரசாங்கம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, வறுமையை குறைத்தல் மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக, Australia இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள், குடிமை சமூகத்தை வலுப்படுத்துதல் மற்றும் திறன் மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் இலங்கைக்கு ஆதரவளித்து வருகிறது.

Australia அரசாங்கம், வளரும் நாடுகளின் எதிர்கால தலைவர்களுக்கு உதவுவதற்காக, Australia Awards scholarships என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த Scholarships மூலம், இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் Australia-வில் உயர்கல்வி பயின்று, தங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிக்கத் தேவையான திறன்களைப் பெறலாம்.

இந்த Scholarships மூலம் பெறப்படும் நன்மைகள்:

  • தனிநபர் வளர்ச்சி: மாணவர்கள் தங்கள் கல்வித் திறனை மேம்படுத்திக்கொண்டு, புதிய அறிவைப் பெறலாம்.
  • தலைமைத்துவ குணங்கள்: எதிர்காலத்தில் தலைவர்களாக உருவாக தேவையான திறன்களைப் பெறலாம்.
  • இலங்கையின் வளர்ச்சி: தங்கள் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம்.
  • இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள்: Australia மற்றும் இலங்கை இடையேயான நட்புறவை வலுப்படுத்தலாம்.

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் திறன், தொழில்முறை அனுபவம் மற்றும் இலங்கையின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை நிரூபிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் திறமைகள் இலங்கையின் அபிவிருத்தி சவால்களை எவ்வாறு சமாளிக்க உதவும் என்பதை விளக்க வேண்டும்.

Australia Awards Scholarships விண்ணப்பதாரர்களுக்கான நிபந்தனைகள்

Australia Awards Scholarships-ஐ ஏற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், Australia அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இந்த ஒப்பந்தத்தில், உதவித்தொகையின் நிபந்தனைகள், பொறுப்புகள் மற்றும் கடமைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

முக்கிய நிபந்தனை:
  • இலங்கைக்கு திரும்புதல்: Scholarship காலம் முடிந்த பிறகு, மாணவர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் இலங்கைக்குத் திரும்பி தங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக பங்களிக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளின் நோக்கம்:

  • Australia Awards Scholarships-ன் முக்கிய நோக்கம், வளரும் நாடுகளின் எதிர்கால தலைவர்களை உருவாக்குவதாகும். இந்த நிபந்தனைகள் இந்த நோக்கத்தை அடைக்க உதவும்.
  • உதவித்தொகை பெறுபவர்கள் தங்கள் நாட்டின் மீது கொண்ட பொறுப்புணர்வை வலியுறுத்துதல்.
  • மாணவர்கள் பெற்ற கல்வி மற்றும் அனுபவங்கள் இலங்கையின் நீண்டகால வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்தல்.

இந்த திட்டத்தில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் துறையில் வேலை செய்பவர்கள்  மற்றும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வேலை செய்பவர்கள்  விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

Ampara • Batticaloa • Trincomalee • Jaffna • Kilinochchi • Mullaitivu • Mannar • Vavuniya • Anuradhapura • Polonnaruwa • Badulla • Monaragala • Puttalam • Ratnapura • Nuwara Eliya

Scholarship-ற்கு விண்ணப்பிக்க முன்னுரிமை வழங்கப்படும் கல்வித் துறைகள்

தகுதியான இலங்கை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் கல்வித் துறைகள் பின்வருமாறு:

  • Governance and Public Sector Management (நிர்வாகம் மற்றும் பொதுத்துறை மேலாண்மை)
  • Economic Development (பொருளாதார வளர்ச்சி)
  • Management, Business and Commerce (மேலாண்மை, வணிகம் மற்றும் வர்த்தகம்)
  • Information and Communications Technology (தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்)
  • Gender Equality (பாலின சமத்துவம்)
  • Disability and Social Inclusion (மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக உள்ளடக்கல்)
  • Climate Resilience and Adaptation (காலநிலை மீள்திறன் மற்றும் தழுவல்)
  • Stability and Inclusion including Health, Education, and Political Science (சுகாதாரம், கல்வி மற்றும் அரசியல் அறிவியல் உட்பட ஸ்திரத்தன்மை மற்றும் உள்ளடக்கல்)

Australia மற்றும் இலங்கை அரசாங்கங்கள் இந்த கல்வித் துறைகளை ஒன்றாகத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து, திட்டத்தின் முக்கியத்துவத்தை சரிசெய்கின்றன. முன்னுரிமை கல்வித் துறைகள் பற்றிய மேலும் விரிவான தகவல்களை Home – Sri Lanka – Australia Awards Website-ல் படிக்கவும்.

கல்வி நிலை

  • Australia Awards Scholarships, இலங்கை மாணவர்களுக்கு Australia உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை வழங்குகின்றன.
  • 2026 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கக்கூடிய படிப்புக்காக பின்வரும் ஒதுக்கீடுகளுக்குள் Awards வழங்கப்படும்:
  • Master’s by coursework or research
  1. Coursework மூலம் Master’s: இதில் மாணவர்கள் பல்வேறு பாடங்களை படித்து தேர்வு எழுதி பட்டம் பெறுவார்கள்.
  2. Research மூலம் Master’s: இதில் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் Research செய்து ஆய்வறிக்கை சமர்ப்பித்து பட்டம் பெறுவார்கள்.
இந்த இரண்டு வகையான Master’s படிப்புகளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள்:
  • பாடத்திட்டம்: Coursework மூலம் Master’s படிப்பில் பல பாடங்களை படிக்க வேண்டும். Research மூலம் Master’s படிப்பில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஆழமாக ஆராய வேண்டும்.
  • மதிப்பீடு: Coursework மூலம் Master’s படிப்பில் தேர்வுகள், அறிக்கைகள் போன்றவற்றின் மூலம் மதிப்பீடு செய்யப்படுவார்கள். Research மூலம் Master’s படிப்பில் ஆய்வறிக்கை மூலம் மதிப்பீடு செய்யப்படுவார்கள்.
  • கால அளவு: Coursework மூலம் Master’s படிப்பு பொதுவாக குறைந்த கால அளவு கொண்டது. Research மூலம் Master’s படிப்பு அதிக கால அளவு கொண்டது.
  • திறன்கள்: Coursework மூலம் Master’s படிப்பு அறிவு சார்ந்த திறன்களை வளர்க்கிறது. Research மூலம் Master’s படிப்பு ஆராய்ச்சி(Research) செய்யும் திறன்களை வளர்க்கிறது.
எந்த வகையான Master’s படிப்பு உங்களுக்கு ஏற்றது என்பதைத் தேர்வு செய்யும் போது பின்வரும் காரணிகளை கருத்தில் கொள்ளலாம்:
  • உங்கள் ஆர்வங்கள்: நீங்கள் எந்த துறையில் ஆர்வம் கொண்டுள்ளீர்கள்?
    • உங்கள் இலக்குகள்: நீங்கள் எதிர்காலத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?
    • உங்கள் திறமைகள்: உங்களுக்கு எந்தெந்த திறமைகள் உள்ளன?
    • நீங்கள் எப்படி கற்க விரும்புகிறீர்கள்?

Australia Awards Scholarships-ன் நன்மைகள்

Australia Awards Scholarships, மாணவர் தேர்ந்தெடுத்த படிப்பை முடிக்க தேவையான குறைந்தபட்ச காலத்திற்கு வழங்கப்படும். இதில், படிப்பைத் தொடங்குவதற்கு முன்பு தேவைப்படும் எந்தவொரு மேலதிக பயிற்சி காலமும் அடங்கும்.

உதாரணமாக: ஒரு மாணவர் 2 வருட Master’s படிப்பிற்கு விண்ணப்பித்து Scholarships பெற்றால், அவர் அந்த படிப்பை முடிக்க 2 வருடங்கள் Scholarships பெறுவார். மேலும், அந்த படிப்பைத் தொடங்குவதற்கு முன்பு ஆங்கில மொழி பயிற்சி தேவைப்பட்டால், அந்த காலமும் Scholarships-ல் சேர்க்கப்படும்.

Scholarships பெறுபவர்கள் பின்வருவனவற்றைப் பெறுவார்கள்:
  • Australia சென்று பின்னர் திரும்பி வர பயன்படுத்தும் விமான பயணம் வழங்கப்படும். (Return Air Travel)
  • புதிதாக Australia-க்கு சென்றவுடன் மாணவர்களுக்கு, ஒரே தடவையில் நிதி உதவி வழங்கப்படும்.
  • முழு கல்விக் கட்டணம்.
  • வாழ்வாதாரச் செலவுகளுக்கு பங்களிப்பு.
  • Introductory Academic Program-
    பொதுவாக ஒரு கல்வி நிறுவனத்தில் புதிய மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கம்:
    • புதிய மாணவர்களை வரவேற்பது மற்றும் புதிய சூழலுக்கு மாணவர்களை பழக்கப்படுத்துதல்.
    • பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் வளாகம், நூலகம், ஆய்வகங்கள் போன்றவற்றை அறிமுகம் செய்தல்.
    • கல்வி முறைகள், விதிமுறைகள், தேர்வு முறைகள் போன்றவற்றை விளக்குதல்.
    • ஆய்வு திறன்கள், குழுச்செயல்பாடுகள், தகவல் தொடர்பு திறன்கள் போன்றவற்றை மேம்படுத்துதல்.
    • கல்வி மற்றும் வாழ்க்கை சார்ந்த ஆலோசனைகள் வழங்குதல்.
  • Scholarships பெறுபவர்கள் Australia-வில் தங்கியிருக்கும் காலத்தில் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும். Overseas Student Health Cover (OSHC)
  • தனித்துவமான கல்வி தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மேலதிக உதவிகள் வழங்கப்படும்.
  • தங்கள் படிப்பின் ஒரு பகுதியாக கட்டாயமாக  Research மேற்கொள்ள வேண்டிய முதுகலை(Masters) மாணவர்கள். Research செய்யும் போது ஏற்படும் செலவுகளை ஈடுசெய்ய நிதி உதவி வழங்கப்படும். 

Australia Awards scholarships விண்ணப்பிக்க தகுதி அளவுகோல்கள்

விண்ணப்பதாரர்கள் Australia Awards Scholarships கொள்கை கையேட்டில்(Policy Handbook) விரிவாகக் கூறப்பட்டுள்ள அனைத்து தகுதித் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

01. Policy Handbook-ல் உள்ள நாடு சார்ந்த நிபந்தனைகள்

தகுதித் தேவைகளுக்கு மேலதிகமாக, இலங்கையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • Australia Awards Scholarships-க்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், Australia Awards Scholarships கொள்கை கையேட்டில் (Policy Handbook) குறிப்பிடப்பட்டுள்ள ஆங்கில மொழித் தேவைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் மற்றும் புள்ளிகள் நீங்கள் தேர்ந்தெடுத்த கல்வித் திட்டத்தின் ஆரம்பத் திகதி வரை செல்லுபடியாகும் மற்றும் உங்கள் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • முன்னுரிமை மாவட்டங்களில் வேலை செய்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறையில் வேலை செய்பவர்கள் Australia Awards Scholarships-க்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் IELTS தேர்வில் குறைந்தபட்சம் 6.0 Band பெற்றிருக்க வேண்டும்.  IELTS தேர்வில் எந்த பிரிவிலும் 5.0 க்கும் குறைவான Band இருக்கக்கூடாது. Scholarships கிடைத்தால், படிப்பைத் தொடங்குவதற்கு முன் IELTS 6.5 அல்லது அதற்கு சமமான வேறு ஏதேனும் ஆங்கில மொழித் தேர்வு மதிப்பெண்ணை பெற்றிருக்க வேண்டும்.
  • வேலைவாய்ப்பு பெற்றிருக்க வேண்டும் மற்றும் பின்வரும் அளவுகோல்கள் வேலைவாய்ப்பு கடிதத்தால் உறுதி செய்யப்பட வேண்டும்:
    • விண்ணப்பதாரர்கள் பொதுத்துறையில்(Public Sector) குறைந்தது 3 ஆண்டுகள் வேலை அனுபவம் (Post Qualification Experience) பெற்றிருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் கல்வி தொடர்பான துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் தற்போது பொதுத்துறையில்(Public Sector) வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். 2026 இல் தொடங்கும் படிப்புக்கான Australia Awards Scholarships-த் தகவல்.
    • தனியார் துறை(Private Sector) மற்றும் சமூக சேவை நிறுவனங்களில் இருந்து விண்ணப்பிப்பவர்கள் தெரிவு செய்த கல்வி தொடர்பான துறையில் குறைந்தபட்சம் 3 வருடங்கள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் Australian Bachelor’s Degree-க்கு சமமான மூன்றாம் நிலை கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட படிப்பிற்கு விண்ணப்பிக்கும் நபர், அந்தப் படிப்பு தொடர்பான பாடப்பகுதிகளில் ஏற்கனவே அறிவு அல்லது தொழில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
  • விண்ணப்ப முடிவு திகதியில் இருந்து முந்தைய 24 மாதங்களில் Australia அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட (Australia Awards Short Courses, Fellowships and Australian Professional வாய்ப்புகள் உட்பட) வாய்ப்பை பெற்றிருக்கக்கூடாது.

02. Policy Handbook-ல் உள்ள முக்கிய நிபந்தனைகள்

  • Australia Awards Scholarships-க்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்துறை ஊழியர்கள், புறப்படுவதற்கு முன், அவர்களின் அதிகாரப்பூர்வ Leave Approval Document-ன் நகலை Australia Award அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  • Australia Award பெற்ற மாணவர்கள், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும். தங்கள் Scholarships முடித்த பிறகு குறைந்தபட்சம் 2 வருடங்களுக்கு இலங்கைக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், பெற்ற Scholarships தொகையை Australia அரசாங்கத்திற்கு திருப்பிச் செலுத்த வேண்டும்.
  • Australia Awards Scholarships-ஐ ஏற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், Australia Awards Scholarships-ன் நிபந்தனைகளுக்கு இணங்குவதாக அறிவித்து, Australia Commonwealth உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.
  • ஒரு மாணவர் இலங்கையில் Degree பட்டம் பெற்றுள்ளார் என்றால், அவர் இலங்கையில் பெற்ற பட்டம் Australia-வில் பெறப்படும் Degree-ற்கு சமமாக இருந்தால், அவர் Degree படிப்பிற்கான Australia Awards Scholarship-க்கு விண்ணப்பிக்க முடியாது.
    Scholarships will not be available for courses of study in Australia where the applicant has already achieved that qualification and the qualification is deemed to be equivalent to the Australian qualification.
  • Australia Awards Scholarship திட்டம், இலங்கையைச் சேர்ந்த அனைத்து Scholarships பெறுபவர்களிடமிருந்தும் முந்தைய கற்றலுக்கான அங்கீகாரத்தைக் கோரும். இந்தக் கோரிக்கை வழங்கப்பட்டால், பெறுநர் அவர்கள் முதலில் விண்ணப்பித்ததை விடக் குறைந்த கால அளவைக் கொண்ட பட்டப்படிப்புத் திட்டத்தில் வைக்கப்படலாம்.

விண்ணப்ப திகதிகள்

2026 ஆம் ஆண்டில் Australia-வில் தொடங்கும் படிப்பு:

  • Open Date: February 1, 2025
  • Closing Date: April 30, 2025 (11:59PM AEST)

கடைசி திகதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும்/அல்லது துணை ஆவணங்கள் பரிசீலிக்கப்படாது.

விண்ணப்ப செயல்முறை

Online விண்ணப்பங்கள்

அனைத்து விண்ணப்பங்களும் OASIS மூலம் Online-ல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

துணை ஆவணங்கள்

விண்ணப்பதாரர்கள் Australia Awards Scholarship கொள்கை கையேட்டில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தொடர்புடைய துணை ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இலங்கைக்கு குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களையும் வழங்க வேண்டும்.

தேவையான ஆவணம்OASIS ஆவண வகைசான்றளிக்கப்பட்டதா?(Certified)
Tertiary degree certificates Degree CertificateYes
Academic grades for university qualificationsAcademic TranscriptYes
Passport/National ID/Driving licenceProof of citizenshipYes
Curriculum Vitae (CV) *Other DocumentNo
Development Impact and Linkages Plan (DILP) document* Other DocumentNo
Certificates of special achievement or merit Other DocumentNo
English language test (IELTS, TOEFL or PTE) results certificate valid on 1 January 2026 Other DocumentNo
Employment Letter* Other DocumentNo
COURSEWORK MASTER APPLICANTS: One academic referee report and one professional referee report (e.g. a work supervisor with referee’s seal)*Referee ReportNo
RESEARCH MASTER APPLICANTS: two academic referee reports and one professional referee report (e.g. a work supervisor with referee’s seal)* Referee ReportNo
RESEARCH MASTER APPLICANTS: a research proposal. This proposal must include a proposed methodology, timeline, and a brief literature review (Guideline available*) Other DocumentNo
RESEARCH MASTER APPLICANTS: Identify 2 supervisors from each of your nominated institutions and include details with your application Other DocumentNo
Any other document you wish to upload ensuring your eligibilityOther DocumentNo
*Template/documents available at: http://australiaawardssrilanka.org

குறிப்புகள்:

  • சான்றளிப்பு தேவைப்படும் ஆவணங்களுக்கான சான்றளிப்பு தேவைகளுக்கு Australia Awards Scholarship கொள்கை கையேட்டைப் பார்க்கவும். ஒரு ஆவணம் ஆங்கிலத்தில் இல்லையென்றால், மொழிபெயர்க்கப்பட்ட நகலும் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • வெவ்வேறு வடிவங்களில் உள்ள நடுவர் அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது மற்றும் விண்ணப்பங்களைத் தகுதியற்றதாக்கலாம். பரிந்துரை தேவைகளைத் தெளிவுபடுத்த, Australia Awards இலங்கை & மாலைத்தீவுகள் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

தேர்வு செயல்முறை

  • தகுதி சரிபார்ப்புக்குப் பிறகு விண்ணப்பங்கள் குறுகிய பட்டியலில் சேர்க்கப்படும்.
  • குறுகிய பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே தொடர்பு கொள்ளப்படுவார்கள்.
  • தேர்வு செயல்முறையில் ஒரு நேர்காணல் அடங்கும். விண்ணப்பதாரர்கள் பின்வரும் அளவுகோல்களுக்கு எதிராக மதிப்பீடு செய்யப்படுவார்கள்:
    • கல்வித் திறன்
    • சாத்தியமான விளைவு, குறிப்பாக இலங்கையில் வளர்ச்சி விளைவுகளுக்கு பங்களிப்பு.
    • தொடர்புடைய பணி அனுபவம் உட்பட தொழில்முறை மற்றும் தனிப்பட்ட தலைமை பண்புகள்.
  • வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு 2025 இன் பிற்பகுதியில் அறிவிக்கப்படும்.
  • விருது பெற்றவர்களின் பயணம், Australia அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகம் மற்றும் தொடர்புடைய Australia மாநிலம் அல்லது பிரதேச அரசாங்கங்களால் விதிக்கப்படும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உட்பட்டது.

Australia செல்ல முன் தேவையான முன்னேற்பாடு

வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் பின்வரும்வற்றில் கலந்துகொள்ள வேண்டும்:

  • படிப்பு ஆலோசனை: உங்கள் படிப்பு தொடர்பான எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிக்க உங்களுக்கு உதவும் ஒரு வழிகாட்டி. இது உங்கள் படிப்புத் திட்டம், பாடங்கள், தேர்வுகள் மற்றும் பலவற்றைப் பற்றிய தகவல்களை வழங்கும்.
  • Australia செல்ல முன் தேவையான விளக்கவுரை: Australia-வில் வாழ்க்கை மற்றும் படிப்பு பற்றிய முக்கிய தகவல்களை வழங்கும் ஒரு அமர்வு. இது Visa, வசிப்பிடம், பாதுகாப்பு மற்றும் பிற நடைமுறை விஷயங்களை உள்ளடக்கும்.
  • பல்கலைக்கழகத்தின் அறிமுக கல்வித் திட்டம்: உங்கள் பல்கலைக்கழகத்தில் வாழ்க்கை மற்றும் படிப்பு பற்றி அறிமுகப்படுத்தும் ஒரு திட்டம். இது பல்கலைக்கழக வளாகம், நூலகம், கணினி ஆய்வகங்கள் மற்றும் பிற வசதிகளைப் பார்வையிட உங்களுக்கு உதவும்.
  • Australia-வில் வந்தவுடன் தேவையான ஆயத்தப்படுத்துவதற்க்கான கல்வி: Australia-வில் உங்கள் படிப்பை வெற்றிகரமாக முடிக்க உங்களுக்குத் தேவையான மேலதிக திறன்களை வழங்கும் ஒரு திட்டம். இது ஆங்கில மொழி பயிற்சி, கணினி திறன் பயிற்சி அல்லது பிற தொழில்நுட்ப திறன் பயிற்சி போன்றவற்றை உள்ளடக்கலாம்.

மேலும் தகவல்கள்

Australia Awards – இலங்கை பற்றிய தகவல்களை Home – Sri Lanka – Australia Awards-ல் காணலாம்.

Australia Awards, Australia-வின் உதவித் திட்டம் மற்றும் Australia-வில் படிப்பது பற்றிய பொதுவான தகவல்களை பின்வரும் இணைப்புகளில் காணலாம்:

Visas மற்றும் Australia Awards scholarship உரிமைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த தகவல்களை Australia Awards Scholarships Policy Handbook – ல் காணலாம்.

இது Australia Awards Scholarship-க்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள இலங்கை மாணவர்களுக்கான விரிவான வழிகாட்டியாகும். கல்வி மற்றும் தொழில்முறை மேம்பாடு, இலங்கையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட Scholarship-ன் நன்மைகளை இது எடுத்துக்காட்டுகிறது. விண்ணப்ப செயல்முறை, தகுதி அளவுகோல்கள், தேவையான ஆவணங்கள் மற்றும் தேர்வு செயல்முறை ஆகியவற்றை வழிகாட்டி எடுத்துக் காட்டுகிறது. Scholarship-ஐ முடித்த பிறகு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்கு இலங்கைக்குத் திரும்புவதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. மேலதிகமாக, முன்னுரிமை கல்வித் துறைகள், Scholarship நன்மைகள் மற்றும் ஆயத்தப் பயிற்சி பற்றிய தகவல்களை இது வழங்குகிறது. விண்ணப்பக் கடைசி திகதி April 30, 2025, மேலும் அனைத்து விண்ணப்பங்களும் OASIS மூலம் Online-ல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Australia Awards Scholarship: This comprehensive guide is for Sri Lankan students looking to apply and secure this prestigious opportunity. It highlights the scholarship’s benefits, including academic and professional development, contribution to Sri Lanka’s growth, and fostering relationships between the two countries. The guide outlines the application process, eligibility criteria, required documents, and selection process. It emphasizes the importance of returning to Sri Lanka for at least two years after completing the scholarship to contribute to the country’s development. Additionally, it provides information on priority study areas, scholarship benefits, and preparatory training. The application deadline is April 30, 2025, and all applications must be submitted online through OASIS.